”ரூ10 நாணயம் தான்.. அது தமிழன்-வடக்கன் பிரச்னை இல்லை”- கடை உரிமையாளரும், இளைஞரும் விளக்கம்

பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட வட இந்திய கடை உரிமையாளர் மன்னிப்புக் கோரி வீடியோ வெளியிட்டுள்ளார். இதனிடையே 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்ததால் தான் வாக்குவாதம் செய்தேன் தமிழன் வடக்கன் என்று பிரித்துப் பேசவில்லை என்று சேலத்தை சேர்ந்த இளைஞரும் கருத்து தெரிவித்துள்ளார். சேலம் சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ரிச்சர்ட் விஜயகுமார் என்பவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு வட இந்தியர் நடத்தும் டீக்கடை ஒன்றில் சமோசா வாங்குவதற்காக … Read more

கோவில் நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டிய பாஜக நிர்வாகி.. இடித்து தரைமட்டமாக்கிய நிர்வாகம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்குச் சொந்தமான இடத்தை பாஜக பிரமுகர் ஆக்கிரமித்து வீடு கட்டியதாக கூறப்படும் நிலையில், நீதிமன்ற  உத்தரவுபடி போலீசார் துணையுடன் கோவில் நிர்வாகத்தினர் மீட்டனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு நான்கு புறங்களிலும் முக்கியமான கோபுரங்கள் உள்ளன. அதில் வடக்கு புறமுள்ள அம்மணி அம்மன் கோபுரத்தை கட்டியவர், அம்மணி அம்மன் என்ற பெண் சித்தர் ஆவார். இவருக்குச் சொந்தமான கோவிலை ஒட்டிள்ள அம்மணி அம்மன் மடம் 23 ஆயிரத்து 800 சதுரடி பரப்பளவை கொண்டது. தற்போது இந்த மடம், … Read more

திடீரென எழுந்த அலாரம் சத்தம்.. ஏடிஎம் மையத்தில் இருந்து தப்பியோடிய கொள்ளையர்கள்!

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் எஸ்.பி.ஐ. ஏடிஎம் மையம் உள்ளது. நேற்று நள்ளிரவு இந்த ஏடிஎம் மையத்தில் அலாரம் ஒலிப்பதாக எஸ்பிஐ வங்கியின் தலைமையிடத்தில் இருந்து சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் துறையினர் அங்கு சென்ற போது, கொள்ளையர்கள் இருவர் தப்பிச் சென்றதாக தெரிகிறது. இதனையடுத்து ஏடிஎம் மையத்தை … Read more

தனுஷ்கோடி டூ தலைமன்னார்.. பாக் ஜலசந்தியை இருபுறமும் நீந்தி சாதனை படைத்த பெண்!

தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கும், தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு பாக் ஜலசந்தி கடற்பகுதியை நீந்திக் கடந்த முதல் பெண் என்ற சாதனையை பெங்களூரைச் சேர்ந்த சுஜேத்தா தேப் பர்மன் (40) என்பவர் படைத்துள்ளார். ஆழம் குறைந்த ஆபத்தான கடல் பகுதி! பாக் ஜலசந்தி கடல் பகுதி தமிழகத்தையும் இலங்கையையும் பிரிக்கும் நீரிணை ஆகும். ராமேஸ்வரம் தீவும், அதனை தொடர்ந்துள்ள 13 மணல் தீடைகளும், பாக் ஜலசந்தி கடற்பகுதியை மன்னார் வளைகுடாவில் இருந்து பிரிக்கிறது. தமிழகத்திலேயே மிகவும் ஆழம் குறைந்த … Read more

பாஜக – அதிமுக கூட்டணிக்கு அண்ணாமலை எதிர்ப்பா? நிர்வாகிகள் கூட்டத்தில் நடந்தது என்ன?

தமிழ்நாடு பாஜக – அதிமுக இடையிலான முரண்பாடுகள் குறித்து பல பரபரப்பு கருத்துகளும், விமர்சனங்களும் இருதரப்பிலும் அண்மைக்காலமாக தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இவற்றுக்கெல்லாம் மேலும் தீனி போடும் வகையில் மாநில தலைவரான அண்ணாமலை பேசியதாக வெளியான செய்தி அமைந்திருக்கிறது. அதிமுக – பாஜக கூட்டணிக்கு அண்ணாமலை எதிர்ப்பா? அதாவது, தமிழ்நாட்டில் நாம் தனியாக தேர்தலை சந்தித்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும், கூட்டணி நிலைப்பாட்டை எடுத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன் … Read more

அத்துமீறி நடந்த இளைஞர்.. கருங்கல்லை வீசி வீரத்துடன் எதிர்கொண்ட இளம் பெண் ஆசிரியை!

