'டர்பன் அணிந்தால் நீங்கள் சர்தாரா? – மோடி, கெஜ்ரிவாலை சாடிய பிரியங்கா காந்தி

பஞ்சாப் மாநிலத்துக்கு பிரசாரத்துக்கு வந்தால் பிரதமர் மற்றும் கெஜ்ரிவால் டர்பன் அணிந்து இருப்பார்கள். தலைப்பாகை அணிவதால் யாரும் சர்தார் ஆக மாட்டார்கள் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ரூப்நகர் பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் பிரசாரக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பரப்புரை மேற்கொண்டார். பின்னர் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், ”பிரதமர் நரேந்திர மோடி மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் வந்தால் … Read more

‘வலிமை’ சண்டைக் காட்சியில் மாஸ் காட்டும் அஜித் – படக்குழு வெளியிட்ட புதிய ப்ரோமோ

நடிகர் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ படத்தின் சண்டைக்காட்சிகள் அடங்கிய ப்ரோமோவை தயாரிப்பாளர் போனி கபூர், தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ‘நேர்கொண்ட பார்வை’க்குப் பிறகு ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், நடிகர் அஜித் 2-வது முறையாக இணைந்துள்ள படம் ‘வலிமை’. அஜித் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்திருக்கும் இந்தப் படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருந்தநிலையில், கொரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது கொரேனா ஊரடங்கு தளர்த்தப்பட்டு அடுத்தடுத்து படங்கள் வெளியாகும் தேதிகள் அறிவிக்கப்பட்டு வரும்நிலையில், ‘வலிமை’ படமும் … Read more

'சட்டமன்றத்தை முடக்கிப் பார்க்கட்டும்' – வாசகர்களின் கமெண்ட்ஸ் #LikeDislike

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, பிப்ரவரி 15-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக, ‘சட்டசபையை முடக்கும் நிலை ஏற்படும் – எடப்பாடி பழனிசாமி; மிசாவை பார்த்த என்னை மிரட்ட முடியுமா? … Read more

கடுமையான எரிபொருள் தட்டுப்பாட்டில் இலங்கை… 40,000 டன் பெட்ரோல், டீசலை கொடுத்த இந்தியா

கடுமையான எரிபொருள் தட்டுப்பாட்டால் தவிக்கும் இலங்கைக்கு 40 ஆயிரம் டன் பெட்ரோல், டீசலை இந்தியா அனுப்பியுள்ளது. இலங்கையில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததை அடுத்து அங்கு இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்டதால் அத்தியாவசிய பொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க இந்தியா 40,000 டன் பெட்ரோல், டீசலை விநியோகம் செய்துள்ளது. இந்திய தூதர் கோபால் பாக்லே இந்திய எண்ணெய் கழகம் வழங்கிய 40,000 டன் எரிபொருளை இலங்கை அரசிடம் ஒப்படைத்தார். இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சே … Read more

உசிலம்பட்டி அருகே தீ விபத்து: தீயை அணைக்க 3 மணி நேரமாக போராடும் வீரர்கள்

உசிலம்பட்டி காதி கிராப்ட் நூல் குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்க மூன்று குழு கொண்ட தீயணைப்புத்துறை வீரர்கள் போராடி வருகின்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கீழப்புதூரில் அமைந்துள்ள தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய உபகிளையில் உள்ள குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் குடோனில் இருந்த நூல்கள் எரிந்து சேதமடைந்து கொண்டிருக்கும் நிலையில் தகவலறிந்து விரைந்து வந்துள்ள … Read more

இந்தியா: கடந்த 24 மணி நேரத்தில் 30,615 பேருக்கு கொரோனா; 514 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில், 30,615 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கும் தகவலின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,615 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 27,409 ஆக இருந்தநிலையில், அது இன்று 11% உயர்ந்து பதிவாகியுள்ளள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 82,988 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் … Read more

தமிழ்நாட்டில் நர்சரி, மழலையர் பள்ளிகள் இன்று திறப்பு

கொரோனா காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த நர்சரி, மழலையர் பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. நாடு முழுவதும் கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் பரவிய கொரோனா மூன்றாம் அலை, டிசம்பர் மத்தியில் இருந்து கணிசமாக குறைந்து வருகிறது. இதையடுத்து, தமிழ்நாடு அரசு அடுத்தடுத்து பல பொதுமுடக்க தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி, நர்சரி பள்ளிகள் மற்றும் மழலையர் பள்ளிகள் இன்று முதல் திறக்கப்படுகின்றன. பொருட்காட்சிகள் நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திரையரங்குகள், வணிக வளாகங்கள், உணவகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், … Read more

திருச்சி: மாநகராட்சி பணியில் ஈடுபடும் குழந்தை தொழிலாளர்கள்… கண்டுகொள்ளாத அதிகாரிகள்?

திருச்சி மாநகராட்சியில் ஒப்பந்த பணியில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகளை மாநகராட்சி மீட்குமா என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. திருச்சி மாநகராட்சி சார்பில் பாதாளசாக்கடை, குடிநீர் இணைப்பு உள்ளிட்ட பணிகள் மாநகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாநகராட்சிக்குட்பட்ட அரபி குல தெருவில் குடிநீர் இணைப்புக்காக குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒப்பந்ததாரர்கள் மூலம் நடைபெறும் இப்பணி பெரும்பாலும் ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநில பணியாளர்களை கொண்டு நடைபெற்று வருகிறது. இப்பணியில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்படும் … Read more

பெற்றோர் சம்மதிக்க, மேளதாளம் முழங்க, கரம்பிடித்த கேரள திருநர் ஜோடி!

கேரளாவில் காதலர் தினத்தன்று பெற்றோர் சம்மதத்துடன் மேளதாளம் முழங்க திருநங்கை ஜோடி திருமணம் செய்துகொண்டது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மணமகள் ஷியாமா கேரள சமூக நீதித்துறையின் திருநங்கைகள் பிரிவில் பணிபுரிந்து வருகிறார். திரிச்சூரைச் சேர்ந்த மணமகன் மனு ஐடி கம்பெனியில் வேலைபார்த்து வருகிறார். காதலில் விழுந்த பிரபாவும் ஷியாமாவும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருக்கின்றனர். பெற்றோரிடம் அனுமதி பெற்ற அவர்கள், திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் 2019-இன் கீழ் தங்கள் திருமணத்தை பதிவுசெய்ய அரசின் … Read more

திருவள்ளூர்: ஆற்றின் வழியே முழங்காலளவு தண்ணீரில் சடலங்களை சுமந்து செல்லும் அவலம்

திருத்தணி அருகே இறந்தவரின் சடலத்தை ஆற்றில் முழங்காலளவு தண்ணீரில் தூக்கி செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. அக்கிராமத்தில் சுடுகாடும் இல்லாததால் ஆற்றங்கரையில் கிராம மக்கள் சடலங்களை அடக்கம் செய்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த சூரியநகரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பொம்ம ராஜபுரம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய சுடுகாடு வேண்டி கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். குறிப்பாக இதுதொடர்பாக வட்டாட்சியர் … Read more