அனைத்து ரயில்களிலும் மீண்டும் தொடங்குகிறது உணவு விநியோகம்

இந்தியாவில் உள்ள அனைத்து ரயில்களிலும் உணவு விநியோகம் வரும் 14-ம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கடந்த 2020-ம் ஆண்டு முதன்முறையாக கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இந்தத் பரவலை தடுப்பதற்காக அதே ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் ஒருபகுதியாக, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டன. இதையடுத்து, பெருந்தொற்று பரவல் ஓரளவு குறைந்ததை தொடர்ந்து ரயில் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும், வைரஸ் பரவும் அச்சத்தால், ரயில்களில் பயணிகளுக்கு … Read more

”‘ஜெய் பீம்’ ஆஸ்கர் வரை சென்றது போனஸ்தான்” – இயக்குநர் தா.செ ஞானவேல் சிறப்புப் பேட்டி

‘ஜெய்பீம்’  வெளியாகி 100 நாட்களைக் கடந்தாலும் இன்னமும் அப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் ரசிகர்கள் மத்தியில் அடங்காமல் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டுமல்லாது, வெகுஜன மக்களிடமும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தி ஆஸ்கர் தகுதிப் பட்டியலிலும் இடம்பிடித்து உலக சினிமா ரசிகர்களை உற்றுநோக்க வைத்தது. ஜெய் பீமை  உலகமெங்கும் ஒலிக்கச்செய்த இயக்குநர் தா.செ. ஞானவேலிடம் பேசினோம், ’ஜெய் பீம்’ வெளியாகி 100 நாட்கள் கடந்தப் பின்னும் இன்னும் பேசப்பட்டுக்கொண்டிருக்கிறதே… இந்த 100 நாட்களை எப்படிக் கடந்தீர்கள்? “’ஜெய் பீம்’ … Read more

தமிழகத்தில் ஒருநாளில் 3,086 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு 3,086ஆக குறைந்துள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்திருக்கிறது. தமிழகத்தில் 1,06,514 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் இன்றைய ஒருநாள் கொரோனா பாதிப்பு 3,086ஆக உள்ளது. சென்னையில் நேற்று 663 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று பாதிப்பு எண்ணிக்கை 590ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்று 25 பேர் உயிரிழந்துள்ளனர். தனியார் மருத்துவமனைகளில் 14பேரும், அரசு மருத்துவமனைகளில் 11 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 37,887ஆக உள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சைபெறுவோர் எண்ணிக்கை 66,992 … Read more

நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரிப்பு – தேசிய குற்ற ஆவண காப்பகம் சொல்வதென்ன?

நாடு முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு சைபர் குற்றங்கள் 11 சதவிகிதம் வரை அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 50 ஆயிரத்து 35 வழக்குகள் சைபர் குற்றங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது கடந்த 2019 ஆம் ஆண்டை விட 11 புள்ளி 8 சதவிகிதம் அதிகம். 2020-ல் பதிவான 50 ஆயிரத்து 35 வழக்குகளில், 30 ஆயிரத்து 142 வழக்குகள் … Read more

ஒரு நாளோட போயிருக்குமே சிம்ரன்; இப்படி பண்ணிட்டிங்களே! -மகானைக் கலாய்க்கும் சோஷியல் மீடியா

மகான் படம் பற்றிய நேர்மறை மற்றும் எதிர்மறையான கருத்துகள் கலந்தே சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகின்றன. படத்தில் இருக்கும் குழப்பங்கள் பற்றி நிறைய கேள்விகள் சீரியஸாகவும், கிண்டலாகவும் பதிவிடப்பட்டு வருகின்றன. நம் கண்ணில் பட்ட அந்த மாதிரியான ஜாலியான, அதே சமயம் நியாயமான கேள்விகளை உங்களுக்காகத் தொகுத்திருக்கிறோம். சில கேள்விகளை பலரும் கேட்டிருந்தார்கள். சிறுவன் ஒருவன் தவறு செய்கிறான். காந்தியவாதியான அவர் அப்பா அவனை அஹிம்சை வழியில் சொல்லி திருத்தாமல் அடி வெளுத்துவிடுகிறார். துப்பாக்கிக்கே அஹிம்சை போதுமென்ற … Read more

தென் தமிழக, டெல்டா மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

தென் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழக மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தென் … Read more

‘எதையும் செய்யாத மோடி வெற்றி பெறுவோம் என்பது வேடிக்கை‘ -வாசகர்களின் கமெண்ட்ஸ் #LikeDislike

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, பிப்ரவரி 10-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘சூடுபிடிக்கும் 5 மாநில தேர்தல்கள்… வெற்றி நிச்சயம் எனக்கூறும் பிரதமர்… மக்கள் யார் பக்கம்?’ எனக் … Read more

காதலர் தின ஸ்பெஷல்: அனிருத் குரலில் முகேன் ராவ் – ஆத்மிகாவின் இசை ஆல்பம்

நடிகரும், பாடகருமான முகேன் ராவ் மற்றும் நடிகை ஆத்மிகா நடிப்பில், காதலர் தினத்தையொட்டி இசை ஆல்பம் பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை அனிருத் பாடியுள்ளார். தனியார் டி.வி.யின் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 3-யில் கலந்துகொண்டு புகழ்பெற்றதுடன், அந்த சீசனின் டைட்டில் வின்னர் ஆனவர் முகேன் ராவ். மலேசியாவில் பிறந்த வளர்ந்த இவர், அங்கு பாடகராகவும், நடிகராகவும் புகழ்பெற்றவர். தற்போது தமிழ் சினிமாவிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார். இவர், நடித்த ‘வேலன்’ படம் கடந்த ஆண்டு … Read more

டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை – அதிகபட்சமாக கோடியக்கரையில் 8 செ.மீ மழைப்பதிவு

டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நாகை மாவட்டம் கோடியக்கரையில் எட்டு சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. குமரிக்கடல் பகுதியில் கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாங்குடி, திருநெய்பேர், குன்னியூர், நல்லூர், கூடூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்துவருவதால், குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. மாவட்டம் முழுவதும் பெய்து வரும் மழையினால், பல்வேறு இடங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த கதிர்கள் சாய்ந்துள்ளன. இதனால் விவசாயிகள் … Read more

ஹிஜாப் விவகாரத்தை தேசிய பிரச்னையாக மாற்ற வேண்டாம் – உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

“ஹிஜாப் விவகாரத்தை தேசிய பிரச்னையாக மாற்ற வேண்டாம்” என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு அங்குள்ள பல்வேறு கல்லூரிகளில் ஒருதரப்பு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகளுக்கு கல்லூரிகள் அனுமதி மறுத்ததால், இந்தப் பிரச்னை பூதாகரமானது. ஹிஜாபுக்கு ஆதரவு தெரிவித்து ஒருதரப்பு மாணவர்களும், எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பு மாணவர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தை முன்வைத்து சில கல்லூரிகளில் வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறின. … Read more