“இரட்டை இன்ஜின் அரசை தக்கவைக்க கர்நாடக மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்” – பிரதமர் மோடி
கர்நாடகம், இரட்டை இன்ஜின் அரசை தக்கவைத்துக்கொள்ள முடிவு செய்துவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி பரப்புரைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில சட்டமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தாவணகரேவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், கர்நாடக மக்கள், மத்தியிலும், மாநிலத்திலுமாக இயங்கும் இரட்டை இன்ஜின் அரசை தக்க வைத்துக்கொள்ள முடிவுசெய்துவிட்டார்கள் என்றார். சுயநலவாதிகளையும், சந்தர்ப்பவாதிகளையும் கொண்ட அரசால் நீண்டகாலமாக கர்நாடகத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு வந்ததாகப் பிரதமர் குறிப்பிட்டார். காங்கிரஸ் கட்சிக்கு இந்தியா குறித்தோ, கர்நாடகம் குறித்தோ எந்த முன்னேற்ற திட்டமும் இல்லை என்றும், காங்கிரஸ் கட்சியினருக்கு வெறும் பேச்சுதானே தவிரசெயலில் ஒன்றுமில்லை … Read more