”என்னை அரசியலுக்குள் இழுக்காதீங்க.. தாங்கமாட்டீங்க”-பிக்பாஸ் பிரபலத்தின் பரபரப்பு ட்வீட்!

தன்னை அரசியலுக்கு இழுக்க வேண்டாம் என்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலாஜி முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பாலாஜி முருகதாஸ், நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை டேக் செய்து ’தயவு செய்து டாஸ்மாக் கடைகளை மூடுங்கள், இது ஏராளமான உயிர்களை அழித்துள்ளது, ரம்மியை ஒப்பிடும் போது குடியால் அழிந்தவர்கள் தான் அதிகம் என்று பதிவு செய்திருந்தார். அவருடைய … Read more

’2018-இல் நடந்தது ஞாபகம் இருக்கா?’-குரூப்4, நில அளவர் தேர்வு முடிகளும் TNPSC-ன் விளக்கமும்

சமீபத்தில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட குரூப் 4 தேர்விலும்,  1089 காலிப் பணியிடங்களுக்கான நில அளவையர் தேர்விலும் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதுதொடர்பாக விரிவாக காணலாம்.. நில அளவர் தேர்வு முடிவில் என்ன சர்ச்சை? தமிழக அரசின் நில அளவை துறையில் பணியாற்றுவதற்காக ஆயிரம் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு, அதற்கான தேர்வு 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. … Read more

பத்து தல To லியோ.. 2023ல் திரையரங்குகளை அதிரவைக்க காத்திருக்கும் நட்சத்திரங்களின் படங்கள்!

ஆண்டுதோறும் உலக அளவில் ஆயிரக்கணக்கான படங்கள் வெளியாகின்றன. அதிலும் தமிழ் சினிமாவில் மட்டும் 100க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின்றன. அதில், குறிப்பாக இந்த ஆண்டு மட்டும் ரிலீஸாக முன்னணி நடிகர்கள் நடித்திருக்கும் சில படங்கள் குறித்த பட்டியலைப் பார்ப்போம். இந்த மாதம் முடிய இன்னும் ஒருசில நாட்களே உள்ளன. அந்த நாட்களிலும் சில படங்கள் வெளியாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழரசன் – மார்ச் 30 பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனி, சுரேஷ் கோபி, … Read more

அமெரிக்காவில் பரபரப்பு: இந்திய பத்திரிகையாளர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்

வாஷிங்டனில் இந்திய பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.  ‘வாரிஸ் பஞ்சாப் டி’ அமைப்பின் தலைவராக அம்ரித்பால் சிங் பொறுப்பேற்றது முதல் பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் பிரிவினைவாதக் கொள்கைகள் தலைதூக்கின. இதையடுத்து அவரை கைது செய்ய பஞ்சாப் காவல்துறை முனைப்பு காட்டிவருகிறது. அதைக் கண்டித்து அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை செய்தியாக்கிக் கொண்டிருந்த பிடிஐ செய்தி நிறுவனத்தின் ஊடகவியலாளர் லலித் குமார் ஜா … Read more

காயத்தை குணப்படுத்தியவரை விட்டு பிரியாத கொக்கு.. விபரீதத்தில் முடிந்த மனிதநேய செயல்!

சாரசு கொக்கை பராமரித்து வந்த ஆரிப் கான் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி பகுதியைச் சேர்ந்தவர் ஆரிப் கான் குர்ஜர். சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் தனது தோட்டத்தில் கொக்கு வகையை சார்ந்த சாரசு கொக்கு என்றழைக்கப்படும் பறவை ஒன்று அடிபட்ட நிலையில் இருந்ததை அவர் பார்த்துள்ளார். அதனை மீட்ட அவர், உடல்நலன் தேர்ச்சி பெறவும் உதவியுள்ளார். அதன் காயம் சரியானதும் பறந்து செல்லும் என … Read more

”அடிச்சு கேட்பாங்க அப்பவும் சொல்லிடாதீங்க”.. லியோ அப்டேட்டும்.. GVM கலகல பதிலும்!

