"அரசியலமைப்பின் பொருள் தெரியாமல் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுகிறார்" – அண்ணாமலை

இந்திய அரசியலமைப்பின் பொருள் தெரியாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுவதாக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார். அப்போது மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய அவர், மத்திய அரசை குறை சொல்வது மட்டுமே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நோக்கமாக கொண்டுள்ளதாக விமர்சித்தார். மேலும் அரசியலமைப்பு சட்டத்தின் பொருள் தெரியாமல், … Read more

புதுச்சேரி: தேசிய அளவிலான கைவினை, உணவு கண்காட்சி – ஆர்வமுடன் கண்டு ரசிக்கும் மக்கள்

புதுச்சேரியில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான கைவினை, உணவு மற்றும் கலாசாரத்தின் தனித்துவமான சங்கம கண்காட்சி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மத்திய சிறுபான்மை அமைச்சகத்தின் சார்பில் நடைபெறும் கண்காட்சியில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கைவினை கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். அந்ததந்த மாநிலங்களின் அடையாளங்களை பிரதிபலிக்கும் கைவினைப் பொருட்களை கலைஞர்கள் காட்சிப்படுத்தியுள்ளன. மேலும் வெவ்வேறு மாநிலங்களின் உணவு வகைகளும் ஒரே இடத்தில் கிடைப்பதால் அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்து வருகின்றனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

பயிற்சியின்போது மயங்கிவிழுந்த கால்பந்தாட்ட பயிற்சியாளர்: சோகத்தில் ரயில்வே அணி !

தமிழ்நாடு ரயில்வே கால்பந்தாட்ட வீரர் பயிற்சி மேற்கொண்டபோது மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி பகுதியைச் சேர்ந்தவர் அமிர்தராஜா(45). ஐசிஎப்பில் பணிபுரிந்து வந்தார். கால்பந்து விளையாட்டு வீரர். ரயில்வே கால்பந்தாட்ட அணியில் உள்ளார். நேற்று நொளம்பூர் பகுதியில் உள்ள மைதானம் ஒன்றில் கால்பந்தாட்ட பயிற்சி மேற்கொண்டு வந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். அவருடன் பயிற்சி எடுத்த சகவீரர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். … Read more

120 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட ராமானுஜர் சிலை குடியரசு தலைவரால் திறப்பு

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், 120 கிலோ எடைகொண்ட தங்கத்தாலான அவரது உருவச் சிலையை திறந்து வைத்தார். ராமானுஜர் போன்ற புனிதர்களும், தத்துவவாதிகளும் நாட்டின் கலாச்சார அடையாளத்தை உருவாக்கி பேணி பாதுகாத்து அது தொடர்வதையும், நாட்டின் பண்பாட்டு ஒற்றுமையையும் உறுதி செய்திருப்பதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய ராம்நாத் கோவிந்த், ராமானுஜரின் பக்தி மார்க்கம் தமிழகத்தின் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீரங்கத்திலிருந்து … Read more

"எங்கள் சாவுக்கு யாரும் காரணமில்லை" – கடிதம் எழுதிவிட்டு அக்கா, தம்பி எடுத்த விபரீத முடிவு

விழுப்புரத்தில் அக்கா தம்பி தூக்கிட்டு தற்கொலை செய்தநிலையில், 5 நாள் ஆன நிலையில் உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் கேகே சாலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர்கள் பிரமிளா (52) சுசீந்திரன் (50). அக்காள் தம்பியான இருவரும், சினிமா துணை நடிகையிடன் உதவியாளராக பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து வறுமை காரணமாக விழுப்புரத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்த இவர்கள் திடீரென இறந்த செய்தி அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மூலம் போலீசாருக்கு தெரியவந்தது. … Read more

“மம்தா போன் செய்து ஆளுநரின் அத்துமீறல் குறித்து கவலை தெரிவித்தார்” – மு.க.ஸ்டாலின் ட்வீட்

மாநிலங்களின் உரிமைகளைக் காக்க திமுக துணை நிற்கும் என மேற்குவங்க முதல்வரிடம், தமிழக முதல்வர் உறுதியளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு போன் செய்த மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மேற்கு வங்க ஆளுநர் செயல்பாடு குறித்து பேசினார். அப்போது மம்தா பானர்ஜியிடம் பேசிய மு.க.ஸ்டாலின், மாநிலங்களின் உரிமைகளைக் காக்க திமுக துணை நிற்கும் என உறுதியளித்துள்ளதாக கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் ஆளுநர்கள் அதிகாரத்தை … Read more

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் திடீரென பெய்தமழையால் காய வைக்கப்பட்டிருந்த நெல் மணிகள் நனைந்தன. மேலும், அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்களும் நனைந்தன. இந்தச் சூழலில் தமிழகத்தில் நாளை முதல் படிப்படியாக மழை குறையும் என்றும், டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே … Read more

உச்சத்தை தொட்டது சர்ச்சை: பிரசாந்த் கிஷோரின் 5 ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்தார் மம்தா!

பிரசாந்த் கிஷோர் தலைமையில் செயல்படும் I-PAC நிறுவனத்துடன் திரிணாமுல் காங்கிரஸ் ஏற்படுத்திய 5 ஆண்டு கால ஒப்பந்தத்தை மம்தா பானர்ஜி ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவன ஆலோசனையை பெற்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தில் ஆட்சியை தக்கவைத்தது திரிணாமுல் காங்கிரஸ். இந்த வெற்றியால் பல்வேறு மாநிலங்களில் கட்சி வேரூன்ற மம்தா பானர்ஜி விரும்பிய நிலையில், பிரசாந்த் கிஷோர் ஆலோசனையால் கோவா மாநிலத்தில் கட்சி களமிறங்கியது. ஆனால், எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என … Read more

10, 12ம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாதாள்கள் சமூக வலைதளங்களில் வெளியானதாக புகார்

10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் முன்கூட்டியே வாட்ஸ் அப், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாவதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக இந்த ஆண்டுக்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படவில்லை. அதற்கு பதிலாக இரண்டு திருப்புதல் தேர்வு நடத்த திட்டமிட்டு தற்போது முதலாவது திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஒரு சில பள்ளிகள் மூலம் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் … Read more

சுரண்டை அருகே கண்டறியப்பட்ட 800 ஆண்டுகள் பழமையான பாண்டியர் கால உருளை கல்வெட்டு

சுரண்டை அருகே உள்ள நொச்சிகுளத்தில் கண்டறியப்பட்ட 800 ஆண்டு பழமையான உருளை வடிவ கல்வெட்டை மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி வரலாற்று குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள நொஞ்சிகுளம் பகுதியைச் சேர்ந்த சின்ன வீரசின்னு என்பவரின் மகன் வீரமல்லையா. இவர், மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பிஏ வரலாறு பயின்று வருகிறார். இந்நிலையில், அவரது ஊரில் திருமலையாண்டி என்பவரின் மகன் அப்பையாவின் இடத்தில் உருளை வடிவ கல்லில் எழுத்துகள் … Read more