அடுத்தமாதம் ஷூட்டிங்: தீபாவளிக்கு ரிலீஸ்.. ‘அஜித் 61’ அப்டேட்

’அஜித் 61’ படத்தினை வரும் தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களைத் தொடர்ந்து அஜித்-ஹெச்.வினோத்-போனி கபூர் கூட்டணி மீண்டும் மூன்றாவது முறையாக ‘அஜித் 61’ படத்தில் இணைந்துள்ளனர். வரும் மார்ச் 9 ஆம் தேதி முதல் ஹைதராபாத்தில் படப்பிடிப்புத் துவங்கவுள்ளது. இதற்காக, பிரம்மாண்ட அரங்கை கடந்த ஒரு மாதமாக ’அஜித் 61’ படக்குழுவினர் அமைத்து வருகிறார்கள். இந்த நிலையில், ‘அஜித் 61’ படத்தினை இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவரவுள்ளதாக தகவல் … Read more

காஞ்சி: வீதியில் கிடந்த ஜெயலலிதா புகைப்படம் பதித்த விலையில்லா புத்தகப்பைகள் -நடந்தது என்ன?

கடந்த அதிமுக ஆட்சியில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்பட வைத்திருந்த ஆயிரக்கணக்கான பை மற்றும் செருப்புகள் காஞ்சிபுரத்தில் தேக்கமடைந்து வீணாக குப்பையில் வீசப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் அரசு சார்பில் வழங்க இருந்த மாணவர்களின் பொருட்களை குப்பையில் வீசப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா புத்தக பையில் இடம்பெற்றுள்ள முன்னாள் அதிமுக முதலமைச்சர்களின் புகைப்படங்களை மாற்ற வேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருந்தன்மையுடன் கூறியிருந்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் … Read more

4 வயதுக்கு கீழான குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம் – மத்திய அரசின் புதிய விதிமுறை

இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லப்படும் 4 வயதுக்கு கீழான குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்ற விதிமுறை அடுத்தாண்டு முதல் அமலுக்கு வருகிறது இரு சக்கர வாகனத்தில் செல்லும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மோட்டார் வாகனச்சட்டத்தில் சில திருத்தங்கள் செய்து மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இதன்படி இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லப்படும் 4 வயதுக்கு கீழான குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறை வரும் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி … Read more

சர்ச்சையை கிளப்பிய பீப் பாடல் : சிம்புவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்த நீதிமன்றம்

பீப் பாடல் விவகாரம் தொடர்பாக நடிகர் சிம்புவுக்கு எதிராக கோவை காவல்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டில் நடிகர் சிம்பு பெண்களை பற்றி பாடிய பாடல் பீப் சாங்காக வெளியானதற்கு எதிராக சிம்பு, அனிருத் மீது புகார் அளிக்கப்பட்டதை அடுத்து கோவை, சென்னை என பல இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கின் விசாரணையில் நடிகர் சிம்புவுக்கு எதிரான புகாருக்கு ஆதாரம் … Read more

மாமல்லபுரம் கடற்கரையில் ஆண்டாண்டு காலமாக இருளர் இன மக்கள் கொண்டாடும் விழா! காரணம் இதுதான்!

மாசிமகத்தன்று மாமல்லபுரம் கடற்கரையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள இருளர் சமூக மக்கள் ஒன்று திரள்கிறார்கள். இதற்கு காரணம் என்ன? இதற்கும் ஜெய்பீம் படத்துக்கும் உள்ள தொடர்பு என்ன? என்பது குறித்துப் பார்க்கலாம். அண்மையில் வெளிவந்த ஜெய்பீம் திரைப்படத்தில் இதுபோன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அந்த சித்தரிப்பின் நிஜ களம் இதுதான். ஆண்டாண்டுகாலமாக மாமல்லபுரம் கடற்கரையில் இந்த விழா நடந்து வருகிறது. மாசிமகத்தன்று மாமல்லபுரம் கடற்கரையில் ஒன்றுகூடும் இருளர் மக்கள், தங்கள் குலதெய்வமான கன்னியம்மன், மாசிமகம் முழு நிலவு நாளில் … Read more

