டைமிங்கில் தட்டி தூக்கும் தளபதி.இதுதான் விஜய்யின் வெற்றி ரகசியமோ ?

நடிகர் விஜய் ஆரம்பகாலகட்டத்தில் எவ்வளவு விமர்சனங்களை சந்தித்தாரா அந்த அளவிற்கு தற்போது புகழை சந்தித்து வருகிறார். தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை வெற்றி படிக்கட்டுகளாக மாற்றி தன் அயராத உழைப்பால் இன்று வசூல் சக்ரவர்த்தியாக உருவெடுத்துள்ளார். தன் ஒவ்வொரு படங்களிலும் வசூலில் உச்சத்தை தொடும் விஜய் கடந்த கொரோனா சூழலிலும், திரையரங்கிற்க்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்ட சூழலிலும் மாஸ்டர் படத்தை வெளியிட்டார். 50 % இருக்கைக்கே திரையரங்கில் அனுமதி அளிக்கப்பட்டபோதும் மாஸ்டர் படம் வசூலில் அடித்து நொறுக்கியது. இது … Read more

இவரை ஞாபகம் இருக்கா மக்களே? – காதலர் தினத்தில் போராட்டம் அறிவித்துள்ளார்!

சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின் வகை மதுவை விற்பனை செய்ய அனுமதி அளித்து புதிய சட்டத்தை மகாராஷ்டிர மாநில அரசு அண்மையில் கொண்டு வந்தது. இதன்படி 1,,000 சதுர அடிக்கும் மேல் பரப்பளவு கொண்ட சூப்பர் மார்க்கெட்களில் ஒயின் விற்பனை செய்யலாம். இதற்கு ஆண்டுக்கு 5,000 ரூபாய் உரிம கட்டணம் செலுத்த வேண்டும் என்று சிவசேனா அரசு தெரிவித்துள்ளது. மாநில அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சியான பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், சூப்பர் மார்க்கெட்டில் … Read more

செம்ம ஹாப்பி மூடில் தலைவர், தளபதி ரசிகர்கள்… நாளைக்கு தரமான சம்பவம் இருக்கு..!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான படம் ‘அண்ணாத்த’. இந்தப்படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இவர்களுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த தீபாவளிக்கு வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. பலவித நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி ‘அண்ணாத்த’ படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனையை படைத்தது. அதனை தொடர்ந்து அண்மையில் இயக்குனர் சிவா வீட்டிற்கே சர்ப்ரைஸ் விசிட் … Read more

உ.பி: தேர்தலுக்கு முந்தைய நாள் கட்சி தாவிய வேட்பாளர்!

உத்தரப் பிரதேசத்தில் நாளை முதல் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கவுள்ளது. அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் பிரச்சாரத்தை முடித்துவிட்டனர். இந்த நிலையில், தேர்தலுக்கு முந்தைய நாளான இன்று கட்சி தாவியுள்ளார் வேட்பாளர் ஒருவர். உத்தரப் பிரதேச மாநிலம் சர்தாவால் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராக யவர் ரோஷன் அறிவிக்கப்பட்டார். நாளை தேர்தல் தொடங்கவுள்ள நிலையில் யவர் ரோஷன் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து வெளியேறி சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளார். இது ஆம் ஆத்மி கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை … Read more

கர்ப்பிணியை பார்த்து பாடி ஷேமிங் பண்றதெல்லாம் மிருகத்தனம்… கடுமையாக விளாசிய காஜல் அகர்வால்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால் . கடந்த 2020 ஆம் மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் கிட்சுலுவை காதலித்து திருமணம் செய்தார் காஜல் அகர்வால். பிரேம்ஜிக்கு பொண்ணு செட் ஆயிருச்சா? இவரதான் கட்டிக்கப்போறாரா? தீயாய் பரவும் போட்டோஸ்! தற்போது நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக உள்ளார். தற்போது துபாயில் கணவருடன் ஓய்வை கழித்து வரும் காஜல் அகர்வால் தன்னுடைய போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து வருகிறார். … Read more

என்னது இனிமேல் சமோசா கிடையாதா?.. "கட்" செய்த சுகாதார அமைச்சகம்.. ஏன் திடீர்னு?

