டெல்லி: ஃபேஸ்புக் காதலனை நம்பி திருமணம் செய்ய சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

ஃபேஸ்புக்கில் அறிமுகமான நபர்மீது காதல்கொண்டு அவரை திருமணம் செய்ய சென்ற பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக போலீசில் புகாரளித்துள்ளார். மார்ச் 16ஆம் தேதி டெல்லியின் இஃப்க்கோ சோவ்க் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் குருகிராமிலுள்ள தனது 24 வயது காதலனை சந்திக்கச் சென்றிருக்கிறார். தன்னை பதிவு திருமணம் செய்துகொள்வதாக காதலன் அழைத்திருந்த நிலையில் மதியமே வந்த காதலி கிட்டத்தட்ட 5 மணிநேரம் காத்திருந்திருக்கிறார். ஆனால் அங்குவந்த காதலனும், அவருடைய நண்பனும் அந்த பெண்ணை பாலியல் … Read more

’சிபிஎம் எம்.எல்.ஏவின் வெற்றி செல்லாது’- கேரள நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.. பின்னணி காரணம்?

மதம் மாறியதால் கேரள மாநிலம் தேவிகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் அ. ராஜாவின் வெற்றி செல்லாது என கேரள உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு விதித்துள்ளது. கேரளாவில் தற்போது பினராயி விஜயன் தலைமையிலான சிபிஎம் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு கேரள மாநிலம் தேவிகுளம் சட்டப்பேரவை தொகுதியில் சிபிஎம் சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்ற வழக்கறிஞர் அ. ராஜாவின் வெற்றி செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் இருக்கும் தனித் தொகுதியான தேவிகுளத்தில், தமிழரான … Read more

”வழிநெடுக ஊக்கமிழக்கவே செய்திருப்பார்கள்”..புது வரலாறு படைத்த கேரள திருநங்கை பத்ம லட்சுமி!

கேரளாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராக பத்ம லட்சுமி என்ற திருநங்கை கேரள பார் கவுன்சிலில் இன்று பதிவுசெய்துகொண்டார். LiveLaw இணையதள தகவலின்படி மார்ச் 19-ம் தேதி நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 1,500 பட்டதாரிகளுடன் சேர்ந்து பட்டம் பெற்றிருக்கிறார் பத்ம லட்சுமி. இவருக்கு கேரள சட்ட அமைச்சர் பி.ராஜீவ் தனிப்பட்ட முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்துள்ள அவர், “பல்வேறு தடைகளை கடந்துவந்து, இன்று இந்த இடத்தில் முதல் திருநங்கை வழக்கறிஞராக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டுள்ள பத்ம … Read more

விஷ்ணுவர்தனின் படத்தில் அதிதி To மிஷ்கின் இயக்கத்தில் விஜய்சேதுபதி.. டாப் 10 சினி ஹைலட்ஸ்!

இன்று உலா வரும் சில சினிமா தகவல்களின் தொகுப்பை இங்கு சுருக்கமாக காணலாம்: 1. விஜய் சேதுபதியின் புதிய படம் ‘பார்ஸி’ வெப் சீரிஸ் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக ‘விடுதலை 1 & 2’, ‘பிசாசு 2’, ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’, ‘காந்தி டாக்ஸ்’, ‘மும்பைகார்’, ‘ஜவான்’ உள்ளிட்டப் படங்கள் லைனில் காத்துள்ளன. இதில் சில படங்களின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், சில படங்களின் படப்பிடிப்பு நடைப்பெற்று வருகின்றன. இந்நிலையில், மிஷ்கின் … Read more

”500 ரூபாய் நோட்டுகளை விட 2,000 ரூபாய் நோட்டுகளின் பணப்புழக்கமே அதிகம்”- நிர்மலா சீதாராமன்

இந்தியாவில் 2000ரூ நோட்டுகள் புழக்கத்தில் இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்வி மக்களவையில் வைக்கப்பட்ட நிலையில், தற்போது அதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார். ஒட்டுமொத்த இந்திய மக்களும் மறக்கவே முடியாத அந்த நாள்! பாஜக தலைமையிலான அரசு மத்தியில் ஆட்சியமைத்த பிறகு 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி கருப்பு பணத்தை ஒழிப்பதாகச் சொல்லி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்து உலக அளவில் பெரும் பரபரப்பை கிளப்பினார் பிரதமர் மோடி. இந்த … Read more

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கொரோனா தொற்று.. ICU-ல் சிகிச்சை.. மருத்துவமனை பரபரப்பு அறிக்கை!

ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸின் முன்னாள் தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அண்மையில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்ற காங்கிரஸின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த மார்ச் 10ம் தேதிதான் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றார். அதன்பிறகு கட்சி மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கடந்த மார்ச் 15ம் தேதி … Read more

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 யாருக்கெல்லாம் கிடையாது? – அமைச்சர் கீதா ஜீவன் விரிவான விளக்கம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்று காலை 10 மணி தொடங்கி 2023 – 24-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அப்போது குடும்பத்தலைவிகளுக்கு ரூ. 1,000 உரிமைத்தொகை குறித்த அறிவிப்பை வெளியிட்டார் நிதியமைச்சர். மேலும், இந்த திட்டம் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15 முதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்றும், இந்த திட்டத்திற்காக ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் அறிவித்தார். இதுகுறித்து சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் … Read more

வரதட்சணை கொடுமை: நள்ளிரவில் மனைவியின் குடும்பத்தாரை தாக்கி கணவன் வெறிச்செயல்

வரதட்சணை கேட்டு நள்ளிரவில் அடியாட்களுடன் சென்று மனைவியின் குடும்பத்தாரை தாக்கிய கணவன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே புக்கிலிபாளையத்தை சேர்ந்தவர் விஜயன். இவர் மங்களம் பகுதியில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார். அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவரது மகள் மோகனப்பிரியாவிற்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மோகனப்பிரியா, தந்தையின் எதிர்ப்பையும் மீறி ஒரு வருடத்திற்கு முன்பு விஜயனை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் திருமணமான நான்கு மாதங்களில் விஜயன் தன்னிடம் வரதட்சணை கேட்டு … Read more

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையின் மீது எடுத்த நடவடிக்கை என்ன? நீதிமன்றம் கேள்வி!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் மீதான விசாரணையில் ஆறுமுகசாமி ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில், இதுவரையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இன்று பிற்பகல் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வராக இருந்த ஜெயலலிதா, உடல்நலக்குறைவால் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி மரணமடைந்தார். ஜெயலலிதாவின் மரணமும் அதற்கு முன்பு அவருக்கு 75 நாட்கள் அளிக்கப்பட்ட சிகிச்சைகளும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியதை அடுத்து, அவரது மரணம் தொடர்பாக விசாரிக்க அரசு … Read more

‘புஷ்பா 2’ படப்பிடிப்பில் அல்லு அர்ஜுனுடன் இணையும் பஹத் பாசில் – இங்குதான் ஷுட்டிங்?

‘புஷ்பா 2’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பஹத் பாசில் மற்றும் அல்லு அர்ஜுனின் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் ‘புஷ்பா: தி ரைஸ்’. தமிழ்நாடு – ஆந்திர எல்லையில் செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவான இந்தத் திரைப்படத்தில், புஷ்ப ராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் சற்று வித்தியாசமான தோற்றத்தில் … Read more