வெளியானது `பீஸ்ட்’ படத்தின் `அரபிக் குத்து’ ஹலமதி ஹபீபோ பாடல்! குஷியில் விஜய் ஃபேன்ஸ்!

நடிகர் விஜயின் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தின் முதல் பாடலான `ஹலமதீ ஹபீபோ’ எனும் அரபிக் குத்து பாடல் தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் விஜய், ’மாஸ்டர்’ திரைப்பட வெற்றிக்குப்பிறகு, `டாக்டர்’ பட இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் நிலையில், இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் முதல் பாடல் … Read more

மயிலாடுதுறை: காதலர் தினத்தில் கல்யாணம் முடிந்த கையோடு எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சமடைந்த ஜோடி

காதலர் தினத்தில் திருமணம் செய்துகொண்டு எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த தம்பதியினருக்கு பாதுகாப்பு அளிக்க எஸ்.பி உத்தரவிட்டுள்ளார். மயிலாடுதுறை அருகே சீர்காழி மாதானத்தை சேர்ந்த சிவசண்முகம் என்பவர், குமரக்கோட்டம் பகுதியைச் சேர்ந்த விஜய லட்சுமி என்பவரை கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இருவரும் தங்களது பெற்றோரிடம் திருமணம் செய்துவைக்க கேட்டதற்கு விஜயலட்சுமியின் வீட்டார் மறுத்துவிட்டனர். இந்நிலையில், இன்று காலை இருவரும் வைத்தீஸ்வரகோயில் மாரியம்மன் சன்னதிக்குச் சென்று மாலை மாற்றி தாலிகட்டி திருமணம் செய்து கொண்டனர். … Read more

அமைதியாக நடைபெறும் கோவா தேர்தல் – புதிய கட்சிகளால் எகிறும் எதிர்பார்ப்பு

40 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட கோவாவுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மாலை 6 மணிக்கு தேர்தல் நிறைவடைய உள்ளது.   ஒட்டுமொத்தமாக தேர்தல் களத்தில் 301 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இத்தேர்தலில் மாநிலத்தை ஆளும் பாஜக தனித்து களம் காண்கிறது. காங்கிரஸ் கட்சி 37 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. மேலும், அதன் கூட்டணிக் கட்சியான கோவா முன்னேற்ற கட்சி மூன்று தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஆம் ஆத்மி கட்சி … Read more

இளையராஜா இசையமைக்கும் 1422 -வது படம் : சர்வதேச அளவில் இந்திய – ஆங்கில மொழிகளில் உருவாகிறது

இளையராஜா இசையமைக்கும் 1422-வது படமாக ‘ஏ பியூட்டிஃபுல் பிரேக்கப்’ இந்திய – ஆங்கில மொழிகளில் உருவாகியுள்ளது. சுவாரஸ்யத்தை உருவாக்கும் விதத்தில், இன்று 14.02.2022 காதலர் தினத்தில் இந்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இசைஞானி இளையாராஜா இசை என்றாலே, அது பல தலைமுறைகளை தாண்டியும் இன்றளவும் ரசிகர்களை ஈர்ப்பதாகவே உள்ளது. கடந்த 1975-ம் ஆண்டு முதல் திரையுலகில் இசையமைக்க துவங்கிய இளையராஜா, கிட்டத்தட்ட 50 ஆண்டுகளை நெருங்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என கிட்டத்தட்ட 9 … Read more

தஞ்சை: குத்தகை விதிகளுக்கு மாறாக கட்டப்பட்ட 4 கட்டடங்கள் இடித்து அகற்றம்

தஞ்சாவூரில் குத்தகை விதிகளுக்கு மாறாக கட்டப்பட்ட கட்டடங்கள் இடித்து அகற்றப்படுகின்றன. பழைய பேருந்து நிலையம் அருகே, குத்தகை அடிப்படையில், சுதர்சன சபா இயங்கி வந்தது. ஒப்பந்த காலம் முடிந்த நிலையில், அங்கு ஆளுங்கட்சியினர் சிலர், மதுபானக் கடை மற்றும் பார் வைத்ததாகக் கூறப்படுகிறது. மேலும் 20கோடி ரூபாய் ஒப்பந்த தொகை செலுத்தப்படாமல் இருந்துள்ளது. இதனால், இடத்தை கைப்பற்றிய மாநகராட்சி அதிகாரிகள், அங்கிருந்த 4 கட்டடங்களை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் மதிப்பு நூறு கோடி ரூபாய் … Read more

"விரைவில் மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரேவை சந்திப்பேன்" – கே.சந்திரசேகர் ராவ்

பாரதிய ஜனதாவுக்கு எதிராக வலுவான மாற்று அணி அமைப்பது தொடர்பாக மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரை விரைவில் சந்திக்க உள்ளதாக தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் பேசிய தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ், விரைவில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோரை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார். உத்தவ் தாக்கரேவை சந்திப்பதற்காக விரைவில் மும்பை செல்ல உள்ளதாக … Read more

டெல்லி: போராட்டம் நடத்தச்சென்ற தமிழக விவசாயிகள் தடுத்து நிறுத்தம்

டெல்லியில் போராட்டம் நடத்தச் சென்ற தமிழக விவசாயிகள் அங்கு ரயில் நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். நெல் மற்றும் கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்கு அடிப்படை ஆதார விலையை உயர்த்த வேண்டும், உர விலையை கட்டுப்படுத்த வேண்டும், காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தச் டெல்லி சென்றுள்ளனர். தேசிய தென்னிந்திய நதிகள் ஒருங்கிணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியிலிருந்து டெல்லி சென்ற விவசாயிகள், ஜந்தர்மந்தரில் போராட்டம் … Read more

தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு – தந்தைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவுக்கு 4 வாரத்தில் பதிலளிக்க தந்தைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தஞ்சை மாணவியின் தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து, யாரேனும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால், அதில் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என மாணவியின் தந்தை தரப்பில், உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து வழக்கினை சிபிஐக்கு மாற்றி … Read more

தேர்தல் பரிசா? சரக்கு ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட ஹாட் பாக்ஸ்கள்'

கோவையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ஹாட் பாக்ஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கோவை, சுகுணாபுரம் பகுதியில் உணவை சூடாக பராமரிக்கும் ஹாட் பாக்ஸுகளுடன் வந்த சரக்கு ஆட்டோவை, பொதுமக்கள் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற தேர்தல் பறக்கும் படையினர், வாகனத்தை பறிமுதல் செய்தனர். காது குத்து விழாவிற்காக ஹாட் பாக்ஸ்கள் கொண்டு வரப்பட்டதாக ஆட்டோ ஓட்டுநர் தெரிவித்துள்ளார். இருப்பினும், காவல்துறையினர் இது குறித்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே பொதுமக்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்க திமுகவினர் … Read more

இந்தியாவில் சர்வதேச பயணிகளுக்கு இன்று முதல் தளர்வுகள்

இந்தியாவில் சர்வதேச பயணிகளுக்கான கட்டுப்பாடுகளில் இன்று முதல் தளர்வுகள் அமலுக்கு வருகின்றன. கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து, வெளிநாட்டு பயணிகளுக்கான பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, வெளிநாட்டு பயணிகள் இனி 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுத்திக்கொள்ள தேவை இல்லை. மேலும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட மாட்டாது. ஆனால், பயணிகள் புறப்படுவதற்கு 72 மணிநேரம் மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழை பதிவேற்றம் செய்யவேண்டும். வெளிநாட்டில் இருந்துவரும் பயணிகள் உடல்நிலையை சுயமாக 14 நாட்கள் … Read more