ஓடிடியில் வரவேற்பு பெரும் விமலின் ‘விலங்கு’ வெப் சீரிஸ் – டிவியில் ஒளிபரப்பாகிறது

நடிகர் விமல் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள கிரைம் த்ரில்லர் ‘விலங்கு’ வெப் தொடர், வரும் ஞாயிற்றுக்கிழமை ஜீ தமிழ் டிவியில் ஒளிப்பரப்பாக உள்ளது. இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில், விமல் நடிப்பில் ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் வெளியாகியுள்ள வெப் தொடர் ‘விலங்கு’. எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் சார்பில் மதன் தயாரித்துள்ள இந்த வெப் தொடரில் இனியா, முனிஷ்காந்த், பாலசரவணன், ரேஷ்மா, ஆர்.என்.ஆர் மனோகர் ஆகியோர் நடித்துள்ளனர். அஜீஷ் இசையமைக்க, கணேஷ் படத்தொகுப்பு செய்ய, தினேஷ் புருஷோத்தம்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். … Read more

ஓமலூர்: ஒரே நேரத்தில் இரண்டு காதல் ஜோடிகள் காவல் நிலையத்தில் தஞ்சம்

ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரே நேரத்தில் இரண்டு காதல் ஜோடிகள் தஞ்சமடைந்ததால் பரபரப்பு எற்பட்டது. ஓமலூர் அருகேயுள்ள ரக்கிப்பட்டியைச் சேர்ந்த இளைஞர் தருமபுரியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டு, பெண் வீட்டார் கொலை மிரட்டல் விடுப்பதாக ஓமலூரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதேபோல காமலாபுரத்தைச் சேர்ந்த காதல் ஜோடி திருமணம் செய்துகொண்டு, இரு வீட்டாரும் மிரட்டல் விடுப்பதாக புகார் தெரிவித்தனர். இந்நிலையில் காவல் ஆய்வாளர் இந்திரா, இரண்டு காதல் … Read more

சமந்தாவின் 'அரபிக் குத்து' டான்ஸ்… வைரல் வீடியோ

‘பீஸ்ட்’ படத்தின் ‘அரபிக் குத்து’ பாடலுக்கு ஆட்டம் போட்டு ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார் நடிகை சமந்தா. நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. இப்படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயனின் பாடல் வரிகளில், அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி இணைந்து பாடிய  ‘அரபிக் குத்து’ பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து பிரபலம் அடைந்திருக்கிறது. மேலும் யூடியூபில் விரைவாக அதிக பார்வைகளைப் பெற்ற தமிழ் பாடலாகவும் இப்பாடல் புதிய சாதனையைப் படைத்துள்ளது.   … Read more

தனுஷ்கோடிக்கு படையெடுக்கும் பட்டாம் பூச்சிகள்: பூங்கா அமைத்து பாதுகாக்க கோரிக்கை

தனுஷ்கோடியில் குவிந்து வரும் வண்ணத்துப் பூச்சிகளை, பூங்கா அமைத்து பாதுகாக்க இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்தின் கடைக்கோடி எல்லையான தனுஷ்கோடி பகுதிக்கு நாள்தோறும் வெளிமாவட்ட மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடியில் உள்ள புயலால் அழிந்த கட்டடங்களை பார்த்து கடலின் அழகை ரசித்துச் செல்கின்றனர். இந்த நிலையில் கடற்கரையில் அதிகப்படியான எருக்கன் செடிகள் வளர்ந்துள்ளது. அதில் நூற்றுக்கணக்கான வண்ணத்துப் பூச்சிகள் வலசை வருவதுபோல் ஒன்றன்பின் ஒன்றாக வந்து எருக்கன் செடியில் அமர்ந்து ஒய்யாரமா ஓய்வெடுத்து … Read more

காவி கொடி குறித்து சர்ச்சை பேச்சு: சட்டப்பேரவைக்குள் உறங்கி காங்., எம்.எல்.ஏ.க்கள் தர்ணா

கர்நாடகாவில் காவி கொடி தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த அமைச்சர் ஈஸ்வரப்பா பதவியில் இருந்து விலகக்கோரி, சட்டப்பேரவைக்குள் உறங்கி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்தினர். முன்னதாக கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா, “டெல்லி செங்கோட்டையில், ஒரு நாள் மூவர்ண கொடிக்கு பதிலாக காவி கொடி பறக்கும்” என அண்மையில் பேசியிருந்தார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு காங்கிரஸ் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஈஸ்வரப்பா பதவி விலகக் கோரி, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் கர்நாடக … Read more

