"உதயநிதி பேர மிஸ்யூஸ் பண்ணக்கூடாதுன்னு நான் க்ளியரா இருக்கேன்" – விஷ்ணு விஷால் பேட்டி

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகியுள்ள ‘எஃப்.ஐ.ஆர்’ வரவேற்பையும் கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது. நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் வெற்றி கண்ட உற்சாகத்தில் இருக்கும் விஷ்ணு விஷால், புதிய தலைமுறை டிஜிட்டலுக்காகப் பிரத்யேகமாகப் பேசினார். கேள்வி : நடிப்பதோடு தயாரிப்பாளராகவும் இந்தக் கதையை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்? பதில் : ”இயக்குநர் மனு ஆனந்த் கெளதம் மேனனிடம் பணிபுரிந்தவர். நண்பர் மூலம் அறிமுகமாகி என்னிடம் கதை சொன்னார். அவர் முதலில் சொன்னக் கதையை நான் தவிர்த்துவிட்டேன். ஆனால், அவர் கதை சொல்லும் விதம் பிடித்திருந்ததால், ’வேறு … Read more

"கருணாநிதியின் அதே 'டெக்னிக்' எந்த மாற்றமும் இல்லை" – பாஜக அண்ணாமலை

சட்டசபை தேர்தலில் திமுக கொடுத்த 517 வாக்குறுதிகளில் 7 வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றியுள்ளது என கரூரில் பாஜக தேர்தல் பரப்புரையில் அண்ணாமலை குற்றம்சாட்டினார். கரூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு வேலாயுதம்பாளையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார் அப்போது. பொங்கல் தொகுப்பை உருப்படியாக கொடுக்க முடியாதது தமிழக அரசு. ஆனால், கடைகோடி மக்களுக்கும் கொரோனா தடுப்பூசியை செலுத்தியது மத்திய அரசு. தமிழகத்தில் 14 மருத்துவக் கல்லூரிகள் திமுகவினருடையது. … Read more

‘லத்தி’ சண்டைக் காட்சி படப்பிடிப்பில் விஷாலுக்கு எலும்பு முறிவு – வீடியோ வெளியீடு

‘லத்தி’ படப்பிடிப்பின்போது நடிகர் விஷாலுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால், தற்போது கேரளாவில் சிகிச்சை பெற்று வருகிறார்.  கடந்த ஜனவரி 26-ம் தேதி வெளியாக இருந்த ‘வீரமே வாகை சூடும்’ படம், கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் ஊரடங்கு தளர்த்தப்பட்டதை அடுத்து கடந்த 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு நடிகர் விஷால், அறிமுக இயக்குநர் ஏ.வினோத்குமார் இயக்கத்தில் உருவாகி வரும்‘லத்தி’படத்தின் 3-வது கட்ட படப்பிடிப்பில் பங்கேற்றார். ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த படப்பில் … Read more

சென்னை: வளசரவாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 26 சவரன் தங்க நகை கொள்ளை

வளசரவாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 26 பவுன் தங்கநகை கொள்ளை போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர், ராஜாஜி தெருவைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருச்சிக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் திருச்சியில் இருந்து திரும்பிய அவர், வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது … Read more

‘டைனோசர்களும், மனிதர்களும் ஒன்னா வாழமுடியாது’- ‘ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன்’ ட்ரெய்லர்

டைனோசர்களை மையமாக வைத்து வெளிவரும் ‘ஜுராசிக் வேர்ல்ட்’ பட வரிசையில், அடுத்ததாக ‘ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன்’ ட்ரெயிலர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 1990-கள் முதல் வெளிவரும் ‘ஜூராசிக்’ பட சீரிஸ்க்காகவே தனி ரசிகர் பட்டாளம் உலகம் முழுவதும் உண்டு. முதன்முதலாக ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்,  இயக்கி, கடந்த 1993-ம் ஆண்டு வெளியான ‘ஜுராசிக் பார்க்’ திரைப்படம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அதிலும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த படமாக இன்றளவும் இருந்து வருகிறது.  … Read more

சென்னையில் இருந்து எந்த ஊருக்கு செல்ல இருக்கிறது புல்லட் ரயில்? அறிக்கை தயார்!

