‘கட்சித்தலைமையை மீறி…’ திமுக-வினரை கண்டித்த மு.க.ஸ்டாலின் – என்ன காரணம்?

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு க ஸ்டாலின் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.  அதில், தலைமையை மீறி வருந்தத்தக்க சில செயல்கள் நடக்கிறது என கண்டித்தார். தொடர்ந்து, மாவட்ட செயலாளர்கள் திமுகவின் நிர்வாகிகளையும் தொண்டர்களையும் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த தினத்தை பிரம்மாண்டமாக வருடம் முழுவதும் கொண்டாட வேண்டும். பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டங்களை நடத்த வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை தொடங்குங்கள், பட்ஜெட் … Read more

உடல்நலக் குறைவு: கனிமொழி எம்.பியின் கணவர் மருத்துவமனையில் அனுமதி

நுரையீரல் தொற்று காரணமாக திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பியின் கணவர் அரவிந்தன் சென்னை கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி. திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதியின் கணவர் அரவிந்தனுக்கு உடல் நலக்குறைவு காரணமாக கடந்த நான்காம் தேதி சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தொடர் பரிசோதனைகளின் மூலம் அரவிந்தனுக்கு நுரையீரல் தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து உடல்நிலை சீரானதும் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக … Read more

கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா: தொண்டர்கள் இல்ல விழாவாக கொண்டாட தீர்மானம்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா மாநாடு திருவாரூரில் ஜூன் 3 தேதி நடைபெற உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், துணை பொதுச் செயலாளர்கள் மற்றும் திமுகவின் 72 மாவட்ட செயலாளர்கள் உட்பட கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு … Read more

டெல்லியில் "மோடியை அகற்று; நாட்டை காப்பாற்று" போஸ்டரால் பரபரப்பு: காவல்துறை அதிரடி!

டெல்லியில் பல்வேறு பகுதிகளில் “மோடியை அகற்று; நாட்டை காப்பாற்று” என்ற வாசகத்துடன் கூடிய போஸ்டரால் ஒட்டப்பட்டிருந்ததை அடுத்து காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.  டெல்லியில் பல்வேறு இடங்களில் பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டதை தொடர்ந்து டெல்லி காவல்துறை இதில் சம்பந்தப்பட்ட 4 நபர்களை கைது செய்துள்ளது. டெல்லியில் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டு இருந்த 2000 க்கும் மேற்பட்ட சுவரொட்டிகளை டெல்லி காவல்துறை அகற்றினர். இதில் பெரும்பாலும் , “மோடியை அகற்று; நாட்டை காப்பாற்று” என்ற வாசகம் … Read more

பேசிக் கொண்டிருக்கும் போதே போனை துண்டித்த கணவர் – விரக்தியில் மனைவி எடுத்த விபரீத முடிவு

திருப்பத்தூர் அருகே குடும்பத் தகராறு காரணமாக அரசு பள்ளி ஆசிரியை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் நகரம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சதாசிவம். இவர், அதே பகுதியில் கணினி மையம் வைத்துள்ளார். இவரும் பல்லலப்பள்ளி பகுதியைச் சேர்ந்த அனிதா என்பவரும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். அனிதா குனிச்சி மோட்டூர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், … Read more

“உங்க ஆதாரிலிருந்து எக்கச்சக்க குற்றச்செயல்கள்"-மும்பை போலீஸ் பெயரில் ரூ.20 லட்சம் மோசடி

ஹரியானாவை சேர்ந்த பெண்ணொருவர், மும்பை போலீஸ் என பெயரிட்டவர்களை நம்பி சுமார் 20 லட்சம் ரூபாய் ஏமாற்றப்பட்டிருக்கிறார். ஹரியானாவின் செக்டார் 43 இல் வசித்துவந்த பெண்ணொருவருக்கு, கடந்த மார்ச் 3-ம் தேதியன்று கொரியரில் நிறுவனத்திலிருந்து அழைக்கிறோம் எனச் சொல்லி ஒரு ஃபோன்கால் வந்துள்ளது. அந்த ஃபோன்காலில், ‘உங்களுக்கு வந்த சட்டவிரோத பொருட்கள் சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது’ என்று கூறியிருக்கின்றனர். மேலும் அவர்களேவும் மும்பை காவல்துறைக்கு ஃபோன்கால் கனெக்ட் செய்வதாக கூறி செய்துள்ளனர். அடுத்தநொடியே அழைப்பு வேறொருவருக்கு இணைக்கப்பட்டுள்ளது. … Read more

வாணியம்பாடி: ஏடிஎம் இயந்திரந்தை கடப்பாரையால் உடைத்து கொள்ளை முயற்சி

வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை பகுதியில் ஏடிஎம் இயந்திரந்தை கடப்பாரையால் உடைக்க முயற்சி. ரோந்து பணியில் இருந்த காவலர்களை பார்த்ததும் மர்ம நபர் தப்பியோட்டம் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தின் மையப்பகுதியில் தனியார் ஏடிஎம் (இந்தியா 1ஏடிஎம்) இயங்கி வருகிறது.இந்த ஏடிஎம்-ல் நேற்று நள்ளிரவில் மர்மநபர் ஒருவர் கடப்பாரையால் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த ஆலங்காயம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் காவலரை கண்டதும் ஏடிஎம் கொள்ளையில் … Read more

மகளிர் தின கலை நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உற்சாக நடனம்!

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உற்சாகமாக நடனமாடினார். மகளிர் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக டெல்லியில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. அதில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கலந்து கொண்டு உரையாற்றினார். இறுதியில் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. அப்போது அங்கு நடனமாடியவர்களுடன் இணைந்து ஸ்மிருதி இரானியும் நடனமாடினார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ: Source : … Read more

திருச்சி: நேருக்கு நேர் மோதிக்கொண்ட கார்கள் – சாலை விபத்தில் 3 பேர் பலி

மாத்தூர் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சேலத்தில் இருந்து புதுக்கோட்டை நோக்கிச் சென்ற காரும், காரைக்குடியில் இருந்து திருச்சி வழியாக வந்த காரும் திருச்சி மாவட்டம் மாத்தூர் அருகே நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்த விபத்தில் மகிஷா ஸ்ரீ (12), சுமதி (45) டிரைவர் கதிர் (47) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த மாத்தூர் போலீசார், … Read more

புதுச்சேரி: அடுக்கடுக்காக கேள்வியெழுப்பிய பள்ளி மாணவர்கள் – அசராமல் பதிலளித்த அமைச்சர்

புதுச்சேரியில் அடுக்கடுக்காக பள்ளி மாணவிகள் எழுப்பிய கேள்விகளுக்கு கல்வி அமைச்சர் நமச்சிவாயம். அசராமல் பதிலளித்தார். புதுச்சேரி சட்டமன்றத்தில் கடந்த 9 ஆம் தேதி முதல் பட்ஜெட் கூட்டம் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவை நடவடிக்கைகளை பள்ளி மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் பேரவை மாடத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் அமர்ந்து பார்க்க நாள்தோறும் அதிகாரிகள் அனுமதித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று சட்டப் பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதையடுத்து உறுப்பினர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு உள்துறை … Read more