உ.பி: ஒவைசி கார்மீது துப்பாக்கிசூடு நடத்தியதாக கைதானவரின் குடும்பத்தை சந்தித்த பாஜக தலைவர்

அசாதுதீன் ஓவைசியின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில் கைதாகி சிறையில் உள்ள தாத்ரியைச் சேர்ந்த சச்சின் சர்மாவின் குடும்பத்தினரை, உத்தரப்பிரதேச மாநில தொழிலாளர் நல வாரியத்தின் தலைவரான சுனில் பரலா நேரில் சென்று சந்தித்தார். முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசில் அமைச்சருக்கு இணையான பதவியை வகிக்கும் உத்தரப்பிரதேச மாநில தொழிலாளர் நல வாரியத்தின் தலைவரான சுனில் பரலா, ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசியின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் … Read more

தெறிக்கவிடும் தேவா: கவனம் ஈர்க்கும் தங்கர் பச்சானின் ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’ பாடல்

இயக்குநர் தங்கர் பச்சானின் ’டக்கு முக்கு டிக்கு தாளம்’ படத்தின் டைட்டில் பாடல் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ’களவாடிய பொழுதுகள்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் தங்கர் பச்சான் தன் மகன் விஜித் பச்சானை ஹீரோவாக அறிமுகமாக்கி ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’ படத்தினை இயக்கி முடித்துள்ளார். பிஎஸ்என் எண்டெர்டைன்மெண்ட்ஸ் தயாரிக்க தரண்குமார் இசையமைத்துள்ளார். பிரபு – தயாளன் ஒளிப்பதிவு செய்ய தினேஷ் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் டைட்டில் … Read more

சிங்கம்புணரி மஞ்சுவிரட்டு – மாடு முட்டி பார்வையாளர் சம்பவ இடத்தில் பலி

சிங்கம்புணரி அருகே அரளிப்பாறையில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டியதில் பார்வையாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அரளிப்பாறையில் மாசி மகாமகத்தை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடத்தப்பட்டது. இந்த மஞ்சுவிரட்டு போட்டிக்கு சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன. வாடிவாசலில் அவிழ்த்துவிட 120 காளைகள் மட்டுமே பதிவாகி இருந்த நிலையில், அதற்கு முன்பே ஆங்காங்கே 300ற்கும் மேற்பட்ட கட்டு மாடுகள் அவிழ்த்து … Read more

'மை ரோல் மாடல் நாதுராம் கோட்சே' என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி – குஜராத் அதிகாரி இடைநீக்கம்

குஜராத்தில் ‘மை ரோல் மாடல் நாதுராம் கோட்சே’ என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடத்திய அதிகாரி பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டைச்சேர்ந்த மாவட்ட இளைஞர் மேம்பாட்டு அதிகாரி மிதாபென் கவ்லி, 5-8ம் வகுப்பு மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தியுள்ளார். ‘மை ரோல் மாடல் நாதுராம் கோட்சே’ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட அந்த போட்டி சர்ச்சை ஏற்படுத்தியது.திங்கள்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் 25 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பங்கேற்றன. இதனையடுத்து, அந்த அதிகாரி பணி இடை … Read more

”ஐயாம் எ ஹவுஸ் ஹஸ்பண்ட்”: கவனம் ஈர்க்கும் துல்கர் சல்மானின் ’ஹே சினாமிகா’ ட்ரெய்லர்

துல்கர் சல்மானின் ‘ஹே சினாமிகா’ ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் நடிப்பில் பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹே சினாமிகா’ வரும் மார்ச் 3 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. ரிலையன்ஸ் நிறுவனம் முதன்முறையாக தமிழில் தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ளார். ஏற்கனவே, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் பாடல்களும் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ’ஹாய் வெல்கம் இசை … Read more