விஜய்யை போல தத்ரூப தோற்றம் – கேரள நபரை அழைத்து வந்து விஜய் மக்கள் இயக்கத்தினர் பிரசாரம்!

நடிகர் விஜய்யை போல தத்ரூப தோற்றம் கொண்ட கேரள நபரை ஈடுபடுத்தி விஜய் மக்கள் இயக்கத்தினர் பிரசாரம் மேற்கொண்டனர். மதுரையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் 88வது வார்டில் நாகேஸ்வரி என்பவர் போட்டியிடுகிறார். இதில், வாக்கு சேகரிக்க நடிகர் விஜய்யை போல தத்ரூப தோற்றம் கொண்ட கேரளாவை சேர்ந்த இளைஞரை அழைத்துவரப்பட்டார். அப்போது அவரை 88 வது வார்டு முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினர் ஈடுபடுத்தினர். நடிகர் விஜய்யை போல … Read more

'யார் அந்த ராஷி..?' – இணையத்தில் வைரலாகும் 20 ரூபாய் நோட்டு!

யார் அந்த ராஷி  என்பதுதான் பலரின் கேள்வியாக உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு யாரோ ஒருவர் 2,000 ரூபாய் நோட்டில், ‘சோனம் குப்தா பேவஃபா ஹை’ (சோனம் குப்தா ஒரு துரோகி) என்று இந்தியில் எழுதினார். அந்த நோட்டின் புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியது. இந்நிலையில் தற்போது யாரோ ஒருவர் 20 ரூபாய் நோட்டில் ‘ராஷி பேவஃபா ஹை’ (ராஷி ஒரு துரோகி) என இந்தியில் எழுதி வைத்துள்ளார். அந்த நோட்டின் புகைப்படமும் இணையதளங்களில் … Read more

”சுசீந்திரன் முதல் மோகன்லால் வரை!” – இந்த வீக் எண்ட் என்ன படம் பார்க்கலாம்?

இயக்குநர் சுசீந்திரன் இயக்கியுள்ள ’வீரபாண்டியபுரம்’, மோகன்லாலின் ‘அராட்டு’ உள்ளிட்டப் படங்களும் நடிகர் விமலின் ‘விலங்கு’ வெப் சீரிஸும் இந்த வாரம் வெளியாகின்றன. மோகன்லாலின் ’அராட்டு’! ’மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்திற்குப் பிறகு தியேட்டரில் வெளியாகும் மோகன்லால் படம் ‘அராட்டு’. ‘த்ரிஷ்யம்’ சூப்பர் ஹிட்டுக்குப்பிறகு மோகன்லாலுக்கு மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னட மாநிலங்களிலும் ரசிகர்கள் அதிகரித்துள்ளனர். ‘லூசிஃபர்’, ‘த்ரிஷ்யம் 2’, சமீபத்தில் வெளியான ‘ப்ரோ டேடி’ படங்களே அதற்கு சாட்சி. இப்படங்களுக்காக மோகன்லாலைக் கொண்டாடித் தீர்த்தனர். ’அராட்டு’ … Read more

'2.15கோடி பைக்கு ரூ.130 கோடி கமிஷன் பெற்றுள்ளனர்' – அண்ணாமலை குற்றச்சாட்டு

பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட்ட மஞ்சப்பையை அதிக விலைக்கு வாங்கி திமுக ஊழல் செய்துள்ளதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், ‘ மத்திய மாநில அரசுகளுக்கு இடையே முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்னையை ஏற்படுத்துகிறார். பொங்கல் தொகுப்பில் உள்ள மஞ்சள் பை வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது. ரூ.10 மதிப்புள்ள மஞ்சள் பையை ரூ.60க்கு வாங்கியுள்ளனர். 2.15கோடி பைக்கு ரூ.130 கோடி கமிஷன் பெற்றுள்ளனர்.மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்றெல்லாம் இந்த … Read more

உ.பி: உறவினர் திருமணத்திற்கு விடுமுறை மறுக்கப்பட்டதால் ரயில்வே ஊழியர் எடுத்த விபரீத முடிவு