பள்ளிக்கு சைக்கிளில் சென்ற ஆசிரியையிடம் பைக்கில் வந்த வாலிபர் பாலியல் ரீதியாக அத்துமீறிய சம்பவம் உத்திரமேரூரில் நடந்திருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த இடையம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் மெய்யூர் ஓடையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அதன்படி நேற்று (மார்ச் 17) வழக்கம்போல தனது சைக்கிளில் பள்ளிக்கு சென்றிருக்கிறார். அப்போது அந்த வழியாக ஆசிரியையை பைக்கில் பின் தொடர்ந்து வந்த இளைஞர் இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார். இதனால் … Read more

”சிவா எனக்கு தம்பி. சமாதானமாகி விட்டோம்”..ஆர்டர் போட்ட முதல்வர்.. நேரில் சென்ற கே.என்.நேரு

திமுகவின் மாநிலங்களவை தலைவரும், அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளருமான திருச்சி சிவா வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார், பைக் மற்றும் நாற்காலிகளை தமிழ்நாட்டின் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும், திமுகவின் முதன்மை செயலாளருமான கே.என்.நேருவின் ஆதரவாளர்களே அடித்து துவம்சம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.  கடந்த மார்ச் 15ம் தேதி நடந்த இந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பையே ஏற்படுத்தியது. இதனையடுத்து கட்சி சார்பில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது திமுக தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த … Read more

மின் கட்டணம் செலுத்த நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழல்..- நடுத்தர வடசென்னை மக்கள் அவதி

வடசென்னையை பொறுத்தவரை 100ல் 40% பணக்காரர்களாக இருந்தாலும் மீதமுள்ள 60% சதவிகிதம் பேர் அன்றாட கூலி வேலைக்குச்சென்று தங்களது வாழ்க்கையை நடத்துகின்ற மக்களும், கடலில் நெடுந்தூரம் சென்று மீன்களை பிடித்து வந்து அதை விற்றுக் கொண்டு அன்றாட வாழ்க்கையை நடத்திக்கொள்ளும் மீனவ மக்களாகிய நடுத்தர மக்களும் வாழ்கின்ற பகுதியாக உள்ளது. இப்பகுதியில் வாழ்கின்ற மக்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்துகின்ற மின்சாரத்திற்கு இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டணம் கட்டி வந்தனர். தற்பொழுது ஒருசில பகுதிகளில் மாதத்திற்கு ஒருமுறை … Read more

‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் முதல் பாடல் எப்போது? – படக்குழு வெளியிட்ட தகவல்!

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படத்தின் முதல் பாடல் எப்போது வெளியிடப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை, இயக்குநர் மணிரத்னம் திரைப்படமாக எடுத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகிய இந்தப் படத்தின் முதல் பாகம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ம் தேதி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. சினிமா ரசிகர்களை மிகவும் கவர்ந்த ‘பொன்னியின் செல்வன் 1’ திரைப்படம், 500 கோடிகளை வசூலித்து பல்வேறு சாதனைகளை கோலிவுட் திரையுலகில் … Read more

‘என்னயே வேலைய விட்டு தூக்குறீங்களா?’ – பழிவாங்கிய இளைஞரால் அதிர்ந்த குடியிருப்புவாசிகள்!

வேலையை விட்டு நீக்கியதற்காக இளைஞர் ஒருவர், அப்பார்ட்மெண்ட்டில் இருந்த கார்களின் மீது ஆசிட்டை வீசி பழி வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகரில் இருக்கும் பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில், வீட்டு உரிமையாளர்களின் கார்களை தினமும் சுத்தம் செய்வதற்கு என்றே, தனியாக ஒருவரை அந்த அடுக்குமாடி குடியிருப்பு சங்கம் வேலைக்கு அமர்த்திருக்கும். இதற்கும் சேர்த்தே, மாதந்தோறும் பராமரிப்பு செலவு என்று ஒன்று வீட்டு உரிமையாளர்களிடம் இருந்து ஒரு தொகை வசூலிக்கப்படும். அந்த வகையில், உத்தரப்பிரதேச மாநிலம் ஹார்தோய் மாவட்டத்தைச் … Read more