சாமியாரிடம் பங்குச் சந்தை ரகசியங்களை பகிர்ந்த முன்னாள் அதிகாரி – செபி குற்றச்சாட்டு

தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா, பங்குச் சந்தை தொடர்பான ரகசிய தகவல்களை சாமியார் ஒருவரிடம் பகிர்ந்ததாக பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியமான செபி குற்றம்சாட்டியுள்ளது. சித்ரா ராமகிருஷ்ணா தேசிய பங்குச் சந்தையின் தலைமை பொறுப்பை வகித்தபோது, இமயமலையில் வசிக்கும் சாமியார் ஒருவரிடம் பல்வேறு ஆலோசனைகளை பெற்றதாக செபி தெரிவித்துள்ளது. அந்த சாமியாரிடம் வணிக ரீதியிலான திட்டங்கள், நிர்வாக கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல்கள், பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்கள் குறித்த முன்கூட்டிய … Read more

“திரைப்படம் எடுக்க வருபவர்களிடம் இதைத்தான் முதலில் கூறுவேன்” – இயக்குநர் பா. ரஞ்சித்

தான் பார்த்து ரசித்த திரைப்படங்களை எடுக்க இந்த சமூகம் தன்னை அனுமதிக்கவில்லை என ரஞ்சித் கருத்து தெரிவித்துள்ளார். பா.ரஞ்சித் தயாரித்துள்ள ‘குதிரைவால்’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பா.ரஞ்சித், திரைப்படங்களில் பல வகைகள் உள்ளன. அதில் தான் பார்த்து ரசித்த திரைப்படங்களை எடுக்க இந்த சமூகம் தன்னை அனுமதிக்கவில்லை என தெரிவித்தார். மாறாக தனக்குள் இருக்கும் கேள்விகளை, பதில்களை கூற, திரைப்படங்கள் எடுக்க நிர்பந்திக்கப்பட்டவன் நான் எனக் கூறினார். … Read more

தமிழகத்தில் 2,000-க்கும் கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு – மாவட்ட வாரியாக முழு விபரம்

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கு வங்கத்தில் இருந்து திரும்பிய 2 பேர் உட்பட மொத்தம் 1,632 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில், 1,634- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 37 … Read more

உத்தரபிரதேசத்தில் திரிணமூல் காங்கிரஸ் போட்டியிடாதது ஏன்? – மம்தா பானர்ஜி விளக்கம்

உத்தரபிரதேசத்தில் திரிணமூல் காங்கிரஸ் போட்டியிடாதது ஏன் என்று அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், சமாஜ்வாதி கட்சியை ஆதரித்து மம்தா பானர்ஜி கடந்த வாரம் பிரசாரம் மேற்கொண்டார். மேற்கு வங்கத்தில் மட்டுமின்றி நாட்டின் பல மாநிலத் தேர்தல்களில் மம்தாவின் திரிணமூல் சமீபகாலமாக போட்டியிட்டு வருகிறது. தற்போது கூட, கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சி போட்டியிட்டது. இந்நிலையில், மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் திரிணமூல் காங்கிரஸ் போட்டியிடாதது குறித்து … Read more

‘தற்பொழுது உள்ள இயக்குநர்கள் தங்களின் சாதி, மதங்களை அடையாளப்படுத்துகிறார்கள்” – அமீர்

தற்போது வரும் இயக்குநர்கள், திரைப்படங்களில் தங்களது சாதி, மதங்களை அடையாளப்படுத்துவதை விரும்புகின்றனர் என்று இயக்கு அமீர் தெரிவித்துள்ளார். இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தங்கம் ஆகியோர் இணைந்து எழுதியுள்ள கதையை, இயக்குநர் அமீர் ‘இறைவன் மிகப் பெரியவன்’ என்ற பெயரில் திரைப்படமாக இயக்குகிறார். இதற்கான அறிமுக விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் வெற்றிமாறன், கரு.பழனியப்பன், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தப் படத்தில் சூரி நடிக்கிறார்.  இந்த விழாவில் பேசிய … Read more

