‘இன்று ஸ்டாலின் முதலமைச்சராக இருப்பதற்கு காரணம் நான் தான்’ – சீமான் பேச்சு

“தமிழ்நாட்டில் 50 ஆயிரம் மாணவர்கள் தமிழ் தேர்வு எழுத வரவில்லை; இதுபோன்ற ஒரு கேவலம், அவமானம் எந்த நாட்டில் நடைப்பெற்றுள்ளது?” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை கே.கே. நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் “தமிழ்ப் பழங்குடிகள் பாதுகாப்பு பாசறை தொடக்க விழா” நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றினார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த சீமான், “முன்னதாகவே இந்த பாசறை … Read more

நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – கடும் கட்டுப்பாடுகளுடன் ஐபிஎல் தொடரை நடத்த முடிவு

கொரோனா தொற்றுக்குள்ளான வீரருக்கு இரண்டு முறை ‘நெகட்டிவ்’ முடிவு வந்த பிறகே மறுபடியும் அணியின் முகாமுக்குள் நுழைய முடியும் என ஐபிஎல் கட்டுப்போடு போடப்பட்டுள்ளது. 16வது ஐபிஎல் டி20 தொடர் வரும் 31-ம் தேதி தொடங்க உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் தொடருக்காக பல்வேறு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர். இதனிடையே, இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. முந்தைய மூன்று சீசன்கள் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் மிகுந்த … Read more

'அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு: ‘தேர்தல் நடத்தலாம், ஆனால்…’- உயர்நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக பொது செயலாளர் பதவிக்கான தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த  மனுக்களை, அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரித்தது. அதன் முடிவில் ‘தேர்தல் நடத்தலாம்’ என்று நீதிமன்றம் கூறியுள்ளது. வழக்கு விசாரணையின்போது, “சட்டவிதிகளை மீறி பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது” என ஓபிஎஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. மேலும் தங்கள் வாதத்தில் “நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் என அறிவித்துவிட்டு இந்த தேர்தலை அறிவித்துள்ளனர் இபிஎஸ் … Read more

விஜய்யின் பிகில் ஃப்ளாப் படமா? அர்ச்சனா கல்பாத்தி பேச்சும் வைரலாகும் வீடியோவும்!

விக்ரம், பொன்னியின் செல்வன் போன்ற நேரடி தமிழ் படங்களால் தமிழ் சினிமா துறையின் வளர்ச்சி கொடிக்கட்டி பறந்துக் கொண்டிருக்கிறது என்றாலும் கொரோனாவுக்கு முன்பும் கொரோனாவுக்கு பின்பும் வந்த படங்கள் சிலவற்றால் தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் முழுமையான லாபத்தையும் நஷ்டத்தையும் பெறாமலேயே இருந்தார்கள் என்பது படங்களின் வசூல் நிலவரங்கள் குறித்த தகவல்களின் மூலம் அறிய முடியும். குறிப்பாக தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர அந்தஸ்தில் இருக்கும் நடிகர் விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் என்னதால் நூற்றுக்கணக்கான கோடிகளில் வசூலை வாரிக்குவித்தாலும் … Read more

‘ஜெயலலிதாவுக்கு எதிராகவே பணி செய்தவர் தான் ஓபிஎஸ்’ – ஜெயக்குமார் விமர்சனம்

‘அரசியலில் பண்ருட்டி ராமச்சந்திரன் சகுனியாக உள்ளார்’ என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக விமர்சனம் செய்துள்ளார். சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நேற்று காயகல்ப்பம் கம்பெனியாக உள்ள ஓபிஎஸ் தரப்பு பேட்டியளித்தனர். அதில், விரக்தியின் உச்சத்தில் பேசியுள்ளது வெளிப்படையாகியுள்ளது. ஓபிஎஸ் தரப்பினர் நிதானத்தில் உள்ளாரா என்ற சந்தேகம் உள்ளது. பேட்டியில் ஓபிஎஸ், இபிஎஸ்ஸை பிக்பாக்கெட் என்று விமர்சித்துள்ளார், பிக்பாக்கெட் என்று சொல்வதற்கு பொறுத்தமானவர் ஓபிஎஸ் … Read more

