புனீத் ராஜ்குமாரின் கடைசிப் படமான ‘ஜேம்ஸ்’ டீசர் வெளியீடு – ரசிகர்கள் உருக்கம்

கன்னட திரையுலகின் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படும், மறைந்த புனீத் ராஜ்குமார் நடித்த கடைசிப் படமான ‘ஜேம்ஸ்’ படத்தின் டீசர் இன்று வெளியாகி ரசிகர்களை கலங்க வைத்துள்ளது. கன்னட திரையுலகில் ரசிகர்களால் அன்புடன் அப்பு என்று அழைக்கப்படும் புனீத் ராஜ்குமார், கடந்த அக்டோபர் மாதம் 29-ம் தேதி, உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருடைய மரணம் கர்நாடக மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 46 வயதில் புனீத்துக்கு ஏற்பட்ட மரணம் … Read more

ராஜபாளையம்: வெளியூரில் இருந்து துக்க வீட்டுக்கு வந்த பெண்ணுக்கு நேர்ந்த சோக முடிவு

ராஜபாளையம் அருகே துக்க வீட்டுக்கு வெளியூரில் இருந்து வந்திருந்த பெண், கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள எஸ்.ராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் முத்தம்மாள். தற்போது திருமணமாகி தனது கணவர் மாரிமுத்துவுடன் கரூரில் வசித்து வருகிறார். இவர், தனது சகோதரன் வீட்டில் நிகழ்ந்த துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் தன்னுடைய உறவினர்கள் சிலரை அழைத்துக் கொண்டு அருகே … Read more

இந்தியா முதலில் பேட்டிங்: இன்றையப் போட்டியில் அணியில் 3 மாற்றங்கள்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டித் தொடர் அகமதாபாத் நகரில் உள்ள  நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் இரு அணிகள் இடையேயான … Read more

”என்ன இது… ஃபேன் மேட் போஸ்டரா?” – தனுஷின் ‘நானே வருவேன்’ போஸ்டரை விமர்சிக்கும் ரசிகர்கள்

தனுஷின் ‘நானே வருவேன்’ புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. ஜவஹர் மித்ரனின் ‘திருச்சிற்றம்பலம்’, கார்த்திக் நரேனின் ’மாறன்’ படங்களில் நடித்து முடித்துள்ள தனுஷ் தற்போது, செல்வராகவனின் ‘நானே வருவேன்’ படத்திலும், ‘வாத்தி’ பை-லிங்குவல் படத்திலும் நடித்து வருகிறார். இதில், ‘நானே வருவேன்’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. கடந்த வருடம் அக்டோபர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்புத் தொடங்கினாலும் எந்த அப்டேட்டும் கொடுக்காமல் இருந்து வந்தது படக்குழு. தற்போது‘நானே வருவேன்’ படத்தில் தனுஷ் இரட்டை கதாபாத்திரங்களில் நடிப்பதை … Read more

சரியான நேரத்திற்கு வருவதில்லை: அரசு பேருந்துகளை சிறைபிடித்த பொது மக்கள்

ஆவடியில் அரசு பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆவடியில் மாநகர போக்குவரத்து பணிமனை இயங்கி வருகிறது. இங்கிருந்து சென்னையின் பிராட்வே, கோயம்பேடு, கிண்டி, உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளுக்கு 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அருகில் உள்ள அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வேலை மற்றும் பல்வேறு காரணங்களுக்காக பயணம் செய்கின்றனர். இந்தநிலையில் இன்று காலை திடீரென பேருந்து பணிமனை வாசலில் கூடிய பொதுமக்கள், பேருந்துகள் … Read more

“மத்திய பட்ஜெட், `இந்தியா 100’ என்ற இலக்கில் தயாரிக்கப்பட்டது”-அமைச்சர் நிர்மலா சீதாராமன்

கடந்த 2008-09 ம் நிதியாண்டில் குறைவான பொருளாதார நெருக்கடியின்போது, பணவீக்கம் 9.1 சதவிகிதமாக இருந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று காலத்தில் அது 6.2 சதவிகிதத்திற்குள் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட் உரை மீதான விவாதத்திற்கு மாநிலங்களவையில் பதிலளித்துப் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “நிலையான, நீடித்த பொருளாதார மீட்சியை பட்ஜெட் நோக்கமாக கொண்டிருக்கிறது. ட்ரோன்கள் மூலம் விவசாயப் பணிகளை மேற்கொள்ளும் முடிவு நாட்டின் விவசாயத் துறையை நவீனப்படுத்தும் கருவியாக … Read more

ஃபோனில் இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினிகாந்த் – நெகிழ்ந்துபோன கார்த்திக் சுப்புராஜ்

‘மகான்’ திரைப்படத்தின் இயக்குநரான கார்த்திக் சுப்புராஜை, ஃபோனில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், தனது 60-வது படமான ‘மகானில்’ முதன்முறையாக தனது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடித்துள்ளார் விக்ரம். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் சார்பில், லலித்குமார் தயாரித்துள்ள இந்தப்படம் ஆக்ஷன் திரில்லர் கலந்தப் படமாக உருவாகியுள்ளது. இந்தப்படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 1960, 1996, 2003 மற்றும் 2016 என நான்கு விதமான … Read more

திம்பம் மலைப்பாதையில் 16 மணி நேரமாக காத்திருக்கும் வாகனங்கள்

திம்பம் மலைப்பாதையில் இரவு நேர வாகன போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளதால் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றன. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், திம்பம் மலைப்பாதையில் நேற்று மாலை 6 மணி முதல் இரவு நேர போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி மாலை 6 மணி முதல் கனரக வாகனங்கள் நிறுத்தப்பட்டன. 6 மணியில் இருந்து 9 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் ஜீப், கார் போன்ற இலகுரக வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இரவு 9 … Read more

அமெரிக்க ஸ்டார்ட்அப் நிறுவன ராக்கெட் சோதனை தோல்வி

அமெரிக்காவில் ஸ்டார்ட்அப் நிறுவனம் ஏவிய முதலாவது ராக்கெட் சோதனை தோல்வியில் முடிந்தது. ஆஸ்ட்ரா என்ற பெயரில் புதிதாக தொடங்கப்பட்ட விண்வெளி ஆய்வு நிறுவனம், BIG FLORIDA என்ற பெயரில் 4 சிறிய செயற்கைக்கோள்களுடன் கேப் கார்னிவல் விண்வெளி மையத்தில் இருந்து 43 அடி உயர ராக்கெட்டை விண்ணில் ஏவியது. <blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>We experienced an issue in today's flight. I'm deeply sorry we were not able to deliver our … Read more

திம்பம்: கால்நடைகள் நலனுக்காக வனக்காவலர்களிடம் கெஞ்சிய விவசாயி

திம்பம் மலைப்பாதையில் இரவு நேர வாகனப் போக்குவரத்து தடை நேரம் அமலுக்கு வந்த நிலையில், கால்நடைகளை ஏற்றி வந்த லாரியை அனுமதிக்குமாறு விவசாயி ஒருவர் வனத் துறையினரின் காலில் விழுந்து கெஞ்சி இருக்கிறார். இதனால் செய்வதறியாது திகைத்த அந்த அதிகாரி, `இனி இப்படி வராதீர்கள்’ எனக்கூறி சிறப்பு அனுமதி கொடுத்திருக்கிறார். திம்பம் பகுதியில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை திம்பம் மலைப்பாதையில் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவ்வழியே கால்நடைகளை ஏற்றி … Read more