தேனி: ஒரு வருட தடை நீக்கப்பட்டு கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

கொரோனா தொற்றால் ஒரு வருடமாக சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு கும்பக்கரை அருவியில் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை தொடங்கியதன் காரணமாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதலே சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும் அருவிக்கு செல்லவும் வனத்துறையினர் தடைவிதித்தனர். இந்நிலையில் நோய் தொற்று குறைந்த நிலையில் தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வனத்துறை அதிகாரியின் உத்தரவின் அடிப்படையில் சுற்றுலா பயணிகளுக்கு கும்பக்கரை … Read more

ம.பி.யிலும் ஹிஜாப் எதிர்ப்பு – விஷ்வ இந்து பரிஷத் போராட்டத்தால் கல்லூரியில் அதிரடி தடை

கர்நாடகாவை தொடர்ந்து மத்திய பிரதேசத்துக்கும் ஹிஜாப் எதிர்ப்பு பரவி இருக்கிறது. அங்கு ஒரு கல்லூரியில் ஹிஜாபுக்கு எதிர்ப்பு தெரிவித்து விஷ்வ இந்து பரிஷத் நடத்திய போராட்டத்தால், கல்லூரி நிர்வாகம் சர்ச்சைக்குரிய உத்தரவை பிறப்பித்துள்ளது. கர்நாடகாவில் கடந்த சில வாரங்களாக ஹிஜாப் விவகாரம் பெரும் புயலை கிளப்பி வந்தது. உடுப்பி, மாண்டியா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருதரப்பு மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதன் … Read more

பேண்டஸி படத்தில் நடிக்கும் ஹன்சிகா – கிளாப் அடித்து ஆரம்பித்து வைத்த விஜய் சேதுபதி

‘மஹா’ படத்தைத் தொடர்ந்து ஹன்சிகா மோத்வானி நடிக்கும், புதியப் படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. ஹன்சிகா மோத்வானியின் 50-வது படமான ‘மஹா’ ரிலீசுக்கு தயாராகி வருகின்றது. இந்நிலையில் ஹன்சிகா மோத்வானி லீட் ரோலில் நடிக்கும் புதியப் படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. ‘வாலு’, ‘ஸ்கெட்ச்’, ‘சங்கத் தமிழன்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் விஜய் சந்தர். இவர் தற்போது நடிகை ஹன்சிகா கதாநாயகியாக நடிக்கும் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாக உள்ளார். பிலிம் வொர்க்ஸ் நிறுவனம் என்ற பெயரில் … Read more

வேலூர் இப்ராஹிமுக்கு ரூ.10,000 அபராதம் – உயர்நீதிமன்றம் உத்தரவு

பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் சையது இப்ராஹிமுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ.10,000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. கோவை 95-வது வார்டில் பரப்புரை செய்ய அனுமதி மறுத்ததாகக் கூறி, பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் சையது இப்ராஹிம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கு விவரங்களை மனுவில் தெரிவிக்காததால் கண்டனம் தெரிவித்து வேலூர் இப்ராஹிமுக்கு ரூ.10,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார். இதையும் படிக்க: ‘புர்கா’ குறித்து சர்ச்சைப் … Read more

சன்சத் யூடியூப் தொலைக்காட்சி ஹேக் செய்யப்பட்டதாக தகவல்

நாடாளுமன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் சன்சத் யூடியூப் தொலைக்காட்சி ஹேக் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மர்ம நபர்களால் யூடியூப் பக்கம் ஹேக் செய்யப்பட்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக சன்சத் டிவி நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாட்டை களைய யூடியூப் நிர்வாகம் முயற்சி செய்து வருகிறது என்றும் சன்சத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இதையும் படிக்க: பாறை இடுக்கில் சிக்கிய இளைஞரை மீட்கும் பணிக்கு ரூ.75 லட்சம் செலவுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

