நடு ரோட்டில் மதுபோதையில் ரகளை – 3 பெண்கள்மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை

திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் குடிபோதையில் ரகளை ஈடுபட்ட 3 பெண்கள் மீது 2 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் நேற்று இரவு 11 மணி அளவில் 3 பெண்கள் மது அருந்திவிட்டு அங்கு சாலையில் செல்பவர்களிடம் ரகளையில் ஈடுபடுவதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. தகவலின் அடிப்படையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரகளையில் ஈடுபட்ட மூன்று … Read more

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்திற்கான தேடல் குழு அறிவிப்பு. எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த சுதா சேஷையன் பதவிக்காலம் கடந்த டிசம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில் புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய  ஓய்வுப்பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சுப்புராஜ் தலைமையில் தேடல் குழு ஜனவரி முதல் வாரத்தில் அமைக்கப்பட்டது. இந்த குழுவில் மூத்த மருத்துவர்கள் வசந்தி வித்யா சாகரன் , ராமச்சந்திரா மருத்துவமனையின் … Read more

கோவை கோர்ட் வாசல் கொலை வழக்கு – தப்பமுயன்ற குற்றவாளி போலீசாரிடம் வசமாக சிக்கியது எப்படி?

கோவை நீதிமன்ற வளாகம் அருகே கோகுல் என்ற இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது செய்யப்பட்டார். பாலத்தில் இருந்து கீழே குதித்து தப்ப முயன்றபோது காலில் முறிவு ஏற்பட்டு காவல்துறையிடம் சிக்கினார்.  கோவை நீதிமன்ற வளாகம் முன்பாக கடந்த மாதம் கோகுல் என்ற ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே 16 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தேடப்பட்டு வந்த குற்றவாளியான தூத்துக்குடியை சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் இன்று ரத்தினபுரி பகுதியில் … Read more

நட்பில் தொடங்கி கொலையில் முடிந்த இளம்பெண்களின் காதல் … தெலங்கானாவில் நடந்தது என்ன?

நட்பில் தொடங்கி, காதலில் விழுந்து, ஒன்றாக இணைந்து வாழ்ந்த இரு இளம்பெண்களின் கதை கொலையில் முடிந்திருக்கிறது. தெலங்கானா மாநிலம் மஞ்சிராலா மாவட்டத்தில் இந்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது. மஞ்சிராலா மாவட்டம் மமிதிகட்டு பகுதியைச் சேர்ந்தவர் நல்லாரி அஞ்சலி. இவர் நென்னேலா மண்டலத்துக்குட்பட்ட மன்னேகுடத்திலுள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். அப்படி சென்றபோது, அந்த கிராமத்தைச் சேர்ந்த குர்த் மகேஸ்வரி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் இருவரின் நட்பும் காதலாகவும் மாறிவிட்டது. இதனையடுத்து இருவரும் … Read more

மத்திய அரசு பட்டியலில் இருந்து காணாமல்போன விருதுநகர் மெகா ஜவுளி பூங்கா

விருதுநகரில் அமையவில்லை மெகா ஜவுளி பூங்கா 4445 கோடி செலவில் அமைக்கப்படும் 7 டெக்ஸ்டைல் மெகா பூங்காக்களின் பட்டியலை வெளியிட்டது மத்திய அரசு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 4445 கோடி செலவில் மெகா ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்தார். ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை முன்னெடுக்கும் நோக்கில் PM MITRA Parks செயல்படுத்தப்படுகிறது.முன்மொழியப்பட்ட … Read more

சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவின் பால் உற்பத்தி 10 மடங்கு அதிகரித்துள்ளது – அமித் ஷா

சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் பால் உற்பத்தி 10 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள குஜராத் சென்றுள்ள மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுதுறை அமைச்சர் அமித் ஷா, காந்திநகரில் நடைபெற்ற 49-வது பால் தொழில் மாநாட்டில் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் பால் உற்பத்தி 10 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். மேலும், 1970 முதல் 2022 வரை இந்தியாவின் மக்கள்தொகை 4 மடங்கு அதிகரித்துள்ளது மற்றும் … Read more

”உயிர் உங்களுடையது தேவி” – அகநக பாடலும் சுஹாசினி கூறிய காதல் ரகசியமும்!

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் முதல் பாடலான அகநக நாளை மறுநாள் (மார்ச் 20) வெளியிடப்படும் என படக்குழு அறிவித்திருக்கிறது. அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் நாவல் அதே பெயரிலேயே திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்த நிலையில் அடுத்த பாகம் எதிர்வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக இருக்கிறது. Can’t Wait to witness the Extended Version!#Aganaga pic.twitter.com/jceZ6aqChP — Barani SM … Read more

மதுரை: கடத்தப்பட்ட 2 மணி நேரத்தில் மீட்கப்பட்ட 3 மாத பெண் குழந்தை – போலீசாருக்கு பாராட்டு

மதுரையில் 3 மாத பெண் குழந்தையை கடத்திய 2 மணி நேரத்தில் பெண் உட்பட இருவரை கைது செய்து குழந்தையை மீட்ட காவல் துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 25 வயதான சையது அலி பாத்திமா தனது கணவர் ஹரிஷ் குமார் மற்றும் 3 மாத பெண் குழந்தை ஷாலினியுடன் திண்டுக்கல் செல்வதற்காக மதுரை ரயில் நிலைய பிளாட்பாரத்தில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது மர்மநபர் ஒருவர் 3 மாத குழந்தை … Read more

”தல தோனிய பாத்துடலாம்னு வந்திருக்கேன்” – டிக்கெட் வாங்க சேப்பாக்கத்தில் குவிந்த ரசிகர்கள்!

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.  இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள இந்நிலையில், அதற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 11 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நேற்று இரவில் இருந்தே ரசிகர்கள் வெளியே காத்துக் கொண்டிருந்தனர். 35 ஆயிரம் டிக்கெட்டுகள் கொண்ட … Read more

’3 நாட்கள் பள்ளிக்கு வந்தாலே ஹால் டிக்கெட் தரப்படும்’ என அமைச்சர் சொன்னாரா? உண்மை என்ன?

மாணவர்கள் அரசு பொதுத் தேர்வெழுத 75 சதவீதம் வருகைப்பதிவு அவசியம் என தஞ்சையில் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்செண்ட்! தமிழ்நாட்டில் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வு தொடங்கிய முதல் நாளே மிகப்பெரிய அதிர்ச்சியாக தகவல் வெளிவந்தது. அதாவது, சுமார் 50,000 மாணவர்கள் தினசரி தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆகின்றனர் என்ற செய்தி தமிழகத்தையே அதிர செய்தது. ஏன்? எதனால்? எப்படி? மாணவர்கள் தேர்வு எழுதாமல் போகிறார்கள் … Read more