"சொம்பைக் கொடுத்து அண்டாவை திருடுபவர்கள் திமுகவினர்" – உசிலம்பட்டி எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

சொம்பைக் கொடுத்து அண்டாவை திருடுபவர்கள் திமுகவினர் என்று உசிலம்பட்டி அதிமுக வேட்பாளர் பிரசாரத்தில் பேசியுள்ளார்.  மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நகராட்சி தேர்தலை முன்னிட்டு அதிமுக கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். உசிலம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளில் பிப்ரவரி 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பல்வேறு கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று கடைசி நாள் என்பதால் அதிமுக கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதில் உசிலம்பட்டியில் சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஐயப்பன் உசிலம்பட்டி … Read more

கேட்பாரற்று கிடந்த பையில் வெடிகுண்டு கண்டெடுப்பு – டெல்லியில் பரபரப்பு

டெல்லி பழைய சீமாபுரியில், கேட்பாரற்று கிடந்த பையில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. டெல்லியின் பழைய சீமாபுரி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சந்தேகத்திற்கிடமான பையில் வெடிகுண்டு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தினர். இதையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் காஜிபூர் பகுதியில் பூ மார்க்கெட்டில் கிட்டத்தட்ட 3 கிலோ வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. A suspicious bag was found on the road … Read more

இந்தோனேஷிய மொழியில் ரீமேக் ஆகும் முதல் தமிழ் படம் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’

நடிகர் பார்த்திபனின் ’ஒத்த செருப்பு சைஸ் 7’ இந்தோனேஷியவின் ’பஹாசா’ மொழியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ விமர்சன ரீதியில் வரவேற்பையும் பாராட்டுக்களையும் குவித்தது. ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே ஒட்டுமொத்த திரைப்படத்திலும் தோன்றும் வகையிலான திரைக்கதையை அமைத்து நடித்தது மட்டுமல்லாமல், அந்தப் படத்தை பார்த்திபனே இயக்கியும் தயாரித்தும் இருந்தார். பார்த்திபனின் இந்த முயற்சிக்கு ’ஸ்பெஷல் ஜூரி’ தேசிய விருது, ரசூல் பூக்குட்டிக்கும் … Read more

பெங்களூரு விமான நிலையத் தாக்குதல் – நடிகர் விஜய் சேதுபதி மீது நடவடிக்கை எடுக்கத் தடை

பெங்களூரு விமான நிலைய தாக்குதல் சம்பவத்தில், நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த நடிகர் மகா காந்தி, கடந்த நவம்பர் 2-ம் தேதி இரவு, பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை எதிர்பாராத விதமாக சந்தித்தபோது, அவரின் சாதனைகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்ததாகவும், ஆனால் தனது வாழ்த்துகளை ஏற்க மறுத்த விஜய் சேதுபதி, பொதுவெளியில் தன்னை இழிவுபடுத்தி பேசியதுடன், தன்னையும் தனது சாதியையும் … Read more

விமர்சன கணைகளை வீசி வந்த சந்திர சேகர ராவ்; பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

தெலங்கானா மாநில முதல்வர் சந்திர சேகர ராவின் 68வது பிறந்தநாளையொட்டி, அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.  தெலங்கானா முதல்வரும், ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தலைவருமான சந்திர சேகர ராவுக்கும், பாஜகவுக்கும் இடையே  அண்மை காலமாக வார்த்தைப் போர் நிலவி வருகிறது. கடந்த பிப்.5ஆம் தேதி ராமானுஜர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக, தெலங்கானா வந்திருந்தார் பிரதமர் மோடி. ஆனால் அவரை வரவேற்பதற்கு சந்திர சேகர ராவ் செல்லவில்லை. உடல்நிலையை காரணம் காட்டி புறக்கணித்தார். … Read more

'ஆகஸ்டில் படப்பிடிப்பு: பொங்கலுக்கு ரிலீஸ்’: ’ரஜினி 169’ அப்டேட்

’ரஜினி 169’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் துவங்கவுள்ளது. ‘அண்ணாத்த’ படத்திற்குப்பிறகு ரஜினியின் அடுத்தப் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். ரஜினியின் 169 வது படமாக உருவாகும் இப்படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதற்கான அறிவிப்பு கடந்த வாரம் வெளியானாலும் இன்னும் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் ‘ரஜினி 169’ படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. தற்போது போஸ்ட் புரொடொக்‌ஷன் பணிகள் … Read more

கீழடியில் செவ்வக வடிவில் தந்தத்தினால் ஆன பகடைக்காய் கண்டுபிடிப்பு!

சிவகங்கை மாவட்டம் கீழடி எட்டாம் கட்ட அகழ்வாய்வில் செவ்வக வடிவிலான, தந்தத்தினால் ஆன பகடைக்காய் கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளது. தமிழர் நாகரிகத்தின் தொன்மையையும், பெருமையையும் உலகத்திற்கு உணர்த்தும் வகையில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கீழடியில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 2015-ம் ஆண்டு முதல் கீழடி, அகரம், மணலூர், கொந்தைகை ஆகிய 4 இடங்களில் மத்திய மற்றும் மாநில தொல்லியல் துறை சார்பாக 7 கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளன. இதுவரை நடந்த 7 கட்ட … Read more

இந்த ஊழியர்களுக்கு ஜாக்பாட் – எந்தெந்த துறைகளில் இந்தாண்டு சம்பள உயர்வு இருக்கும்?

இந்தியாவில் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு கார்ப்பரேட் துறை ஊழியர்களுக்கு, 9.9% சம்பள உயர்வு கிடைக்கலாம் என்று ஆய்வறிக்கை கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. அயோன் இந்தியா (Aon India) ஆய்வு நிறுவனம், தனது 26-வது வருடாந்திர சம்பள உயர்வு கணக்கெடுப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2022-ம் ஆண்டில் சம்பள உயர்வானது 9.9% ஆக அதிகரிக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சம்பள உயர்வு கிடைக்கலாம் என தெரியவந்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 9.3% ஆக இருந்தது.  … Read more

அந்நியனுக்குப் பிறகு விக்ரமை சரியாக பயன்படுத்தியுள்ளீர்கள் கார்த்திக்: அல்போன்ஸ் புத்திரன்

விக்ரமின் ‘மகான்’ படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினரைப் பாராட்டியுள்ளார் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் – துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள ‘மகான்’ கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சிம்ரன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்த நிலையில், ‘பிரேமம்’ இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “’மகான் புத்திசாலியான படம். அந்நியனுக்குப் … Read more

'என்னயா பிடிக்க வர?' – தீயணைப்பு துறை வீரரை கடித்த பாம்பு

புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை அண்ணா பண்ணை விவசாய கல்லூரிக்குள் புகுந்த மலைப்பாம்பை பிடித்த நிலைய அலுவலரின் கையை கடித்தது. ஒரே இரவில் 3 மலைபாம்புகள் பிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகேயுள்ள அண்ணா பண்ணை விவசாய கல்லூரிக்குள் மலைப்பாம்பு ஒன்று புகுந்ததாக தீயணைப்பு நிலையத்திற்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற தீயணைப்புத் துறையினர் கல்லூரி வகுப்பறையின் ஓரத்தில் பதுங்கியிருந்த மலைப்பாம்பை பிடித்தனர். அப்போது அந்த மலைப்பாம்பு தீயணைப்பு நிலைய அலுவலரான கணேசன் என்பவரின் கட்டை … Read more