"உ.பி. கேரளாவாக மாறினால்".. நல்ல கல்வி, சுகாதாரம் கிடைக்கும்.. பினராயி விஜயன் கொட்டு!

உத்தரப் பிரதேச மாநிலம் காஷ்மீராக, கேரளாவாக, மேற்கு வங்கமாக மாறி விடும் என்று அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியது அவருக்கு எதிராக திரும்பியுள்ளது. சசி தரூரைத் தொடர்ந்து தற்போது கேரள முதல்வர் பினராயி விஜயனும், யோகிக்கு பதில் கொடுத்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று முதல் சட்டசபைத் தேர்தல் தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக இன்று 58 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இந்த நிலையில் யோகி ஆதித்யநாத் ஒரு வீடியோ உரையை வெளியிட்டிருந்தார். அதில் வாக்காளர்கள் … Read more

மாளவிகா மோகனை தொடர்ந்து.. மனைவியுடன் மாலத்தீவுக்கு சென்ற பிரபல வாரிசு நடிகர்!

பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜின் மகன் சாந்தனு பாக்யராஜ். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். கடைசியாக அவரது நடிப்பில் முறுங்கைக்காய் சிப்ஸ் படம் ரிலீஸ் ஆனது. தற்போது எம் ராஜேஷ் இயக்கத்தில் தனது அடுத்த படத்தில் பிஸியாக உள்ளார் சாந்தனு. ரத்தக்களறியான பிக்பாஸ் வீடு… அனிதா கையில் ஏற்பட்ட காயம்… வனிதாவிடம் வாங்கிக்கட்டிய அபினய்! இந்தப் படத்தில் ஹன்சிகா மோத்வானி மற்றும் ஜனனி ஐயர் ஆகியோர் நடித்து வருகின்றனர். இதேபோல் சாந்தனுவின் மனைவி கிகியும் தனது … Read more

இது போனா… இல்ல சினிமா கேமராவா… 40MP செல்பி, 2 டெலிபோட்டோ லென்ஸுடன் வெளியான சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா!

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அதன் தொகுப்பு எஸ்22, எஸ்22+ ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. சாம்சங் கேலக்ஸி அன்பேக்ட் நிகழ்வு (Galaxy Unpacked event) மூலம் இந்த ஸ்மார்ட்போன்கள் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் சாம்சங் எஸ் 22 அல்ட்ரா அதிக திறன் கொண்ட ஸ்மார்ட்போனாக பார்க்கப்படுகிறது. திறன்மிக்க எக்சினோஸ் சிப்செட், ப்ரோ வகை சினிமேட்டிக் கேமரா, கார்னிங் கொரில்லா விக்டஸ்+ பாதுகாப்பு, 1TB மெமரி வேரியண்ட் என அசத்தல் அம்சங்களுடன் அதிரடியாய் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது … Read more

ஹிஜாப் பிரச்சினை: காவி சங்கிகளும் பச்சை சங்கிகளும்

“விடுதலை என்பது தலையை மூடியிருக்கும் துணியிலிருந்து அல்ல, மூளையைச் சுற்றியிருக்கும் குருட்டுச் சிலந்தி வலைகளிலிருந்து வெளியேறுவதுதான்” என்று ஒரு சகோதரி முகநூலில் எழுதியுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் ‘ஹிஜாப் ஆர்மி’ தற்கொலைப் படை ரேஞ்சுக்கு களமிறங்கி செயல்படும் என்பது எதிர்பார்த்ததுதான். இது ஹிஜாபிற்கு ஆதரவாக நிற்க வேண்டிய தருணமே, சந்தேகமில்லாமல்! ஏனெனில் இங்கே ஹிஜாபிற்கு எதிராக கிளர்ச்சி செய்வோர் இஸ்லாம் விரோத சக்திகள். அதேநேரம் ஹிஜாப் ஆர்மியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணமும் இதுவே. இந்த சந்தர்ப்பத்தில்தான் பெண்களின் … Read more

ஹிஜாப் விவகாரம்: இந்திய தூதரக அதிகாரிக்கு பாகிஸ்தான் சம்மன்!

