நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 12 வயது பள்ளி மாணவன்: என்ன செய்தார் அப்படி?

12 வயது பள்ளி மாணவன் 31 கிலோ மீட்டர் தூரத்தை சிலம்பம் சுற்றிக் கொண்டே ஸ்கேட்டிங் செய்து தனி நபர் உலக சாதனை படைத்துள்ளார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கே.நிதின் (12). தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் இவர், கடந்த 2 ஆண்டுகளாக ஸ்கேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற தனி நபர் உலக சாதனை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் … Read more

சிறுபான்மையினர் நல நிதியில் வெறும் 14% மட்டுமே செலவு! மத்திய அமைச்சரின் பதிலால் அதிர்ச்சி!

சிறுபான்மையினர் நலத்திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதில் 14 சதவிகிதம் மட்டுமே செலவினம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரான சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். சிறுபான்மையினர் நலத்திட்ட நிதி பற்றி கேள்வி எழுப்பிய எம்பி சு.வெங்கடேசன்! நாடாளுமன்ற உறுப்பினரான சு. வெங்கடேசன் எம். பி (சி.பி.எம்) சிறுபான்மை மக்கள் நலனுக்கான திட்டங்களின் நிதி ஒதுக்கீடுகள், அதற்காக தற்போதுவரை செலவிடப்பட்ட தொகை பற்றிய கேள்வியை நாடாளுமன்றத்தில் எழுப்பி இருந்தார். அவர் எழுப்பிய கேள்வியில், ”கடந்த … Read more

சென்னை: வழக்கறிஞர் வெட்டிக் கொலை  – முன்விரோதம் காரணமா? போலீசார் விசாரணை

சென்னையில் வழக்கறிஞர் ஒருவரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை துரைப்பாக்கம் ராஜீவ் நகரை சேர்ந்தவர் வழக்கறிஞர் ஜெய்கணேஷ் (32), இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பிரபல ரவுடி சிடி.மணி துப்பாக்கியுடன் கைதான வழக்கு ஒன்றில் இவரும் உள்ளார். அதன் பிறகு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கறிஞர்களோடு பேசி விட்டு இரவு துரைப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது … Read more

காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு: தாயுடன் சேர்ந்து தந்தையை அடித்துக் கொலை செய்த மகன்

பெரம்பலூரில் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை, தாயுடன் சேர்ந்து அடித்துக் கொலை செய்த மகன் செயலால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் பாரதிதாசன் நகரைச் சேர்ந்தவர்கள் ராமகிருஷ்ணண் (45), மலர்க்கொடி (40) தம்பதியர். இவர்களுக்கு வெங்கடேஷ் (26) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் வெங்கடேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளார்.இதற்கு அவரது தந்தை ராமகிருஷ்ணண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று தந்தை மகனுக்கு இடையே வாக்குவாதம் நடந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து … Read more

ராகுல் காந்தி தகுதி நீக்கம்: மோடிக்கு கவுன்ட்டவுன் தொடங்கிவிட்டது – ஆர்எஸ்.பாரதி

ராகுல் காந்தி எம்.பி. பதவியை தகுதி நீக்கத்தால் பிரதமர் மோடியின் கவுன்ட்டவுன் தொடங்கிவிட்டது என சிவகங்கையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசினார். சிவகங்கையில் நடைபெற்ற மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ்.பாரதி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ராகுல் காந்திக்கு இன்னும் மூன்று நாட்களில் பதவியை பெற்றுத் தருவோம். 24 மணி நேரத்தில் ராகுல் காந்தியின் பதவியை பறித்த பாராளுமன்ற சபாநாயகர், … Read more

"ஆன்லைன் ரம்மி தடை சட்டம்: ஆளுநர் அனுமதி தந்தே ஆக வேண்டும்" – துரைமுருகன்

ராகுல்காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டது குற்றத்தின் அடிப்படையில் நிகழ்ந்ததாக கருத முடியாது, இது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல என நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். வேலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் நந்தகுமார் தலைமையில் தனியார் ஓட்டலில் நடந்தது. இதில், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், உள்ளிடோர் பங்கேற்றனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்றார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் … Read more

