”இன்டெர்நெட்டை சரியாக பயன்படுத்திய ஆட்டோ டிரைவர்..” அப்படி என்ன செய்தார்?

இன்டெர்நெட் உலகம் மூலை முடுக்கெங்கிலும் பரவிக் கிடப்பதற்கு பெங்களூருவின் இந்த ஆட்டோ டிரைவரும் ஒரு காரணமாக இருக்கலாம். உபெரில் ஆட்டோ ஓட்டிக் கொண்டே முதலீடு மற்றும் பொருளாதாரம் தொடர்பான தரவுகளுக்கான யூடியூப் சேனலும் நடத்தி வருகிறார் ஜனார்தன். சுஷாந்த் கோஷி என்பவரது ட்விட்டர் பதிவு மூலம் தற்போது அந்த ஆட்டோ ஓட்டுநர் ஜனார்தன் பொதுவெளிக்கு தெரிய வந்திருக்கிறார். அதில், “இன்றைக்கான என்னுடைய உபெர் ஆட்டோ டிரைவர் ஒரு யூடியூப் இன்ஃப்ளூயன்சர். அதுவும் நிதி தொடர்பான பொருளாதார சிக்கல்களை, … Read more

“அமைச்சர் உதயநிதியின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது”- மத்திய விளையாட்டு துறை அமைச்சர்

“தமிழ்நாட்டில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்” என மத்திய விளையாட்டு துறை அமைச்சர் பேசியுள்ளார். சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூரை தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சந்தித்தார்.  இன்று சென்னையில் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக … Read more

‘இலவச டிக்கெட் இல்லை…’ ஆஸ்கர் விழாவில் கலந்து கொள்ளவே இத்தனை கோடி செலவுசெய்தாரா ராஜமௌலி?

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த பாடலுக்கு, கடந்த 13-ம் தேதி ஆஸ்கர் விருது கிடைத்திருந்த நிலையில், அவ்விருது விழாவில் பங்கேற்க அப்படத்தின் இயக்குநர் ராஜமௌலி உள்ளிட்டோருக்கு இலவச டிக்கெட் வழங்கப்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. . 95-வது ஆஸ்கர் விருது விழாவில், சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை பெற்றுவந்தது ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடல். ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் ஆஸ்கர் விருதை பெற்றுக்கொண்டனர். ஆஸ்கர் மேடையில் விருதை … Read more

"விரட்டப்பட வேண்டியவர்கள் அதானியும் அம்பானியும்; பிழைக்க வருபவர்களை அல்ல" – திருமாவளவன்

உண்மையான அம்பேத்கரியவாதிகள் ஒருநாளும் பாஜக வில் இணையமாட்டார்கள் – விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் மணி விழா வாழ்த்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன் … Read more

'2 கோடி சொத்தை கேன்சர் மையத்திற்கு கொடுங்கள்' – குடும்பத்தை இழந்த பெண் நெகிழ்ச்சி கடிதம்

குடும்பத்தினர் அனைவரும் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்த நிலையில், மன அழுத்தத்தால் உடல்நலம் இழந்து உயிரிழந்த பெண் ஒருவர், இறக்கும் தருவாயில் தங்களது 2 கோடி ரூபாய் மதிப்பிலான நகை, பணம், வீடு ஆகிய சொத்துக்களை காஞ்சிபுரம் அண்ணா புற்றுநோய் மையத்திற்கு கொடுக்க வலியுறுத்தி கடிதம் எழுதிவைத்துவிட்டு இறந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி காமராஜ் நகர் மகிழம்பு தெருவில் வசித்து வந்தவர் சுந்தரி பாய் (54). இவர் கடந்த பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி அவரது வீட்டில் இறந்துவிட்டதாக அக்கம்பக்கதினர் ஆவடி … Read more

இரவு நேர கடைகளுக்கு போலீசாரால் பாதிப்பு ஏற்பட்டால் நடவடிக்கை – தமிழக வணிகர் அமைப்பு தலைவர்

ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தினை சேர்ந்த மண்டல கூட்டம், மண்டல தலைவர் வைகுண்ட ராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்துகொண்டார். இந்த மண்டல கூட்டத்தில் வரும் மே 5-ஆம் … Read more

கார் – பைக் விபத்து: 30 அடி உயரத்திலிருந்து தூக்கி வீசப்பட்டு இளம்பெண் பரிதாபமாக பலி

பைக் மீது கார் மோதிய விபத்தில் 30 அடி உயர பாலத்தின் மேலிருந்து கீழே விழுந்து பெண் பலியானார். அவரது தம்பியும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பள்ளிகரணை அடுத்த மேடவாக்கம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சந்தோஷபுரத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார்(21) மற்றும் அவரது அக்கா கலைச்செல்வி(26) இருவரும் பாலத்தில் மீதேறி பள்ளிகரணை நோக்கி வந்து கொண்டிருந்தபோது, பின்னால் வந்த கார், இருசக்கர வாகனத்தின்மீது மோதியதில் பின்னால் அமர்ந்திருந்த கலைச்செல்வி மேம்பாலத்தின் மேலிருந்து 30 அடி கீழே தூக்கி வீசப்பட்டார். … Read more

குடிபோதையில் தொந்தரவு செய்றாங்க ; மதுக்கடையை மூட சொல்லி 30் அரசு பள்ளி மாணவிகள் போராட்டம்

மதுரை திருப்பரங்குன்றத்தில் அரசு மதுபான கடையை அகற்றக்கோரி அரசு பள்ளி மாணவிகள் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் மதுக்கடையை அகற்றக்கோரி 30-க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவிகள், பெற்றோர்களுடன் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகே அரசு பள்ளிக்கூடம், சுப்ரமணியசாமி கோவில், அரசு மருத்துவமனை மற்றும் காய்கறி சந்தை உள்ளிட்டவைகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் பேருந்து நிலையம் அருகே அதிகளவு மக்கள், பெண்கள், … Read more

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரிய ஓபிஎஸ் தரப்பு மனுக்கள் நாளை விசாரணை

அதிமுக பொது செயலாளர் பதவிக்கான தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை, அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்து, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே..சி.டி.பிரபாகர் ஆகியோர் தொடர்ந்த வழக்கு … Read more

45ஆண்டுக்கு முன் பாடம் எடுத்த ஆசிரியரை சந்தித்த மலேசிய மாநில துணை முதல்வர்!

சிறு வயதில் தனக்கு குர்ஆன் சொல்லிக்கொடுத்த ஆசிரியரை தற்போது அவர் வீட்டுக்கே வந்து சந்தித்து நலம் விசாரித்துள்ளார், மலேசியா நாட்டின் சரவாக் மாநில துணை முதல்வர் ஆவான் டெங்கா. 45 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவில் தனக்கு குர்ஆன் சொல்லிக் கொடுத்து தற்போது பாபநாசம் அருகே ராஜகிரியில் உள்ள ஆசிரியர் அப்துல் லத்தீப் அவர்களை சந்தித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார், மலேசிய நாட்டின் சரவாக் மாநில துணை முதல்வர் ஆவான் டெங்கா. மலேசிய நாட்டில் சரவாக் மாநிலத்தின் துணை முதல்வராக … Read more