அடுத்த வாரத்தில் இந்தியா வருகிறது கடைசி 3 ரஃபேல் போர் விமானங்கள்

பிரான்சில் இருந்து கடைசி 3 ரஃபேல் போர் விமானங்கள் அடுத்த வாரத்தில் இந்தியாவுக்கு வரவுள்ளன. பிரான்சிடம் இருந்து சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாயில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க 2016ஆம் ஆண்டில் இந்தியா ஒப்பந்தம் செய்தது. அதன்படி, 2020ல் முதலாவதாக 5 போர் விமானங்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு விமானப் படையில் சேர்க்கப்பட்டன. அதன் பிறகு பல குழுக்களாக இதுவரை மொத்தம் 33 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவுக்கு வந்துள்ளன. மீதமுள்ள 3 போர் விமானங்கள் … Read more

"இந்த செயல் நெறிமுறைகளுக்கு எதிரானது" – மு.க.ஸ்டாலின் கண்டனமும் மே.வ. ஆளுநரின் விளக்கமும்

மேற்கு வங்க சட்டப்பேரவை கூட்டத் தொடரை ஒத்திவைத்து அந்த மாநில ஆளுநர் ஜகதீப் தங்கர் பிறப்பித்த உத்தரவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க அரசின் பரிந்துரைப்படியே கூட்டத் தொடரை ஒத்திவைத்ததாக மாநில ஆளுநர் ஜகதீஷ் தங்கர் விளக்கம் அளித்துள்ளார். ட்விட்டரில் அறிக்கை வெளியிட்ட மேற்கு வங்க ஆளுநர், அம்மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஒத்தி வைப்பதாக அறிவித்தார். இதனால், மேற்கு வங்க சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குவதில் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. … Read more

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி வழக்கு – ராஜேந்திர பாலாஜியிடம் 10 மணி நேரம் விசாரணை

பண மோசடி வழக்கில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் காவல்துறையினர் 10 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்கு பதிவு செய்த விருதுநகர் மாவட்டம் குற்றப்பிரிவு காவல்துறையினர், கடந்த 5ஆம் தேதி அவரை கைது செய்தனர். உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ராஜேந்திர பாலாஜி, நேற்று … Read more

"மிக்கி மவுஸ்" என காந்தி செல்லமாக அழைத்த சரோஜினி நாயுடு – பிறந்த நாள் பகிர்வு

‘இந்தியாவின் நைட்டிங்கேல்,’ ‘கவிக்குயில்’ என்று புகழப்பட்ட கவிஞர், எழுத்தாளர், சுதந்திரப் போராட்ட வீராங்கனை சரோஜினி நாயுடு பிறந்த தினம் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் 10. * சரோஜினி நாயுடு 1879 பிப்ரவரி 13 அன்று ஹைதாராபாத்தில் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது பெண் தலைவரும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுனரும் ஆவார். சரோஜினி நாயுடுவின் பிறந்த நாள் இந்தியாவில் தேசிய மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. * சென்னை பல்கலைக்கழக மெட்ரிக் தேர்வில் … Read more

லீனா மணிமேகலையின் பாஸ்போர்ட் விடுவிக்கப்பட்ட விவகாரம் – சுசி கணேசன் வழக்கு தள்ளுபடி

கவிஞர் லீனா மணிமேகலையின் பாஸ்போர்ட்டை விடுவிக்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய, இயக்குநர் சுசி கணேசனுக்கு அனுமதி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. தன் மீது பாலியல் புகார் கூறிய லீனா மணிமேகலைக்கு எதிராக இயக்குநர் சுசிகணேசன் தொடர்ந்த வழக்கில், அவரின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. ஆராய்ச்சி பணிக்காக பாஸ்போர்ட் வழங்கக்கோரி லீனா மணிமேகலை தொடர்ந்த மற்றொரு வழக்கில், பாஸ்போர்ட்டை விடுவிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய … Read more

