சித்ரா ராமகிருஷ்ணனுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை

தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணனுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மும்பையிலுள்ள தேசிய பங்குச்சந்தையின் தலைமை அலுவகத்தில் தலைமை அதிகாரியாக பணியாற்றியவர் சித்ரா ராமகிருஷ்ணன். அப்போது தேசிய பங்குச்சந்தையில் முறைகேடாக பதவி உயர்வு, சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் மட்டுமன்றி coal allocation scam என்று சொல்லக்கூடிய பல இடைத்தரகர்கள் பயனடையும் வகையில் பங்குச்சந்தையின் விதிமுறைகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, ஏற்கெனவே … Read more

பிரபல மலையாள நடிகர் கோட்டயம் பிரதீப் காலமானார்

பிரபல மலையாள நடிகர் கோட்டயம் பிரதீப் மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 61. 2001-ஆம் ஆண்டு ஐ.வி சசி இயக்கிய ‘ஈ நாடு இன்னலே வரே’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான கோட்டயம் பிரதீப் பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். 2010-ஆம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத்தொடர்ந்து, ‘ராஜா ராணி,’ ‘நண்பேன்டா’, ‘தெறி’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் கோட்டயம் பிரதீப் நடித்துள்ளார். … Read more

ஓட்டுக்காக டாஸ்மாக்ல நின்னு சரக்கு விக்காத குறைதான்!- வாசகர்களின் கமெண்ட்ஸ் #LikeDislike

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, பிப்ரவரி 16-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக, ‘டீக்கடை முதல் கறிக்கடை வரை… நாடகமாகும் பரப்புரை களம்; நடிகர்களாகும் வேட்பாளர்கள்! உங்கள் கருத்து என்ன?’ எனக் கேட்டிருந்தோம். … Read more

உ.பி: திருமண வீட்டில் நேர்ந்த சோகம் – கிணற்றில் தவறி விழுந்த 13 பெண்கள் உயிரிழப்பு

உத்தரப்பிரதேசத்தில் கிணற்றின் இரும்பு வலை உடைந்ததில் அதன் மீது நின்று கொண்டிருந்த 13 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். குஷிநகர் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தவர்கள் அங்கிருந்த கிணற்றின் இருந்த இரும்பு வலையின் மீது நின்று கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அதிக பாரத்தால் கிணற்றின் இரும்பு வலை உடைந்து அதன் மீது நின்று கொண்டிருந்த 13 பேரும் கிணற்றுக்குள் விழுந்து மூழ்கினர். இந்த விபத்தில் 13 பெண்கள் உயிரிழந்த நிலையில் இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் … Read more

டெல்டா மாவட்டங்களில் நாளை முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்பு

டெல்டா மாவட்டங்களில் நாளை முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என கூறப்பட்டுள்ளது. இன்று தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை … Read more

28 வங்கிகளில் ரூ.22,000 கோடி கடன் மோசடி: ஏபிஜி ஷிப்யார்ட் நிறுவனம் மீது வழக்குப்பதிவு

சுமார் 22 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி 28 வங்கிகளை ஏமாற்றியதாக ஏபிஜி ஷிப்யார்ட் நிறுவனம் மற்றும் அதன் நிறுவனர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. ஏபிஜி நிறுவனம், அதன் தலைவர் ரிஷி கமலேஷ் அகர்வால் உள்ளிட்டோர் 28 வங்கிகளில் 22 ஆயிரத்து 842 கோடி ரூபாய் அளவு கடன் வாங்கி ஏமாற்றியதாக அன்மையில் சிபிஐ வழக்குப்பதிவு செய்திருந்தது. இதன் அடிப்படையில் தற்போது அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது. பனமோசடி தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் … Read more

'இறை அருளுக்கு நன்றி' – இளையராஜாவுடன் கங்கை அமரன் சந்திப்பு

பல ஆண்டுகளுக்கு பின்னர் தனது சகோதரர் இளையராஜாவை, கங்கை அமரன் நேரில் சந்தித்து பேசிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. சில வருடங்களாக இளையராஜாவும் அவரின் சகோதரர் கங்கை அமரன் பேசிக் கொள்வதில்லை என்ற செய்திகள் வெளியாகின. தற்போது இளையராஜாவும், கங்கை அமரனும் சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கங்கை அமரனின் மகனும் திரைப்பட இயக்குநருமான வெங்கட் பிரபு உள்ளிட்ட பலரும் அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். கங்கை அமரன் … Read more

'திமுக ஆட்சி உள்ளவரை மக்கள் மனநிறைவு அடையமாட்டார்கள்’-திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மத்திய அரசின் சாலைத்திட்டங்கள் அனைத்தும் முடங்கின; திமுக ஆட்சியில் உள்ளவரை மக்கள் மன நிறைவு அடையமாட்டார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வனவாசி பேரூராட்சி பகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “செய்யப்போவதில்லை என்பதால் சாத்தியமில்லாத வாக்குறுதிகளை திமுகவினர் அளித்தனர் என்றார். நீட் தேர்வு தொடர்பான விவாதித்தில் மக்கள் நீதிபதியாக இருந்து … Read more

மதுரை: சிட்கோ தொழிற்பேட்டையில் பயங்கர தீ விபத்து-பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பைப்கள் சேதம்

மதுரை வரிச்சியூர் அருகே சிட்கோ தொழிற்பேட்டையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் பல லட்சம் ரூபாய் மதிப்பு பிளாஸ்டிக் பைப்புகள் எரிந்து சேதமடைந்தன.  மதுரை மாவட்டம் வரிச்சியூரை அடுத்துள்ள உறங்கான்பட்டி சிட்கோ தொழிற்பேட்டை பிளாஸ்டிக் பைப் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. அங்கு 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவத் துவங்கி ஆலை முழுவதும் பரவியது. பணியில் இருந்த தொழிலாளர்கள் உடனடியாக ஆலையை விட்டு வெளியேறியதால் பெரும் … Read more

'காலிஸ்தான் பிரதமராக வருவேன்' – கெஜ்ரிவால் கூறியதாக சொல்லும் வீடியோவை வெளியிட்டது பாஜக!

‘பஞ்சாப் முதல்வராகவோ அல்லது காலிஸ்தானின் பிரதமராகவோ நான் வருவேன்’ என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாக குமார் விஸ்வாஸ் பேசிய வீடியோவை பாஜக வெளியிட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் வரும் 20ம் தேதி சட்டசபை பொதுத்தேர்தல் நடக்கிறது. இதற்காக காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் அமித் மாளவியா தனது ட்விட்டர் பக்கத்தில், ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனர்களில் ஒருவரும், அதன்பின் பாஜகவில் இணைந்தவருமான குமார் விஸ்வாஸ் … Read more