பஞ்சாபி நடிகர் தீப் சித்து சாலை விபத்தில் உயிரிழப்பு

பஞ்சாப் மாநில நடிகர் தீப் சித்து சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். ஹரியானா மாநிலம் சோனிபட் அருகே இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இதனை சோனிபட் போலீசார் உறுதி செய்துள்ளனர். 2021 குடியரசு தினத்தன்று செங்கோட்டை வன்முறை வழக்கில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.  37 வயதான அவர் 2015 முதல் திரைப்படங்களில் நடித்து வருகிறார். மொத்தம் ஆறு படங்களில் அவர் நடித்துள்ளார்.  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம்: விடுதி வார்டனிடம் விசாரணை நடத்த சிபிஐ திட்டம்

தஞ்சாவூர் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், சிபிஐ 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கி உள்ளது. ஜாமினில் வெளியே வந்த விடுதி வார்டனிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.  தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டி தூய இருதய பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மாணவிகள் விடுதியில் மாணவியை சுத்தம் செய்யக்கூறி வார்டன் கொடுமைப்படுத்தியதால் மாணவி மனமுடைந்து … Read more

மகாராஷ்டிரா: பிளாஸ்டிக் கண்டெய்னருக்குள் தலை சிக்கியதால் தவிக்கும் சிறுத்தை!

மகாராஷ்டிராவில் பிளாஸ்டிக் கண்டெய்னருக்குள் தலை மாட்டிக்கொண்ட சிறுத்தைக்குட்டியை மீட்க வனத்துறையினர் தேடிவருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்திலுள்ள பத்லாபூர் பகுதியில் சிறுத்தைக்குட்டி ஒன்று தென்பட்டது. காரில் சென்ற ஒரு நண்பர்கள் குழு வீடியோ பதிவிட்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வைரலாகிவருகிறது. அதில் பிளாஸ்டிக் கண்டெய்னருக்குள் தலை மாட்டிக்கொண்ட சிறுத்தைக்குட்டி சிரமப்பட்டிருக்கிறது. அவர்கள் அதனைக் காப்பாற்ற அருகே சென்றபோது அது காட்டுக்குள் ஓடிவிட்டது. சமூக ஊடகங்களில் வைரலான இந்த வீடியோவைப் பார்த்த மகாராஷ்டிரா வனத்துறையினர், சிறுத்தைக்குட்டியை … Read more

சோனி லைவ் ஓடிடியில் வெளியாகும் விஷால் – ஆர்யாவின் ‘எனிமி’

நடிகர் விஷால் – ஆர்யாவின் ‘எனிமி’ ஓடிடியில் வெளியாகிறது. ‘அரிமா நம்பி’, ’இருமுகன்’, ‘நோட்டா’ படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் – ஆர்யா நடிப்பில் ’எனிமி’ கடந்த தீபாவளியையொட்டி வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படத்தில் வில்லனாக ஆர்யா நடித்திருந்தார். பிரகாஷ் ராஜ், மிர்ணாளினி ரவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ’எனிமி’ வெளியாகி மூன்று மாதங்கள் ஆன பின்னும் டிஜிட்டல் உரிமை குறித்த அறிவிப்பு வெளியாகாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், ‘எனிமி’ படத்தின் தியேட்டர் … Read more

வாரம் முழுவதும் வேலைக்கு வந்தால் 3 குவார்ட்டர்! – தொழிலாளர்களை ஈர்க்க விபரீத விளம்பரங்கள்!

