கடலில் தத்தளிப்போரை 'ட்ரோன்' வசதியுடன் மீட்க புதிய திட்டம் – பெசன்ட் நகரில் சோதனை ஓட்டம்

கடலில் தத்தளிப்போரை பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ட்ரோன் சோதனை ஓட்டமானது பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்றது. சென்னையில் கூட்டங்களை கண்காணித்து குற்றங்களை குறைப்பதற்காகவும், கடற்கரையில் பாதுகாப்பு பணியை பலப்படுத்தவும் ரூ.3.6 கோடி மதிப்பில் 9 ஆளில்லா விமானங்கள் தமிழக காவல்துறையால் வாங்கப்பட்டது. மூன்று வகையான ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) வாங்கப்பட்டுள்ளது. Quick response என்ற வகையில் உடனடியாக உதவுவதற்கு ஏதுவாக HD கேமராக்கள் மற்றும் இரவு நேரமும் காட்சிகளை பதிவு செய்யும் வகையிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டது. பொதுமக்களுக்கு … Read more

ஒரு பெட்டி 31 ஆயிரம் ரூபாய்; ஏலம் எடுக்க போட்டா போட்டி.. தெறிக்கவிட்ட ’அல்போன்சா’ மாம்பழம்

மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் ஒரு பெட்டி மாம்பழம் 31 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட விநோதம் நிகழ்ந்துள்ளது. சந்தைக்கு வரும் முதல் மாம்பழ பெட்டியை ஏலம் எடுத்தால் செல்வம் கொழிக்கும் என்பது புனே நகர வியாபாரிகளின் நம்பிக்கை. இந்நிலையில் சந்தைக்கு வந்த ரத்னகிரி அல்போன்சோ வகை மாம்பழத்தின் முதல் பெட்டி 5 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் அறிவிக்கப்பட்டது. இதில் கடும் போட்டி நிலவியதை அடுத்து யுவராஜ் கச்சி என்பவர் 31 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். கடந்த … Read more

நர்சரி, மழலையர் பள்ளிகளை திறக்க அனுமதி – பொதுமுடக்கத்தில் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கொரோனா பொது முடக்கம் நீட்டிக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்ததை அடுத்து, மாநிலத்தில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். கொரோனா ஊரடங்கு உத்தரவு வரும் 15-ம் தேதியுடன் முடிவடைவதை அடுத்து இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கூடுதல் தளர்வுடன் கொரோனா பொதுமுடக்கத்தை நீட்டிக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். இதுதொடர்பாக … Read more

மும்பை: மகனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்து 7-வது மாடியில் இருந்து தூக்கி வீசிய மனைவி

மும்பையில் மகனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்து 7-வது மாடியில் இருந்து தூக்கி வீசிய மனைவியை போலீஸார் கைது செய்துள்ளனர். மும்பையின் புறநகர் பகுதியான அம்போலி பகுதியைச் சேர்ந்தவர் சாந்தனு கிருஷ்ணா (52). இவர் தனது மனைவி கீதா மற்றும் மகனுடன் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார். இதனிடையே, சமீபகாலமாக சாந்தனுவுக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று இரவு சாந்தனுவின் மனைவி கீதா, காவல் நிலையத்திற்கு போன் செய்து, … Read more

‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு – கவனத்தை ஈர்த்த டீசர்

விஜய்சேதுபதி, சமந்தா, நயன்தாரா இணைந்து நடித்துள்ள ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் ஏப்ரல் 28-ம் தேதி திரையிரங்குகளில் வெளியாகிறது. ‘நானும் ரௌடிதான்’ திரைப்படத்திற்குப் பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய்சேதுபதி, நயன்தாரா கூட்டணி இணைந்துள்ள படம் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’. இவர்களுடன் சமந்தாவும் இந்தப் படத்தில் நடித்துள்ளார். கண்மணி கதாபாத்திரத்தில் நயன்தாராவும், கதிஜா கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடித்துள்ளனர். இவர்கள் இருவரையும் காதலிப்பவராக விஜய்சேதுபதி இந்தப் படத்தில் நடித்துள்ளார். ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தை … Read more

தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாக 3 பேர் வீடுகளில் என்ஐஏ சோதனை

தஞ்சையில் மூன்று வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. கிலாபத் இயக்கத்தை சேர்ந்த அப்துல் காதர் என்பவர், ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறி, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவரை கைது செய்து கடந்த ஆண்டு சிறையில் அடைத்தனர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் 4 மாதங்களுக்கு முன்பு, மண்ணை பாபா என்பவரை கைது செய்து … Read more

இந்தியாவில் 50 ஆயிரத்திற்கு குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு – முழு விவரம்

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு சரிந்து வரும் நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 50,407 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியாவில் ஜனவரி மாதத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா வைரஸ் பாதிப்பு, தற்போது நாளுக்கு நாள் மளமளவென குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் நாடு முழுவதும் 67 ஆயிரத்து 84 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நேற்று இந்த எண்ணிக்கை 58 ஆயிரத்து 77 ஆக சரிந்தது. இந்நிலையில் இன்று புதிதாக 50,407 பேருக்கு தொற்று … Read more

‘சாத்தானே இங்க இருக்குடா ’ – ‘காமன் மேன்’ பட கிளிம்ப்ஸில் உறைய வைக்கும் விக்ராந்த்

இயக்குநரும், நடிகருமான சசிகுமாரின் நடிப்பில் தயாராகி வரும் ‘காமன் மேன்’ படத்தில், நடிகர் விக்ராந்த் சாத்தானாக மிரட்டியுள்ள கிளிப்ம்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது. இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் நடிகர் சசிகுமார் ‘காமன் மேன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தது. இந்தப் படத்தில் சசிகுமார், திரைப்பட சவுண்ட் இன்ஜினீயராக நடிக்கிறார். கன்னட திரையுலக நடிகை ஹரிப்பிரியா மற்றும் … Read more

'பிரசாரத்துக்கு ஆள் சேர்க்கும் 'குட்டி யானை' புக் செய்ற பிரச்னைதான்'-வாசகர்களின் கமெண்ட்ஸ்

BabuMohamed நகர்ப்புற.. உள்ளாட்சிதேர்தல்ல நாங்க வந்தா என்ன செய்யப்போறோம்… அதைவிட்டுட்டு. அதிமுக, திமுக.. சர்ச்சை…போரா.. இருக்கு.. ஆனா.. திமுக…ஏதோ.. ஒண்ணுரெண்டு செஞ்சுட்டு.. உள்ளாட்சியிலும்.. நல்லாட்சி.. தொடர..பிரச்சாரம்… அது.. ஏத்துக்கமுடியலை..! தனி ஒருவன் உள்ளூரில் கூட்டம் கூட்ட குட்டி யானை வண்டி வைத்திருப்பவரை முன்கூட்டி புக் செய்யும் பிரச்சனைக்கு தான் முக்கியதுவம் தருகிறார்கள்! K.Santhosh Kumar ஆம், தள்ளப்படுகிறது…. உள்ளூர் பிரச்னைகள் மட்டும் அல்ல நமது வாழ்க்கை தரமும்… உள்ளூர் பிரதிநிதிகளை உள்ளூர் பிரச்சனைகளை தீர்வு காணும் நபராக … Read more

திருமண வரவேற்பில் மயங்கி விழுந்த பெண் மூளைச்சாவு – துயரிலும் உடல்தானம்

கர்நாடகாவில் மணக்கோலத்தில் மயங்கி விழுந்து பின்னர் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்ட பெண்ணின் உடல் உறுப்புகளை அத்தகைய துயரத்திற்கு இடையிலும் பெற்றோர் தானமாக அளித்து பாராட்டுதலை பெற்றுள்ளனர். இந்த தகவலை ட்விட்டரில் கர்நாடக அமைச்சர் சுதாகர் பதிவிட்டுள்ளார். கோலார் மாவட்டத்தின் சீனிவாசப்பூர் பகுதியைச் சேர்ந்த 26 வயது சைத்ரா என்ற பெண்ணின் திருமண வரவேற்பில் இந்த சோக நிகழ்வு நடந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சைத்ரா, மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிய நிலையில், இதயத்தை … Read more