கர்நாடக மாநில கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்ததற்கிடையே, இந்து மாணவர்கள் சிலர் காவித் துண்டு அணியும் போராட்டத்தில் ஈடுபட்டதால் இந்த விவகாரம் தேசிய அளவில் சர்ச்சையாகியுள்ளது. மாநிலத்தில் பதற்றத்தை தவிர்க்கும் பொருட்டு, பள்ளி, கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. மேலும், பெங்களூரில் கல்வி நிறுவனங்களுக்கு அருகே போராட்டம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஹிஜாப் விவகாரம் சர்வதேச அளவில் … Read more

Ajith:சூப்பர் ஸ்டாரை வாழ்த்திய போனி கபூர்: திட்டித் தீர்க்கும் அஜித் ரசிகாஸ்

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் வலிமை படம் பிப்ரவரி 24ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. ஆனால் படக்குழுவோ அமைதியாக உள்ளது. இந்நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ்பாபுவின் 17வது திருமண நாளுக்கு வாழ்த்து தெரிவித்து புகைப்படத்துடன் ட்வீட் செய்துள்ளார் போனி கபூர் . அதை பார்த்த அஜித் ரசிகர்கள் கடுப்பாகிவிட்டனர். கமெண்ட் பகுதியில் அவர்கள் கூறியிருப்பதாவது, வலிமை படத்தின் தெலுங்கு, கன்னடம், இந்தி ட்ரெய்லர்லாம் எங்கே. வலிமை ரிலீஸுக்கு இன்னும் 14 நாட்கள் தான் இருக்கிறது. … Read more

கொரோனாவை அழிக்க வரப்போகுது புதிய அஸ்திரம்!

2020 இல் இருந்து ஒட்டுமொத்த உலகையும் வாட்டி வதைத்துவரும் கொரோனா வைரஸ் அப்போது உருமாறி வருவதால். அதன் வீச்சு இதுவரை மூன்றாவது அலை வரை சென்றுள்ளது. ஒவ்வொரு அவையிலும் அதன் வீரியத்துக்கேற்ப லட்சக்கணக்கில் உயிர் பலி வாங்கி வரும் கொரோனாவின் கோரதாண்டவத்தில் இருந்து பொதுமக்களை காப்பாற்ற அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை உலக நாடுகள் தொடர் நடவடிக்கையாக மேற்கொண்டு வருகின்றன. என்னதான் முதல் டோஸ், இரண்டாவது டோஸ் என தடுப்பூசி போட்டாலும் வைரஸ் உருமாறும்போது மனிதர்களை கொரோனா தாக்கிதான் … Read more

பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வடிவேலுவுடன் இணையும் பிரபலம்..நாய் சேகர் ரிட்டன்ஸ் அப்டேட்..!

நடிகர் வடிவேலு நீண்ட இடைவேளைக்கு பின் நடித்து வரும் படம் நாய் சேகர் ரிட்டன்ஸ் . இப்படத்தை சுராஜ் இயக்க லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமான நிலையில் வடிவேலுவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதன் பின் சிகிச்சை பெற்று நலமடைந்த வடிவேலு தற்போது மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் படப்பிடிப்பை விரைவில் முடித்து வருகின்ற ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது இப்படத்தைப்பற்றிய அறிவிப்பு ஒன்று வந்துள்ளது. அதாவது … Read more

உத்தரப்பிரதேச தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

நாட்டின் மிகப்பெரிய மாநிலங்களுள் ஒன்றான உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, அம்மாநிலத்துக்கான தேர்தல் பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 7ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல் கட்டமாக 11 மாவட்டங்களில் உள்ள 58 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. ஷம்லி, கவுதம புத்தர் நகர் , முசாபர்நகர், மீரட், காஜியாபாத், அலிகார், மதுரா, ஆக்ரா உள்ளிட்ட … Read more

கேஸ் சிலிண்டர் விலை வரலாறு காணாத உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி!

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் மெல்ல, மெல்ல தளர்த்தப்பட்டு வருவதையடுத்து பிரிட்டனில் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இதனால் அங்கு சமையல் எரிவாயுவின் தேவை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக, வரலாறு காணாத அளவுக்கு எரிவாயு சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது. அதாவது கடந்த ஆண்டு (2021) துவக்கித்தில் விற்பனை செய்யப்பட்டதைவிட 300% அளவுக்கு சமையல் சிலிண்டரின் விலை அதிகரித்துள்ளதாக பிரிட்டன் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்ரன. அத்துடன் பொதுமக்களின் மின்சாரம், … Read more