சென்னை – பெங்களூரு – மைசூரு நகரங்களை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடங்களை உருவாக்குவது குறித்து விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து வருவதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. டெல்லி – வாரணாசி, மும்பை – நாக்பூர், மும்பை – ஐதராபாத் உள்ளிட்ட 8 புதிய புல்லட் ரயில் வழித்தடங்களை உருவாக்கவும் ஆய்வு மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியுள்ளார். மும்பை – அகமதாபாத் வழித்தடத்தில் புல்லட் … Read more

கோயில் நிலங்களின் வாடகை வசூல் நடவடிக்கை – அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு

கோயில் நிலங்களிலிருந்து வர வேண்டிய 2,390 கோடி ரூபாய் வாடகை பாக்கியை வசூலிக்க தமிழக இந்து சமய அறநிலையத்துறை எடுத்து வரும் நடவடிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள், இடங்கள், கட்டடங்கள் ஆகியவற்றின் வாடகை பல ஆண்டுகளாக வசூலிக்கப்படவில்லை என வெங்கட்ராமன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில், வாடகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை … Read more

குழந்தையின் வாய் வழியே குத்தி முதுகு வழியே வெளிவந்த கம்பி – 45 நிமிடத்தில் அகற்றி சாதனை

கட்டுமான பணி நடந்த பகுதியில் விளையாடியபோது தவறி விழுந்த 2 வயது குழந்தையின் வாயில் கான்கிரீட் கம்பி குத்திய நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் 45 நிமிடங்களில் அறுவை சிகிச்சை செய்து கம்பியை அகற்றி குழந்தையை காப்பாற்றியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், திம்மாவரத்தை சேர்ந்தவர் குழந்தையேசு(வயது 40). இவரது மனைவி செலின். இவர்களுக்கு 2 வயதில் ஆல்வின் ஆன்டோ என்ற ஆண் குழந்தை உள்ளது. இவர்கள் வீட்டின் அருகே கட்டுமான பணி … Read more

“மனதளவில் ரன்பீருடன் திருமணம் ஆகிவிட்டது” – ஆலியா பட்

தனக்கும், ரன்பீர் கபூருக்கும் ஏற்கெனவே மனதளவில் திருமணம் நடந்துவிட்டதாக பாலிவுட் நடிகை ஆலியா பட் கூறியுள்ளார். பாலிவுட்டின் பிரபல நடிகர் ரிஷிகபூரின் மகனான ரன்பீர் கபூர், பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர், பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோனே, கத்ரீனா கைஃப் உள்ளிட்ட நடிகைகளுடன் காதலில் இருந்து வந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில், பாலிவுட்டின் பிரபல இயக்குநரான மகேஷ் பட்டின் மகளும், முன்னணி நடிகையுமான ஆலியா பட்டும், ரன்பீர் கபூரும் கடந்த 2018-ம் ஆண்டு முதல் காதலித்து … Read more

"பாஜகவின் வேலை தமிழகத்தில் பலிக்காது; இது பெரியார் மண்"- கனிமொழி பேச்சு

கர்நாடகாவில் பள்ளி மாணவிகளின் உடை அணியும் உரிமையை கூட பாஜக நிர்பந்திக்கிறது; ஆனால், இதனை தமிழகத்தில் அவர்கள் செய்ய முடியாது; ஏனெனில் இது பெரியார் மண் என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நெல்லை மாநகராட்சியில் 55 வார்டுகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக எம்.பி. கனிமொழி பரப்புரை மேற்கொண்டார். மாநகராட்சியின் 17-வது வார்டான பழைய பேட்டை பேருந்து நிலையம் முன்பாக திமுக எம்.பி. கனிமொழி பரப்புரை … Read more