TN Budget: “கலைஞர் நூற்றாண்டில், அண்ணா பிறந்தநாளில் குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத்தொகை”

தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்று காலை 10 மணி தொடங்கி 2023 – 24-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அப்போது குடும்பத்தலைவிகளுக்கு ரூ. 1,000 உரிமைத்தொகை குறித்த அறிவிப்பை வெளியிட்டார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். குறிப்பிட்ட அந்த உரையின் போது அவர் பேசியவை இங்கே: “சமூகத்தில் சரிபாதியான பெண் இனத்தை, சரிநிகர் சமூகமாக உயர்த்த திட்டமிட்டு செயல்பட்டு கொண்டிருக்கும் திராவிட மாடல் அரசு, கல்வியில் – நிர்வாகத்தில் – அதிகாரமிக்க பொறுப்புகளில் – பொருளாதாரத்தில் – சமூகத்தில் பெண்களை … Read more

பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கம்: சசிகலா தாக்கல் செய்த மனு மீது 23 ஆம் தேதி விசாரணை

அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த வழக்கை வரும் வியாழக்கிழமை விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, அந்த கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலாவும், துணை பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரனும் பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டத்தில், சசிகலா மற்றும் … Read more

சந்திரமுகியாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் – வைரலாகும் ராகவா லாரன்ஸ் பகிர்ந்த புகைப்படம்!

‘சந்திரமுகி 2’ படத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடித்து முடித்துள்ள நிலையில், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை ராகவா லாரன்ஸ் பகிர்ந்துள்ளது வைரலாகி வருகிறது. மோகன்லால், சுரேஷ் கோபி, ஷோபனா நடிப்பில், கடந்த 1993-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘Manichitrathazhu’. இந்த திரைப்படத்தை இயக்குநர் பி. வாசு, தமிழில் கடந்த 2005-ம் ஆண்டு ‘சந்திரமுகி’ என்றப் பெயரில் ரீமேக் செய்திருந்தார். இந்தப் படத்தில் மனநல மருத்துவராக ரஜினிகாந்தும், அவரது நண்பராக பிரபும் … Read more

"காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கார்த்திக் சிதம்பரம் நல்ல சாய்ஸ்" – கே.எஸ்.அழகிரி

ஜி.கே.வாசன் மோடிக்கும், பாஜகவுக்கும் ஆதரவாக உள்ளதால் தமாகாவினர் அதை விரும்பவில்லை. தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கார்த்திக் சிதம்பரம் வந்தால் சிறப்பாக செயல்படுவார் என கே.எஸ்.அழகிரி புதிய தலைமுறைக்கு பேட்டியளித்தார். மதுரையில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்து பேசுகையில்… தமிழகம் முழுவதும் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தோழர்கள் சிறிது சிறிதாக காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகின்றனர். தமாகாவை எந்த நோக்கத்திற்காக, … Read more

டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு – அச்சத்தில் மக்கள்!

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி டெல்லியில் கொரோனா தொற்று விகிதம் 3.95 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மெல்ல அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் டெல்லியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20,07,970 ஆக உயர்ந்துள்ளது. 26,523 பேர் உயிரிழந்திருக்கின்றனர். தற்போது டெல்லியில் 209 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர். … Read more

ஐஸ்வர்யா வீட்டில் எப்போது, எவ்வளவு மதிப்பிலான நகைகள் காணாமல் போனது? – வெளியான முழு விவரம்!

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது வீட்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் வைர நகைகள் காணாமல் போனதாக புகார் அளித்திருந்த நிலையில், அந்த நகைகளின் மதிப்பு குறித்த கதவல் வெளியாகியுள்ளது. தனுஷின் ‘3’, கௌதம் கார்த்திக்கின் ‘வை ராஜா வை’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர், நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர், தற்போது விஷ்ணு விஷால், விக்ராந்த் முதன்மை கதாபாத்திரத்திலும் மற்றும் ரஜினிகாந்த் – ஜீவிதா சிறப்புத் தோற்றத்திலும் நடிக்கும் … Read more

இந்திய எல்லைக்குள் மீன் பிடித்ததாக 6 இலங்கை மீனவர்கள் கைது!

இந்திய எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த இலங்கை சேர்ந்த ஆறு மீனவர்கள் கைது செய்த இந்திய கடலோர காவல் படையினர் மீன் பிடிக்க பயன்படுத்திய படகையும் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி: இந்திய கடலோர காவல் படைக்குச் சொந்தமான ஆதேஸ் என்னும் ரோந்து கப்பலில் கடலோர காவல் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இந்திய எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த படகை சுற்றி வளைத்து சோதனையிட்டனர். அப்போது அதில், இருந்த 6 இலங்கை மீனவர்களை கைது செய்த … Read more

TN Budget 2023-24: எந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு? பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்று காலை 10 மணி தொடங்கி 2023 – 24-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்துவருகிறார். அவர் வழங்கிய பட்ஜெட் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் இங்கே: * வருவாய் பற்றாக்குறையை ரூ. 60,000 கோடி என்பதிலிருந்து, 30,000 கோடி ரூபாய் என்ற அளவுக்கு குறைத்துள்ளோம். மேலும் வரும் ஆண்டுகளில் அது குறைக்கப்படும். * மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து, நடராஜனுக்கு சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும் * அம்பேத்கரின் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படும். அதற்கு, 5 கோடி ரூபாய் … Read more

பாட்னா ரயில் நிலைய டிவியில் திடீரென ஒளிப்பரப்பான ஆபாச வீடியோ – அதிர்ந்துபோன பயணிகள்!

பாட்னா ரயில்நிலையத்தில் பொறுத்தப்பட்டிருந்த தொலைக்காட்சியில் விளம்பரத்திற்குப் பதிலாக 3 நிமிடங்கள் ஆபாச வீடியோ ஓடியதால், பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர். பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா ரயில் நிலையத்தை உள்ளூர் மக்களையும் தாண்டி, ஏராளமான மற்ற மாநில பயணிகளும் அதிகளவில் பயன்படுத்துவது வழக்கம். அந்தவகையில் நேற்று வழக்கம்போல் தங்களது ரயில்களுக்காக பயணிகள் காத்துக்கொண்டிருந்த நிலையில், காலை 9.30 மணியளவில் நடை எண் 10-ல் பொறுத்தப்பட்டிருந்த தொலைக்காட்சியில் விளம்பரத்திற்குப் பதிலாக ஆபாச வீடியோ ஒளிப்பரப்பானது. இதையடுத்து பயணிகள் பலரும், அதனை வீடியோவாகவும், … Read more

'எடப்பாடி பதறட்டும் கோபாலபுரம் கதறட்டும்' – பாஜகவினர் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு

எடப்பாடி பதறட்டும் கோபாலபுரம் கதறட்டும் கழகங்கள் இல்லா தமிழகம் கவலைகள் இல்லா தமிழர்கள் என மதுரையில் பாஜகவினர் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக பாஜக கூட்டணி நீடித்து வந்தாலும் இரு கட்சிகளுக்கும் இடையேயான உரசல்கள் மறைமுகமாக நீடித்து வந்தது. இந்நிலையில் பாஜக ஐடி விங் நிர்வாகி நிர்மல் குமார் உட்பட பலர் பதவி விலகி அதிமுகவில் இணைந்தனர் இந்நிலையில், இந்த மோதல் வெளிப்படையாக வெளியே தெரியவந்தது. இதையடுத்து அதிமுக பாஜக தலைவர்களின் உருவ படங்கள் எரிப்பு, … Read more