"கொண்டாங்கம்மா நான் தூக்கிட்டுவரேன்" – உதவுவது போல் நடித்து குழந்தையை கடத்திச் சென்ற பெண்

திருப்பூர் அரசு மருத்துவமனையில் மூன்று நாட்களாக உதவுவது போல் நடித்து 12 நாளான ஆண் குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை பிடிக்க காவல் துறையினர் தனிப்படை அமைத்துள்ளனர் திருப்பூர் செரங்காடு மூன்றாவது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் கோபி (30). இவரது மனைவி சத்யா (28). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், அவருக்கு கடந்த 18 ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் கோபி அவரை திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். இதையடுத்து … Read more

"ராகுல் காந்தி தகுதி நீக்கம்: திட்டமிட்ட அரசியல் சதி" – திருமாவளவன்

ராகுல் காந்தி மீதான நடவடிக்கை திட்டமிட்ட அரசியல் சதி, இது ஒருபோதும் அவரை பாதிக்காது. மம்தா பானர்ஜி காங்கிரஸ் அல்லாத கூட்டணியை உருவாக்க முயல்வது அவருக்கும் நல்லதல்ல நாட்டிற்கும் நல்லதல்ல என தொல்.திருமாவளவன் தெரிவித்தார். திருச்சி மாநகர ஆர்.சி, சி.எஸ்.ஐ, டி.இ.எல்.சி திருச்சபைகளின் பொதுநிலையினர் பேரவைகள் இணைந்து நடத்தும் சமூக அரசியல் ஆய்வரங்கம் திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இன்றைய சமூக அரசியல் தளங்களில் நாம் எதிர்கொள்ளும் சவால்கள் எனும் தலைப்பில் … Read more

5,805 கிலோ எடையுடன் விண்ணில் ஏவப்படும் 36 செயற்கைகோள்கள்! உலகத்தின் பார்வை இஸ்ரோ பக்கம்!

இஸ்ரோவின் GSLV Mark 3 (எல்.வி.எம்-3) ராக்கெட், 36 தொலை தொடர்பு செயற்கைக் கோள்களுடன் இன்று காலை 9 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இது இஸ்ரோவின் 6ஆவது GSLV Mark 3 வகை விண்கலம் என தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் வளர்ச்சிக்காகவும் தொலைத்தொடர்புக்காகவும் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டு வந்த நிலையில், உலக அளவில் வளர்ந்த நாடுகள், வணிகப் பயன்பாட்டிற்கு செயற்கை கோள்களை செலுத்தி வருகிறது. அந்த வரிசையில் கடந்த ஆண்டு இந்திய வான்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ இணைந்தது. … Read more

”மகனே இறந்துவிட்டார்” – கல்விக்கடனை கேட்டு வழக்குத் தொடர்ந்த வங்கியால் பெற்றோர் அதிர்ச்சி!

அரியலூர் மாவட்டத்தில் விபத்தில் இறந்த வாலிபருக்கு கல்விக்கடனை செலுத்த வேண்டும் என வங்கி தொடரப்பட்ட வழக்கின் கீழ் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் கீழகாவட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் அரவிந்த். இவர் தன்னுடைய பொறியியல் படிப்பிற்காக திருமழபாடி கனரா வங்கியில் ரூ.2 லட்சம் கல்விக்கடன் பெற்றுள்ளார். படிப்பு முடிந்து கடந்த ஆண்டு இன்டர்வியூக்காக கும்பகோணம் சென்று விட்டு ஊருக்கு வரும் பொழுது திருவையாறு அருகே சாலை விபத்தில் இறந்துவிட்டார். இதனையடுத்து அரவிந்த் இறந்தவுடன் … Read more