இயக்குநரும் நடிகருமான கெளதம் வாசுதேவ் மேனன், நடிகர் விஜய்யின் ‘லியோ’ படம் குறித்து சில சுவாரஸ்ய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். ‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் ‘லியோ’. சென்னையை தொடர்ந்து, கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக காஷ்மீரில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. கடும்குளிரையும் பொருட்படுத்தாமல் 500-க்கும் மேற்பட்டோரை வைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்புதான் காஷ்மீரில் படப்பிடிப்பு நிறைவடைந்தது. அங்கு … Read more

”உலக நாடுகளுக்கு வழிகாட்டியாக இந்தியாவும், பிரதமர் மோடியும் உள்ளனர்” – எல்.முருகன்

உலக நாடுகளுக்கு வழிகாட்டியாக இந்தியாவும், பிரதமர் நரேந்திர மோடியும் உள்ளனர் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசினார். மதுரை சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இளைய பாரதம் சேவா டிரஸ்ட், ஏபிவிபி அமைப்பின் சார்பில் நடைபெறும், பேராசிரியர் பரமசிவன் நினைவு தின நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பங்கேற்று பேசினார். அப்போது, ”தேச முன்னேற்றத்திற்கு தேச நலனுக்கு பாடுபட்டவர்கள் தீவிரவாதிகளால் சமூக விரோதிகளால் கொல்லப்பட்டனர். அவர்களுடைய தியாகத்தால் தான் நாட்டில் ஆன்மிகமும், சேவையும் … Read more

முதல் நாள் இன்ஸ்டாவில் வீடியோ.. மறுநாள் சடலமாக ஹோட்டலில் மீட்பு – போஜ்புரி நடிகை தற்கொலை?

பிரபல போஜ்புரி நடிகை அகன்ஷா துபே உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அகன்ஷா துபே 2019 ஆம் ஆண்டில் ‘மேரி ஜங் மேரா ஃபைஸ்லா’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.  இந்தப் படத்தில் அவர் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார்.  இதற்குப் பிறகு, நடிகை ‘முஜ்சே ஷாதி கரோகி’ மற்றும் ‘சாஜன்’ போன்ற படங்களில் தனது அற்புதமான நடிப்புத் திறனைக் காட்டி இருந்தார்.. நேற்று இரவு,  படப்பிடிப்பிற்குப் பிறகு உத்தர பிரதேசம் மாநிலம் … Read more

”ராகுல் காந்தியை பதவியில் இருந்து நீக்கி இருப்பது ஜனநாயக படுகொலை” – சீமான்

மக்கள் கொடுத்த பதவியில் இருந்து ராகுல் காந்தியை நீக்கி இருப்பது ஜனநாயக படுகொலை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். சென்னை ஜாபர்கான் பேட்டை, கங்கையம்மன் கோவில் தெருவில் அமைக்கப்பட்டுள்ள நாம் தமிழர் கட்சியின், குருதிக் கொடை பாசறை தலைமை அலுவலகம், திலீபன் குடிலை, அக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திறந்து வைத்தார். இதையடுத்து குருதிக் கொடை உதவி எண், புத்தகம் மற்றும் இணையதளம் உள்ளிட்டவற்றை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து … Read more

அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி நிச்சயம் – ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை

அதிமுகவினர் அனைவரும் முழுமையாக ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி நிச்சயம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் கஜேந்திரன் இல்ல மணவிழாவில் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். தொடர்ந்து மணமக்கள் ரஞ்சித் மற்றும் புவனேஸ்வரி ஆகியோரின் திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்துகளை தெரிவித்தார். முன்னதாக ஏராளமான நிர்வாகிகள் ஓ.பன்னீர் செல்வத்திற்கு, மேளம் தாளம் முழங்க திறந்த வாகனத்தில் பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் பேசினார். … Read more