மாமல்லபுரம்: அறுந்து தொங்கிய மின் கம்பி உரசியதால் சம்பவ இடத்திலேயே தந்தை-மகன் பலி!

மாமல்லபுரம் அருகே அறுந்து தொங்கி கிடந்த உயர் அழுத்த மின் கம்பி உரசியதால் ஒரே நேரத்தில் தந்தை, மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த வடகடம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கோதண்டன்(42). இவர் திருப்போரூர் அடுத்த ஆலத்தூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஃபிட்டராக வேலை செய்து வருகிறார். இவரது மகன் ஹேமநாதன்(10), மாமல்லபுரம் அரசினர்மேல்நிலை பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், இன்று கோதண்டன் தன் … Read more

“நான் சம்பாதித்த பணம் அரவக்குறிச்சி தேர்தலில் போய்விட்டது; இப்போது கடன்காரன்” – அண்ணாமலை

“இனி, கொஞ்சம் ஆக்ரோஷமாகப் பேசப் போகிறேன்” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பணம் தராமல் தேர்தலைச் சந்திப்பதுதான் சுத்தமான அரசியல் சென்னை கிண்டியில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அண்ணாமலை பேசியதன் முழுவிபரம்:- பணம் தராமல் தேர்தலைச் சந்திப்பதுதான் சுத்தமான அரசியல் ”தமிழ்நாட்டில் அரசியல் பரபரப்பு எதுவும் இல்லை. நேரம் வரும்போது விரிவாகப் பேசுவேன். கட்சி ரீதியாகப் பேசிய சில சம்பவங்கள் விவாதம் செய்யப்படுகிறது. பா.ஜ.க. கட்டுக்கோப்பான கட்சி. அதில், அகில … Read more

காலிஸ்தான் ஆதரவாளர்கள் கைதால் பதற்றம்! இணைய சேவை முடக்கம்; என்னதான் நடக்கிறது பஞ்சாப்பில்?

பஞ்சாப் மாநிலத்தில், காலிஸ்தான் கிளர்ச்சியாளர் அம்ரித்பால் சிங் கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. யார் இந்த வாரிஸ் பஞ்சாப் தே’ ?.. நடந்தது என்ன? பஞ்சாப் அமிர்தசரஸை சேர்ந்த அம்ரித்பால் சிங், காலிஸ்தான் ஆதரவு அமைப்பான ‘வாரிஸ் பஞ்சாப் தே’ தலைவராக உள்ளார். சீக்கிய மதகுரு என்று தன்னைத்தானே அறிவித்துக்கொண்டார். அண்மையில் காவல்நிலையம் உள்ளே புகுந்த ‘வாரிஸ் பஞ்சாப் தே’ அமைப்பினர், துப்பாக்கிகள் மற்றும் வாட்களை ஏந்திப் போராட்டம் நடத்தியது, பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து, … Read more

சக நடிகையை ட்விட்டரில் பிளாக் செய்த அல்லு அர்ஜூன்? – நடிகை கொடுத்த விளக்கம்!

தன்னுடன் நடித்த சக நடிகையை தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன், ட்விட்டரில் பிளாக் செய்ததாக நடிகை பானு ஸ்ரீ மேஹ்ரா ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்தது சர்ச்சையானது. இந்நிலையில், மீண்டும் அவரை ட்விட்டரில் பின் தொடர அனுமதி அளித்ததற்கு அல்லு அர்ஜுனுக்கு, நடிகை பானுஸ்ரீ நன்றி தெரிவித்துள்ளார். ‘அல வைகுந்தபுரம்லோ’ படத்திற்குப் பிறகு, நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா – 1’ திரைப்படம் அவரை பான் இந்தியா நடிகர் அஸ்தஸ்துக்கு உயர்த்தி பிடித்தது. … Read more

பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள் ஜூன் இறுதியில் தேர்வெழுத ஏற்பாடு! – அன்பில் மகேஷ்

மக்களை தேடி குறைதீர் முகாமில், மக்களின் கோரிக்கை மனுக்களை கேட்டு பெற்றுக்கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிறைவேற்றித்தர உத்தரவிட்டார். திருச்சியில் பொன்மலை, கொட்டப்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மக்கள் பிரதிநிதிகள் நேரடியாக மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றனர். ‘மக்களை தேடி’ குறைதீர் முகாமில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பெய்யாமொழி பங்கேற்று, மக்களின் கோரிக்கைகளை நேரடியாக கேட்டறிந்தார். பின்னர், பொதுமக்களின் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது மாமன்ற … Read more