மத்திய சுகாதார அமைச்சகத்தின் கேன்டீனில் இனிமேல் சமோசா விற்கப்படாது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்திய மக்களின் தேசிய உணவுப் பதார்த்தங்களில் சமோசாவுக்கும் முக்கிய இடம் உண்டு. சமோசா என்றதுமே வாய் திறந்து ஜொள்ளு வடிய ஒரு கடி கடிக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது.. அந்த அளவுக்கு சமோசாவுக்கு மக்கள் மனதில் தனி இடம் உண்டு. மாலை ஆகி விட்டாலே போதும் சமோசா ஒரு கையும்.. சூடான டீ இன்னொரு கையுமாக இருப்போரை அதிகம் பார்க்க முடியும். சூடான … Read more

லதா மங்கேஷ்கரைப்பற்றி வெளிப்படையாக பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்..ரொம்ப பெரிய மனசுதான்பா?

மறைந்த பாடகி லதா மங்கேஷ்கருக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். அதன் காரணமாகத்தான் அவரின் பிரிவு அனைவரிடமும் இந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 92 வயதான லதா கடந்த ஞாயிற்றுக்கிழமை உடல்நலக்குறைவால் காலமானார். கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக திரையுலகில் இருக்கும் லதா பல மொழிகளில் 30 ஆயிரம் பாடல்களை பாடியுள்ளார். இவருக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல் கடல் தாண்டியும் ரசிகர்கள் இருக்கின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான ஷோயிப் அக்தர் லதா மங்கேஷ்கரின் … Read more

Redmi Note 11: ஸ்னாப்டிராகன் 680 சிப்செட், 50 MP கேமரா, AMOLED திரை… வரிசைகட்டும் சியோமி போன்கள்!

இந்தியாவில் சியோமி நிறுவனம் தனது ரெட்மி தொகுப்பு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. குறைந்த விலை ரெட்மி நோட் 11, பட்ஜெட் விலை ரெட்மி நோட் 11எஸ் ஆகிய இரு ஸ்மார்ட்போன்கள் இந்திய டெக் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் சிறந்த அம்சங்களுடன் ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை பிப்ரவரி 11ஆம் தேதி பகல் 12 மணிக்கு தொடங்கவுள்ளது. ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனில், 90Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட அமோலெட் திரை, … Read more

காதலர் தினத்தில் தரமான சம்பவம்… திருநங்கைகள் முடிவு!

கேரள மாநிலத்தை சேர்ந்த திருநங்கைகளான சியாமா எஸ் பிரபா, மனு கார்த்திகா இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. சில ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் தற்போது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர் அதுவும் காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி திருமணம் செய்ய கொள்ள முடிவு எடுத்துள்ள திருநங்கைகள் ஒட்டுமொத்த கேரள மாநிலத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர். இந்த மகிழ்ச்சியான தகவலை உற்றார், உறவினர் மற்றும் குடும்பத்தினரிடம் தெரிவிக்க அகம் மகிழ்ந்த அவர்கள், இருவரையும் ஆசீர்வாதித்து … Read more

யம்மாடி.. இவ்வளவு பெரிய பாம்பா: யாஷிகாவின் வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!

துருவங்கள் பதினாறு, கவலை வேண்டாம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை யாஷிகா ஆனந்த் , தனது கிளாமரான நடிப்பால் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தவர். அதன்பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான யாஷிகா கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மோசமான கார் விபத்து ஒன்றில் சிக்கினார். தற்போது உடல்நலம் தேறியுள்ள யாஷிகா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த ஜூலை 25ம் தேதி அதிகாலை ஒரு மணி அளவில் நண்பர்களுடன் பார்ட்டி … Read more