உத்தரப்பிரதேசத்தில் உறவினரின் திருமணத்திற்கு விடுமுறை மறுக்கப்பட்டதால் விரக்தியடைந்த ரயில்வே ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் தனது மைத்துனரின் திருமணத்திற்கு விடுமுறை மறுக்கப்பட்டதால் ரயில்வே டிராக்மேன் ஒருவர் தண்டவாளத்தில் தற்கொலை செய்துகொண்டார். அவரது கடைசி தருணங்களின் வீடியோவும் இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் அவர் தனது சக ஊழியர்களிடம் தனக்கு நேர்ந்த துயரத்தைப் பற்றி கூறுவதைக் கேட்க முடிந்தது. வரும் 19-ஆம் தேதி நடக்கும் திருமணத்தில் அவர் கலந்து கொள்ளவிருந்ததாகக் கூறப்படுகிறது. மாய்த்துக் … Read more

”’கோப்ரா‘ பட பட்ஜெட் அதிகரித்தற்கு நான் காரணமா?” – இயக்குநரின் ட்வீட்டால் வெடித்த விவாதம்

விக்ரமின் ‘கோப்ரா’ படப்பிடிப்பு நிறைவடைந்ததையடுத்து, இயக்குநர் அஜய் ஞானமுத்து நன்றி தெரிவித்து பதிவு செய்த ட்வீட் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. ‘டிமாண்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கோப்ரா’. பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விக்ரம் பல்வேறு கெட்டப்புகளில் நடித்துள்ளார். இது ஒரு ஸ்ட்ராங்கான சஸ்பென்ஸ், சைக்கலாஜிக்கல் த்ரில்லர். இந்தப் படத்தில் விக்ரமுடன் ‘கேஜிஎஃப்’ ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், முன்னாள் … Read more

திமுக சிறப்பாக ஆட்சி செய்தால் பாஜக எப்படி வரும்? சீமான் சிறப்பு நேர்காணல்

“வீடுதேடி தெருத் தெருவா அழைந்தேன்; ஆனால் வீடு வாடகைக்கு கொடுக்க மறுக்கிறார்கள்” என சிறப்பு நேர்காணலில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேதனையோடு பதிலளித்தார். தமிழகத்தில் வருகிற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சியின் தலைவர்கள் சூடான சுறுசுறுப்பான பரப்புரையில் ஈடுபட்டு வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரத்தில் தேர்தல் பரப்புரையில் இருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை … Read more

கேரளா: இளம் வயது எம்.எல்.ஏ.வை மணக்கிறார் இந்தியாவின் இளம் வயது மேயர் ஆர்யா!

கேரளாவில் எம்.எல்.ஏ. சச்சின் தேவுக்கும், திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரனுக்கும் திருமணம் நடைபெற உள்ளது. திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயராக இருப்பவர் ஆர்யா ராஜேந்திரன். 21 வயதில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றதன் மூலம் இந்தியாவிலேயே மிகக்குறைவான வயதில் மேயர் பதவியேற்ற பெண் என்ற பெருமையை இவர் பெற்றவர் ஆவார். இவருக்கும், பாலுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான சச்சின் தேவுக்கும் திருமணம் நடக்க உள்ளது. 28 வயதாகும் சச்சின் தேவ், கேரள சட்டப்பேரவையில் … Read more

”‘புஷ்பா’ என் இசை பயணத்தில் மறக்க முடியாத படம்” – தேவிஸ்ரீ பிரசாத்

’புஷ்பா’ படத்தின் ’ஸ்ரீவள்ளி’ பாடல் வைரல் ஹிட் அடித்துள்ளதால் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத். சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி வெளியாகி வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. அல்லு அர்ஜுனுடன் ஃபகத் ஃபாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான ‘புஷ்பா’ உலகம் முழுக்க 300 கோடி ரூபாய்க்கு … Read more

“மக்களை தேடி மருத்துவம் திட்டத்தால் 49 லட்சம்பேர் பயன்”- மா.சுப்பிரமணியன்

மழலையர் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மாஸ்க் அணிய வேண்டிய கட்டாயம் இல்லை என்றும், 5 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் மட்டும் மாஸ்க் அணிந்தால் போதுமானது என்றும் தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாடு அரசின் `மக்களை தேடி மருத்துவம் திட்டம்’ மூலம் இதுவரை 49 லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைந்து உள்ளதாகவும், விரைவில் 50 லட்சமாவது பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்க உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் புதிதாக தொடங்க … Read more