”நீங்க பண்ணதெல்லாம் போதும்; இனி நான் பாத்துக்கிறேன்”- ஃபேன்ஸ் முன் உணர்ச்சிவசப்பட்ட சிம்பு

கன்னடத்தில் சிவ்ராஜ்குமார் நடிப்பில் வெளியான மஃப்டி படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகி வரும் பத்து தல திரைப்படம் மார்ச் 30ம் தேதி தியேட்டரில் ரிலீசாக இருக்கிறது. இதில் சிம்பு, கவுதம் கார்த்திக், கவுதம் மேனன், ப்ரியா பவானி சங்கர், சந்தோஷ் பிரதாப் என பல நட்சத்திர பட்டாளங்களே நடித்திருக்கிறார்கள். கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் இடம்பெற்ற நம்ம சத்தம் மற்றும் நினைவிருக்கா ஆகிய பாடல்கள் வெளியான நிலையில் நேற்று சென்னை … Read more

”இது வேற நிகழ்ச்சி.. இங்கு நீட் விலக்கு குறித்த கேள்வி வேண்டாம்”- மத்திய அமைச்சர் மன்சுக்!

நீட் விலக்கு மசோதா குறித்த கேள்விக்கு பதிலளிக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மறுப்பு தெரிவித்துள்ளார். சௌராஷ்டிர தமிழ் சங்கமம் அறிமுக விழா கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் சௌராஷ்டிர தமிழ் சங்கமம் அறிமுக விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், குஜராத் மாநில நீர்வளத்துறை அமைச்சர் குன்வார்ஜி பவாலியா, குஜராத் மாநில கூட்டுறவுத்துறை ஜகதீஷ் விவகர்மா ஆகியோர் பங்கேற்றனர். சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமத்திற்கான அறிவிப்புகள் … Read more

”இந்த பாட்டை அவர்தான் பாடியிருக்கணும்.. வேறு வழியில்லாம” – ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ARR!

சிம்பு, கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியிருக்கும் பத்து தல படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில் விழாவின் நாயகனான பத்து தல படத்துக்கு இசையமைத்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் கிருஷ்ணா, நடிகை ப்ரியா பவானி சங்கர், இயக்குநரும் நடிகருமான கவுதம் மேனன், சந்தோஷ் பிரதாப் என பலரும் பங்கேற்றிருந்தார்கள். இந்த படம் வருகிற மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. விழாவின் போது நடிகர் சிம்பு … Read more

இடுகாட்டில் கேக் வெட்டி pre wedding ஷூட்டிங் நடக்கிறதா? எங்கு தெரியுமா? சுவாரஸ்ய தகவல்கள்!

இடுகாடு, தகனம் பற்றியெல்லாம் நினைத்தாலே பலரும் அச்சப்பட்டு அவ்விடத்தை விரைவில் கடந்துவிட வேண்டும் என்றே எண்ணுவார்கள். ஆனால் குஜாரத்தில் உள்ள திசா பகுதியில் உள்ள இடுகாடு ஒன்றில் பிறந்தநாள் விழா, திருமணத்துக்கு முந்தைய ஃபோட்டோ ஷூட் போன்ற நிகழ்வுகளையெல்லாம் நடத்துகிறார்கள் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது குஜாரத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள திசா என்ற பகுதியில் 12,000 சதுர அடி பரப்பளவில் 5 முதல் 7 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டிருக்கிறது இடுகாடு ஒன்று. இதனை இடுகாடு என்று … Read more

நயன்தாராவின் 75வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம் – வெளியான தகவல்!

நயன்தாராவின் 75-வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று முதல் துவங்கியுள்ளது.  தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையும், லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவரான நயன்தாரா, கடைசியாக ‘கனெக்ட்’ என்ற ஹாரர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும், ‘ஜவான்’ என்ற பான் இந்தியா படத்தில் நடித்து வருகிறார். வருகிற ஜுன் 2-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகை நயன்தாரா அறிமுகமாகவுள்ளார். மேலும், ஜெயம் ரவியின் … Read more