வண்டலூர் பூங்காவில் திருடு போன அணில் குரங்குகள் மீட்பு – 4 பேர் கைது

சென்னை வண்டலூர் பூங்காவில் 2 ஆண் அணில் குரங்குகளை திருடிய பூங்கா ஊழியர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வண்டலூர் உயிரியல் பூங்காவில் அரிய வகை உயிரினமான 2 அணில் குரங்குகள் கடந்த 8-ம் தேதி காணாமல் போயின. இது தொடர்பாக ஓட்டேரி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. இதில், பூங்காவின் ஒப்பந்த ஊழியரான சத்தியவேல் என்பவர், அவரது நண்பர் ஜானகிராமனுடன் சேர்ந்து, கூண்டு கம்பிகளை அறுத்து அணில் குரங்கை … Read more

'ஹிஜாப் விவகாரம் சர்ச்சையல்ல, சதி' – கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான்

‘ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மதத்தில் கட்டாயமானதில்லை’ என கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் தெரிவித்துள்ளார். பள்ளிகளில் சீக்கியர்கள் தலைப்பாகை அணிவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதுபோல் ஹிஜாப்பிற்கும் அனுமதி அளிக்கப்படவேண்டும் என வலியுறுத்தப்படுவது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான், தலைப்பாகை சீக்கிய மத்தில் ஒரு அங்கம் என்றும், ஹிஜாப் அதுபோன்றதல்ல என கூறியுள்ளார். ஹிஜாப் குறித்து இஸ்லாமியர்களின் புனித நூலான குரானில் ஆறேழு இடங்களில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அது பெண்ணின் உடை நடைமுறையாக … Read more

ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, ராமேஸ்வரம் மீனவர்கள் 12பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து, நேற்று 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றுள்ளனர். இந்நிலையில், தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்களின் இரண்டு விசைப்படகுகள் மற்றும் அதிலிருந்த 12 மீனவர்களையும் சிறை பிடித்துள்ளனர். கடந்த 8ஆம் தேதி கைது செய்யப்பட்ட 11மீனவர்களை விடுவிக்கக் … Read more

திரிணாமுல் காங்கிரஸ் தேசிய கட்சி நிர்வாகிகள் குழு கலைப்பு – மம்தா அதிரடி

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய கட்சி நிர்வாகிகள் குழுவை கலைத்து அக்கட்சியின் தலைவரும், மேற்குவங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர் புதிதாக 20 பேர் கொண்ட செயற்குழு ஒன்றை அவர் அறிவித்துள்ளார். திரினாமுல் காங்கிரஸ் கட்சியில் மூத்தத் தலைவர்களுக்கும், இளைய தலைமுறையினருக்கும் கருத்து வேறுபாடுகள் நிலவி வந்த சூழலில் கட்சியின் தேசிய நிர்வாகிகள் குழுவை கலைத்து தொடர்ந்து தனது கட்டுப்பாட்டிலேயே இருப்பதை உறுதி செய்துள்ளார் மம்தா பான்ர்ஜி. தேசிய நிர்வாகிகளை அவர் பின்னர் அறிவிப்பார் … Read more

முடித்திருத்தம் செய்வதில் சாதிய பாகுபாடு – உண்மையை உடைத்த புதுக்கோட்டை பட்டியலின மக்கள்

புதுக்கோட்டை மாவட்டம் புதுப்பட்டி கிராமத்தில் முடி திருத்தம் செய்வதில் சாதிய பாகுபாடு நிலவுவதாகவும், காலம்காலமாக தங்களுக்கு கிராமத்தில் உள்ள சலூன்களில் முடி திருத்தம் செய்வதில்லை என்று பட்டியலின மக்கள் கோட்டாட்சியரிடம் தெரிவித்துள்ளனர். புதுப்பட்டி, புதுக்கோட்டை புதுப்பட்டி கிராமத்தில் பட்டியலினத்தவர்களுக்கு சலூன் கடைகளில் முடி திருத்தம் செய்வதில்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கில் 4 வாரத்தில் பதிலளிக்க ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். உத்தரவுக்கு பின் புதிய தலைமுறை நடத்திய கள ஆய்வில் மக்களின் கருத்துகளை … Read more