டெல்லியில் நடுரோட்டில் பெண்ணை தாக்கும் வீடியோ காட்சிகள் – போலீசார் விசாரணை

யூடியூபரான பிரின்ஸ் தீட்சித் என்பவர் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடுகையில் காரின் மேற்கூரை மீது ஏறி நின்று ஆட்டம் போட்டது கண்டுபிடிக்கப்பட்டது. சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோ ஒன்றில் டெல்லியில் உள்ள மங்கோல்புரி மேம்பாலம் அருகே ஒரு ஆண் பெண் ஒருவரை அடித்து காரில் வலுக்கட்டாயமாக உட்கார வைக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த வீடியோ வேகமாக பரவிய நிலையில் இச்சம்பவம் தொடர்பாக டெல்லி காவல்துறையினர் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் காரின் பதிவு எண்ணை கண்டுபிடித்து … Read more

ஒரே மாதத்தில் தனுஷின் ‘வாத்தி’ திரைப்படம் இத்தனை கோடி வசூலா? – படக்குழு வெளியிட்ட தகவல்!

தனுஷின் ‘வாத்தி’ திரைப்படம் ஓடிடியில் வெளியான நிலையில், திரையரங்கிலிருந்து கிடைத்த மொத்த வசூலையும் புதிய போஸ்டர் ஒன்றுடன் படக்குழு அதிகாரப்பூர்வமாக ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தனுஷ் நடிப்பில், தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘வாத்தி’. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவான இந்தத் திரைப்படத்தை, பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டெர்டெயின்மெண்ட் தயாரித்திருந்தது. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். தனுஷுடன், சம்யுக்தா, சமுத்திரக்கனி, ‘ஆடுகளம்’ நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த … Read more

மீண்டும் பரவும் கொரோனா.. ஒரே நாளில் இத்தனை பேருக்கு பாதிப்பா? கோவை மக்களே உஷார்!

உலகளவில் புரட்டிப்போட்ட கொரோனா வைரஸ் இந்தியாவையும் ஒரு வழிப்படுத்திவிட்டே தணிந்திருந்தது. ஆனால் அதன் உருமாற்ற வகை கொண்ட ஒமிக்ரான் உள்ளிட்ட திரிபுகளால் இதுகாறும் தொற்று கணக்குகள் பதிவாகிக் கொண்டே இருந்தாலும் பெரிதளவிலான பாதிப்புகள் இல்லாமலேயே இருந்தன. இதனூடே H3N2 என்ற புதுவகை இன்ஃப்ளூயன்சா நோய் பரவல் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களிலும் பரவத் தொடங்கி இருப்பதால் மருத்துவமனைகளில் காய்ச்சலால் அவதியுறும் நோயாளிகள் குவிவது தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில்தான் நாட்டில் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. … Read more

‘நாட்டு நாட்டு Team-க்கு…’- வைரலாகும் பிரபுதேவாவின் அசத்தல் நடன வீடியோ!

95-வது ஆஸ்கர் விருது விழாவில், சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை பெற்றுவந்தது ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடல். ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் ஆஸ்கர் விருதை பெற்றுக்கொண்டனர். ஆஸ்கர் விருதை பெற்றதையடுத்து, ஆர்.ஆர்.ஆர். படக்குழுவுக்கு நடிகர்கள், திரைக்கலைஞர்கள் தொடங்கி அரசியல் தலைவர்கள் வரை பலரும் பாராட்டினர். அந்தவரிசையில் நடன இயக்குநரும் நடிகருமான பிரபுதேவாவும் படக்குழுவுக்கு தனது பாராட்டை தெரிவித்துள்ளார். இதில் விசேஷம் என்னவென்றால், தனக்கே உரிய பாணியில் நடனத்தின்மூலம் பாராட்டியுள்ளார் … Read more

பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர் – குருவிக்காரர் சமூகத்தினர்… தமிழ்நாடு அரசு அரசாணை

பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்கள், குருவிக்காரர் சமூகத்தினர் ஆகியோரை இணைத்து அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் நமக்கு தெரியவருவது – “நாடோடி பழங்குடியின சமூகத்தினரான நரிக்குறவர், குருவிக்காரர் இனங்கள் தமிழ்நாட்டின் பழங்குடியினர் பட்டியலில் வந்துள்ளது. இந்த கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்தது. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டதை அடுத்து, பழங்குடியினர் பட்டியலில் 37-வது இனமாக சேர்த்து மத்திய … Read more