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றது ஒரு விளம்பரம். அதில் வெல்டர், ஃபிட்டர் வேலைகளுக்கு ஒரு வாரம் தொடர்ந்து வந்தால் மூன்று மது பாட்டில்கள் கொடுப்பதாக விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வேலையின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு உடல் உழைப்பைச் செலுத்தி தினசரி ஊதியத்தைப் பெறும் தொழிலாளர்களைக் குறிப்பிடுவதுதான் ப்ளூ காலர் வேலைகள். வெல்டர், ஃபிட்டர், கார்பெண்டர், பிளம்பர், எலெக்ட்ரிஷியன், வெயிட்டர், கயிறு தொழில் போன்ற வேலைகள் இதற்கு உதாரணம். உற்பத்தி, சுரங்கம், கட்டுமானம், இயந்திரங்களைக் கையாளும் தொழிற்சாலைகள், … Read more

மக்களவைத் தேர்தலில் நாடெங்கிலும் வேட்பாளர்களை நிறுத்துவோம் – சிவசேனா அதிரடி அறிவிப்பு

அடுத்த மக்களவைத் தேர்தலில் நாடெங்கிலும் வேட்பாளர்களை களமிறக்க உள்ளதாக மகாராஷ்டிராவில் ஆளுங்கட்சியாக உள்ள சிவசேனா தெரிவித்துள்ளது. ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸின் வரிசையில் சிவசேனாவும் தேசிய அரசியலில் தீவிரம் காட்ட முனைந்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் சிவசேனா கட்சி நாடெங்கும் வேட்பாளர்களை களமிறக்கும் என அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே தலைமையில் சிவசேனா நாடெங்கும் கால் பதிக்கும் என்றும், … Read more

நடிகர் மாதவனின் ‘ராக்கெட்ரி‘ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

மாதவன் இயக்கி, நடித்துள்ள ‘ராக்கெட்ரி : நம்பி விளைவு’ திரைப்படம், வரும் ஜூலை மாதம் 1-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரோவில் பணியாற்றிய விண்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ‘ராக்கெட்ரி – நம்பி விளைவு’ என்ற படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை முதலில் ஆனந்த் மகாதேவன் இயக்கியநிலையில் படத்திலிருந்து அவர் விலகினார். பின்னர், இந்தப் படத்தை நடிகர் மாதவனே இயக்கினார். இந்தப் படத்தின் மூலம் நடிகர் மாதவன் இயக்குநராக … Read more

திருப்பத்தூர்: மனைவி சாவில் மர்மம் .. புகாரில் கைதான கணவர் சிறையில் மூச்சுத்திணறலால் மரணம்

திருப்பத்தூரில் மகளின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது தந்தை அளித்த புகாரில்பேரில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட மருமகன், 3 நாட்களில் மூச்சுத்திணறலால் உயிரிழந்தார்.  திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சாமியார் மடத்தை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 34). இவருக்கும் ஓசூரை சேர்ந்த முரளி என்பவரது மகள் நந்தினி(26) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாகவும், இதனால் … Read more

வங்கியா, வாடிக்கையாளர் நலனா? உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

குடியிருப்பு கட்டுமானத்தின்போது கட்டுமான நிறுவனம் கடன் தவணை கட்டத் தவறினால் வாடிக்கையாளரின் நலன் காக்கப்பட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜஸ்தானில் கடன் தவணையைக் கட்ட கட்டுமான நிறுவனம் தவறியதால், கட்டப்பட்டு நிறைவடையும் தருவாயில் உள்ள வீடுகளை ஏலம் விட கடன் கொடுத்த வங்கி முடிவு செய்தது. அதற்கு ரெரா எனப்படும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து வங்கி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ரெராவின் அதிகார வரம்பிற்குள் வங்கிகள் வராது … Read more

அமீர்கானின் ‘லால் சிங் சத்தா‘ ரிலீஸ் மீண்டும் மாற்றம் – கே.ஜி.எஃப்2 உடன் மோதலை தவிர்க்கவா?

அமீர்கானின் ‘லால் சிங் சத்தா‘ திரைப்படம் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல ஹாலிவுட் நடிகரான டாம் ஹாங்ஸ் நடிப்பில், 1994-ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படம் ‘தி ஃபாரஸ்ட் கம்ப்’. ஆஸ்கர் விருதுகள் உள்பட பல்வேறு விருதுகளை அள்ளிய இந்தத் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ இந்தி ரீமேக் தான் ‘லால் சிங் சத்தா’. இந்தப் படத்தில் கதாநாயகனாக அமீர்கானும், அவருக்கு ஜோடியாக கரீனா கபூரும் … Read more