சிபிராஜ் படத்தில் அறிமுகமாகும் இசையமைப்பாளர் வித்யாசாகர் மகன்

இசையமைப்பாளர் வித்யாசாகர் மகன் ஹர்ஷ வர்தன் சிபி சத்யராஜ் நடிக்கும் புதிய படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ‘கபடதாறி’ படத்திற்குப் பிறகு ‘மாயோன்’, ‘ரங்கா’, ‘ரேஞ்சர்’, ‘வட்டம்’ உள்ளிட்டப் படங்களில் நடித்துவரும் சிபிராஜ், அடுத்ததாக அறிமுக இயக்குநர் பாண்டியன் ஆதிமூலம் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். ஐ.ஜி பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பாக கார்த்திகேயன் தயாரிக்கும் இப்படத்தில் இசையமைப்பாளர் வித்யாசாகர் மகன் ஹர்ஷ வர்தன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். சிபிராஜின் 20-வது படமாக உருவாகும் இப்படம் குடும்பம் ப்ளஸ் த்ரில்லர் கதைக்களத்தில் … Read more

மணப்பாறை: பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது லாரி மோதிய விபத்து – மூன்று பேர் பலி

மணப்பாறை அருகே சமயபுரத்திற்கு பாதையாத்திரை சென்ற பக்தர்கள் மீது தக்காளி லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் பகுதியிலிருந்து சுமார் 3 ஆயிரம் பக்தர்கள் மாலையில் பாதையாத்திரையாக திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு, புறப்பட்டனர். இதில் பல்வேறு பகுதியிலிருந்து வந்த பக்தர்கள் ஒன்று சேர்ந்து நடைபயணம் மேற்கொண்டனர். அப்போது, திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை இடையப்பட்டியான்பட்டி அருகே சாலையோரம் நடந்து சென்ற பக்தர்களுக்கிடையே தக்காளி ஏற்றிச் சென்ற லாரி புகுந்தது. … Read more

மும்பை: ரயிலில் அடிபட்டு சுக்குநூறான பைக்; நூலிழையில் தப்பிய ஓட்டுநர் – வைரல் வீடியோ

மும்பையில் ரயில் வரும்போது தண்டவாளத்தை கடக்க முயன்றவரின் பைக் சுக்குநூறாக சிதறிய நிலையில், பைக் ஓட்டியவர் நூலிழையில் உயிர்தப்பிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மும்பையில் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் வரும்போது இருபக்கமும் போக்குவரத்து நிறுத்தப்பட்டு ரயில்வே கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், விதிகளை மீறி கதவுகளுக்குள் புகுந்து தண்டவாளத்தை கடக்க முயன்ற நபரின் மோட்டார் சைக்கிள் ரயிலில் சிக்கி சின்னாபின்னமானது. ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் மீது பைக் மோதி நொறுங்கும் வீடியோ காட்சிகள் தற்போது … Read more

2 கோடி வியூஸ், 2 மில்லியன் லைக்ஸ் – யூட்யூப் சமஸ்தானத்தையே அதிர வைத்த 'அரபிக் குத்து'

’பீஸ்ட்’ படத்தின் ’அரபிக் குத்து’ பாடல் யூட்யூபில் 2 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. ’மாஸ்டர்’ வெற்றிக்குப்பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி ’பீஸ்ட்’ வெளியாகவுள்ள நிலையில், முதல் பாடல் ‘அரபிக் குத்து’ காதலர் தினத்தையொட்டி நேற்று மாலை வெளியானது. ’ஹலமதி ஹபீபோ’ என்று தொடங்கும் இப்பாடலின் இசை இளைஞர்களின் ஹார்ட் … Read more

எஸ்பி.வேலுமணி மீதான வழக்கு: 2 நிறுவனங்களின் 110.80 கோடி வைப்பு நிதியை முடக்க உத்தரவு

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கில் தொடர்புடைய இரண்டு நிறுவனங்களின் 110 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைப்பு நிதியை முடக்கி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர்களை வேண்டப்பட்டவர்களின் நிறுவனங்களுக்கு ஒதுக்கி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் எஸ்.பி. வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன் மற்றும் நிறுவனங்கள் உள்பட 17 பேர் … Read more