தாமிரபரணி ஆற்றில் குப்பைகளை சுத்தம் செய்து வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பரப்புரையில், நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள குப்பை கழிவுகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு நூதன பிரசாரத்தில் ஈடுபட்டார் பாஜக வேட்பாளரொருவர். திருநெல்வேலி மாநகராட்சி 30வது வார்டில் மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் பாஜக வேட்பாளர் மேகநாதன் வாக்குகளை கேட்டு இன்று வழக்கப்போல பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் தனது ஆதரவாளர்களுடன் துண்டுப்பிரசுரம் கொடுத்து `மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வேன்’ என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்துக்கு இடையே தாமிரபரணி ஆற்றங்கரையில் … Read more

அமெரிக்காவுக்கு சென்ற கப்பலில் இருந்து கேரள சமையல் கலைஞர் மாயம்! அதிர்ச்சியில் உறவினர்கள்

தென் ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்காவுக்கு சென்ற சரக்குக் கப்பலில் பணிபுரிந்த இந்திய ஊழியர் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் ஜஸ்டின் குருவில்லா (28). இவர் கடந்த 4 ஆண்டுகளாக ‘எம்.டி. ஸ்ட்ரீம் அட்லாண்டிக்’ என்ற சரக்கு கப்பலில் சமையல் கலைஞராக பணிபுரிந்து வந்தார். இந்த கப்பலானது கடந்த 31-ம் தேதி தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் இருந்து புறப்பட்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஜஸ்டின் குருவில்லா நாள்தோறும் … Read more

மூன்றாம் பிறை முதல் 96 வரை.. காதலில் தோற்றாலும் காவியங்களாக மாறிய தமிழின் 10 படங்கள்!

காதலுக்கு எப்போதுமே முன்னுரை தேவை இல்லை. கோபம், விருப்பு, வெறுப்பு, ஆணவம் உள்ளிட்ட உணர்ச்சிகளைவிட, ஆண் – பெண் ஆகிய இருபாலருக்கும் இடையே உருவாகும் காதல் என்ற உணர்வு, எத்தனை எதிர்ப்புகளை சந்தித்தாலும் இன்றளவும் மிக உன்னதமாகவே கருதப்படுகிறது. அது வெற்றியாக அமைந்தாலும் சரி, தோல்வியாக அமைந்தாலும் சரி. சங்கக் காலம் முதல் இன்றுவரை காதலை சொல்லும் விதம் தான் மாறியிருக்கிறதே தவிர, காதல் உணர்வு அழியவில்லை. அந்தக் காதலை மையமாக வைத்து உருவான தமிழ்ப் படங்களில் … Read more

“பிறரை குறைசொல்லி வாக்கு சேகரித்தால் வரும் பாதகத்தை உணர்ந்தவன் நான்”- ராஜேந்திர பாலாஜி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பரப்புரையின்போது, யாரையும் குறை சொல்லி வாக்கு கேட்க வேண்டாம் எனவும், அதன் பின்னணியை அனுபவப்பூர்வமாக உணர்ந்தவன் தான் எனவும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார். தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையல் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சிவகாசி மாநகராட்சியில் போட்டியிடக்கூடிய 48 அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார். கூட்டத்துக்குப் … Read more

பாஜக ஆட்சியில்தான் இஸ்லாமிய பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் – பிரதமர் மோடி பேச்சு

“பாஜக ஆட்சியில்தான் இஸ்லாமிய பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்” என்று உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசினார். உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த 10-ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது. இந்த சூழலில், கான்பூரில் நடைபெற்ற பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது: “ஒருகாலத்தில், உத்தரப் பிரதேசத்தில் இஸ்லாமிய பெண்கள் பள்ளி, … Read more