காலி பிளாஸ்டிக் பாட்டிலை கொடுத்தால் ஒரு ரூபாய் – நெல்லை மாநகராட்சியின் அசத்தல் முயற்சி!

காலி பிளாஸ்டிக் பாட்டிலை  கொடுத்தால் ஒரு ரூபாய் வழங்கும் திட்டம் நெல்லை மாநகராட்சியில் சோதனை ஓட்ட முறையில் தொடங்கப்பட்டுள்ளது. காலி தண்ணீர் பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால், ஒரு பாட்டிலுக்கு ஒரு ரூபாய் வழங்கும் திட்டம் இன்று நெல்லை மாநகரத்தில் சோதனை ஓட்டத்தில் தொடங்கப்பட்டது. நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் டவுண் சுகாதார அலுவலகத்தில், சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. ‘பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும், நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும்’ என்ற … Read more

“மே மாதத்துக்குள் நியமிக்காவிட்டால்..” அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

தமிழகத்தில் இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்கு, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ‘கோயில் அறங்காவலர்களை தேர்வு செய்வதற்கான மாவட்ட குழுக்கள் மே மாதத்துக்குள் நியமிக்கப்படும்’ என இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.  வழக்கு விசாரணையின்போது அறநிலையத் துறை தரப்பில், “மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 23 மாவட்டங்களில் உள்ள கோயில்களுக்கு அறங்காவலர்களை தேர்வு செய்வதற்கான மாவட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுவிட்டது. தொடர்ந்து … Read more

நீதிமன்ற வளாகத்துக்குள் மனைவி மீது ஆசிட் வீசிய கணவன்… கோவையில் அதிர்ச்சி சம்பவம்

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சூலூர் கண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் மீது அவரது கணவர் சிவா என்பவர் ஆசிட் வீசி தப்பி ஓட இன்று முயற்சி செய்தார். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரை விரட்டிப் பிடித்துள்ளார், அங்கிருந்த பெண் காவலரொருவர். அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு வெகுமதி வழங்கப்பட்டிருக்கிறது.  கோவை ராமநாதபுரம் காவேரி நகர் பகுதியைச் சேர்ந்த சிவா என்பவரது மனைவி கவிதா (33). கவிதா, கடந்த 2016 இல் பஸ்ஸில் பயணிக்கும் பயணியிடம் … Read more

“ராகுல் காந்திக்கு ஏன் நீதிமன்றம் தண்டனை தந்துள்ளது?”- சீமான் கேள்வி!

”அரசை விமர்சனம் செய்வது குற்றமில்லை என நீதிமன்றமே கூறி உள்ளது. அப்படி இருக்கையில் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு ஏன் தண்டனை தந்துள்ளது” எனக் கேள்வியெழுப்பியுள்ளார் சீமான். திருச்சி விமான நிலையத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியினருக்கும், மதிமுகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக,  காவல்துறையினர் பதிவு செய்த வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு  நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். அந்த சம்பவம் தொடர்பாக மதிமுகவினர் கொடுத்த புகாரிலான … Read more

‘2 ஆண்டு சிறை; 1 மாதம் ஜாமீன்…’ நீதிமன்ற தீர்ப்பும், ராகுல் காந்தியின் எதிர்வினையும்!

2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசிய கருத்துக்கு எதிராக, சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. பின்னர் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் எம்.பியுமான ராகுல் காந்தி, “எல்லா … Read more

“யார் அதிமுக…?”- இபிஎஸ் கேள்வி; வேட்டியை மடித்துகட்டி மனாஜ் பாண்டியன் பேரவையில் அமளி!

“யார் அதிமுக?” என்று கேட்டு சட்டப்பேரவையிலே கடும் வாக்குவாதத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் மனாஜ் பாண்டியன் வேட்டியை மடித்துகட்டிக் கொண்டு சென்று எதிர்ப்பைக் காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆன்லைன் ரம்மி தடைச்சட்டத்தை இன்று தாக்கல் செய்தார். அதை ‘உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றி தரவேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட, அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாமக, விசிக, காங்கிரஸ் என அனைத்து … Read more

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா குறித்து பேச ஓபிஎஸ்-க்கு சபாநாயகர் அனுமதி – கொதித்தெழுந்த இபிஎஸ்

தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் பேச சபாநாயகர் அனுமதி அளித்ததால் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சபாநாயகரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தமிழக சட்டப்பேரவையில், ஆன்லைன் ரம்மி சட்டமசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதாவை மீண்டும் இன்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். மேலும் மசோதா தொடர்பான நீண்ட விளக்கத்தையும் அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் குறிப்பிட்டு முதலமைச்சர் … Read more

" 23ஆம் புலிகேசி படமும் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கும் ஒன்னுதான் ” – அண்ணாமலை

தமிழ்நாட்டில் கொலை – கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளது; பாஜக. வளர்ச்சியை அவர்கள் (அதிமுக) ரசிக்க விரும்பவில்லை என நினைக்கிறேன். அவர்களின் கட்சியின் வளர்ச்சியை நான் நிறுத்துகிறேன் என்ற கவலை அவர்களக்கு உள்ளது‌‌ என மாநில தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார். தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று காலை சென்னையில் இருந்து விமான மூலம் டெல்லி புறப்பட்டார். டெல்லி புறப்பட்டதற்கு முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை பேசுகையில், ”தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நீண்ட நாட்களாக அரசியலில் … Read more

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா – எச்சரிக்கை விடுத்துள்ள மத்திய அரசு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 1,134 ஆக இருந்த நிலையில் இன்று 1300 ஆக அதிகரித்திருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் நாடுமுழுவதும் 1,134 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டது. இந்நிலையில் மேலும் அதிகரித்து இன்றைய தினம் 1300 ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், நேற்று நாடு முழுவதும் 89, 078 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தபட்டதில் 1,300 … Read more

”இனி ஒரு உயிர் பறிக்கப்படக் கூடாது” – மீண்டும் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா

தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில், ஆன்லைன் ரம்மி சட்டமசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதாவை மீண்டும் இன்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். மேலும் மசோதா தொடர்பான நீண்ட விளக்கத்தையும் அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் குறிப்பிட்டு முதலமைச்சர் பேசினார். தொடர்ந்து, ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதா, அறிவால் மட்டுமல்ல இதயத்தாலும் உருவாக்கப்பட்டதாகவும், மனித … Read more