சரத்குமார் நடிப்பில் 'இரை' வெப் சீரிஸ்

சமூக அவலங்களை வெளிக்கொண்டுவரும் படைப்பாக ‘இரை’ இணையத்தொடர் இருக்கும் என்று நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். தூங்காவனம், கடாரம்கொண்டான் ஆகிய படங்களை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா, தற்போது ‘இரை’ என்ற இணையத்தொடரை இயக்கியுள்ளார். ராதிகா சரத்குமார் தயாரித்திருக்கும் அந்த இணையத் தொடரில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆஹா ஓ.டி.டி. தளத்தில் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போதைய சூழலில் குழந்தைகளுக்கு என்ன நடக்கும்? நடக்கிறது? என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் இரை இணையத்தொடர் இருக்கும் என்று … Read more

இந்திய சிறைகளில் இருந்த 12 பாகிஸ்தான் கைதிகள் விடுதலை

இந்தியச் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 12 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் தொடர் கோரிக்கைகளின் காரணமாக, இந்தியாவின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 12 பேரை விடுதலை செய்ய மத்திய அரசு ஒப்புக்கொண்டது. பாகிஸ்தானைச் சேர்ந்த 6 மீனவர்கள் உள்ளிட்ட 12 பேர், தனி வாகனம் மூலம் வாகா எல்லை வரை கொண்டுசெல்லப்பட்டு, அந்நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் 80 வயது முதியவர் ஆவார். சிறைகளிலிருந்து விடுதலையாகி தாய் மண்ணில் கால் பதித்த … Read more

திருவள்ளூர்: ஆஸ்ரமம் சென்ற கல்லூரி மாணவி உயிரிழப்பு – நீதிவேண்டி ஆட்சியரிடம் தந்தை மனு

திருவள்ளூரில் பூஜைக்காக ஆஸ்ரமம் சென்ற கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் நியாயம் கிடைக்க வேண்டியும், பூசாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் உயிரிழந்த மாணவியின் உறவினர், திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஆட்சியர் காலில் விழுந்து கதறினர். திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அடுத்த வெள்ளாத்துக்கோட்டை பகுதியில் உள்ள கோயிலுக்கு செம்பேடு பகுதியைச சேர்ந்தவர் ஹேமமாலினி(20). கல்லூரி மாணவியான இவர், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த 13-ஆம் தேதி நள்ளிரவு பூஜைக்காக கோயிலுக்கு சென்றுள்ளார். மறுநாள் 14-ஆம் தேதி அதிகாலையில் … Read more

லீ மெரிடியன் ஓட்டலை எம்.ஜி.எம். நிறுவனம் கையகப்படுத்தும் திட்டம் ரத்து-தீர்ப்பாயம் உத்தரவு

லீ மெரிடியன் உள்ளிட்ட அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் சொத்துக்களை, ரூ.423 கோடி ரூபாய்க்கு எம்.ஜி.எம். ஹெல்த்கேர் நிறுவனத்தின் எம்.கே.ராஜகோபாலனுக்கு வழங்கும் நடவடிக்கைகளை, தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ரத்து செய்துள்ளது. பிரபல தொழிலதிபர் பழனி ஜி பெரியசாமியின் அப்பு ஹோட்டல் நிறுவனம், இந்திய சுற்றுலா நிதி நிறுவனத்திடம் வியாபார நடவடிக்கைகளுக்காக கடன் பெற்று இருந்தது. அந்த கடனை திருப்பி செலுத்தவில்லை என்பதால் அப்பு ஹோட்டல் நிறுவனம் திவாலானதாக கருதி, சென்னை மற்றும் கோவையில் உள்ள லீ … Read more

‘சார்’ என்று அழைத்த வழக்கறிஞர்; சூடாக பதிலடி கொடுத்த பெண் நீதிபதி – வைரலாகும் பதிவு

பெண் நீதிபதியைப் பார்த்து ‘சார்’ என்று வழக்கறிஞர் திரும்ப திரும்ப அழைத்ததும், அதன்பின்பு இருவருக்கும் நிகழ்ந்த சூடான விவாதத்தால், டெல்லி உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு நிலவியது. ஆணுக்கு பெண் சமம் என்று என்னதான் சட்டம் இயற்றினாலும், சமுதாயத்தில் பாலின பாகுபாடுகள் அதிகரித்துத்தான் காணப்படுகின்றன. அது, குடும்பத்தில் பாசம், சொத்து ஆகட்டும், பணியிடத்தில் பதவி, சம்பாத்தியம் ஆகட்டும், அரசு, அரசியல் பதவிகளில் இட ஒதுக்கீடு ஆகட்டும், பல சவால்களையும், சிக்கல்களையும் கடந்த பின்பே ஓரளவுக்கு உயர்வான இடத்தை அடைய முடிகிறது. … Read more