கூகுள் குரோம் அப்டேட் பண்ணுங்க… ஆபத்து இருப்பதாக அரசு தகவல்!

இந்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஒரு பகுதியாக செயல்பட்டு வரும் ‘இந்திய கணினி அவசர உதவிக் குழு (CERT-In)’ கூகுள் குரோம் பிரவுசர் ( Google Chrome Browser ) பயனர்களுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது 98.0.4758.80.க்கு முந்தைய பதிப்பைப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த எச்சரிக்கை எனத் தெரிவித்துள்ளது. கணினியை இலக்காக வைத்து சைபர் அட்டாக் நடத்துவதற்கு சாதகமான பல காரணிகள் கூகுள் குரோம் உலாவியில் கண்டறியப்பட்டுள்ளது. சேமிப்பு, திரைப் பதிவு, உள்நுழைவு, பிடிஎப், ஆட்டோ பில், … Read more

'எங்களால் முடிந்தது; உங்களால் முடியாதா?' – சமாஜ்வாடிக்கு ஆதரவாக களத்தில் குதித்த மம்தா!

உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், சமாஜ்வாடி கட்சிக்கு ஆதரவாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பஞ்சாப், உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில், விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், உத்தர பிரதேச மாநிலத்தில், ஏழு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டத் தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி நடைபெற உள்ள … Read more

கொரோனா தடுப்பூசி… ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்!

டெல்டா, ஆல்பா, ஓமைக்ரான் என்று உருமாறும் வைரஸ்களால் ஏற்படும் தொற்றுகளை தடுக்கும் திறன் கொரோனா தடுப்பூசிகளுக்கு எந்த அளவுக்கு உள்ளது என்பது குறி்த்து இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் சில அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் ஒவ்வொரு முறை உருவாகும்போது அது மாற்றமடையும் அபாயம் உள்ளதால், அதன் வீரியம் எவ்வளவு வேகம் பிரதிபலிக்கிறதோ, அந்த அளவுக்கு புதிய மாறுபாடுகளால் தோன்றும் அபாயமும் அதிகமாக உள்ளது. கொரோனா வைரஸ்களை தடுப்பூசிகள் எதிர்கொள்கின்றன … Read more

Dhanush:மகன் விவாகரத்து: தனுஷ் அப்பாவுக்கு குவியும் பாராட்டு

தனுஷும், ஐஸ்வர்யாவும் தங்கள் பிரிவை அறிவித்துவிட்டார்கள். ஆனால் இது விவாகரத்து எல்லாம் இல்லை, எல்லா குடும்பத்திலும் நடக்கும் தகராறு தான் என தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா தெரிவித்தார். மேலும் தன் மகனையும், மருமகளையும் சேர்த்து வைக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். தனுஷுடன் மீண்டும் சேர்ந்துவிடலாம் என்று முடிவு செய்த பிறகு கஸ்தூரி ராஜாவை தான் முதலில் தொடர்பு கொண்டு பேசினாராம் ஐஸ்வர்யா . இருவரும் சேர்ந்து ஒரு பிளான் போட்டிருக்கிறார்கள். அதை தனுஷிடம் கஸ்தூரி … Read more

முகக்கவசத்தை தொட வேண்டாம்; எல்லாம் எங்க கேமரா பாத்துக்கும் – ஆப்பிளின் புதிய அப்டேட்!

ஆப்பிள் நிறுவனம் தனது பயனர்களுக்கு தொடர்ந்து புதுபுது அம்சங்களைப் புகுத்தி புதிய ஐஓஎஸ் (iOS) இயங்குதள அப்டேட்டுகளை வழங்குகிறது. தற்போது செயல்பாட்டில் உள்ள ஐஓஎஸ் 15.3, வரவிருக்கும் ஐஓஎஸ் 15.4 பதிப்புகள் குறித்து அண்மையில் தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் ஆப்பிள் ‘பேஸ் ஐடி வித் ஏ மாஸ்க்’ (Face ID with a mask) எனும் மாஸ்க்குடன் போனை திறக்கும் வசதியை ஆப்பிள் தனது பயனர்களுக்கு அறிமுகப்படுத்த உள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக … Read more

UP BJP Manifesto 2022: இலவச வாக்குறுதிகளை அள்ளி வீசிய பாஜக!

உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு வரும் 10 ஆம் தேதி முதல் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், அங்கு ஆளுங்கட்சியாக உள்ள பாஜக தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: * 60 வயதிற்கு மேற்பட்ட மூதாட்டிகளுக்கு மட்டும் அரசு பேருந்தில் இலவச பயணம், * கல்லூரி மாணவர்களுக்கு இலவச இருசக்கர வாகனம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்.. மோடி போட்ட … Read more

Freedom convoy: தகிக்கும் கனடா.. அமெரிக்க எல்லை முடக்கம்.. ஸ்தம்பித்தது போக்குவரத்து!

கனடாவிலிருந்து அமெரிக்கா செல்வோர் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்ற கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடியூ பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து அங்கு நடந்து வரும் லாரி டிரைவர்கள் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. டெல்லி விவசாயிகள் நடத்திய முற்றுகைப் போராட்டம் போல இந்த போராட்டம் வீரியம் அடைந்து வருகிறது. லாரி டிரைவர்கள் மட்டுமல்லாமல், விவசாயிகள், பொதுமக்கள் என பல தரப்பட்டவர்களும் இதில் கலந்து கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது போராட்டக்காரர்கள் கனடா – அமெரிக்க எல்லையை … Read more

மைக்கேல் மதன கமாராஜன் படத்தில் நடித்த பீம் பாய் நடிகர் காலமானார்.. திரைத்துறையினர் இரங்கல்!

நடிகர், தடகள வீரர், அரசியல்வாதி என பல திறமைகளை கொண்டவர் பிரவீன் குமார் சோப்தி . இவர் மகாபாரதம் டிவி சீரியலில் பீமராக நடித்ததன் மூலம் பிரபலமானார். 50க்கும் மேற்பட்ட இந்தி படங்களில் நடித்துள்ளார் பிரவீன் குமார் சோப்தி. பேச்சு வார்த்தை வேலைக்கு ஆகவில்லை…. கடைசி அஸ்திரத்தை கையில் எடுத்த ரஜினி! பிரவீன் குமார் தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான மைக்கேல் மதன காமராஜன் படத்தில் பீம்பாய் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நாகேஷை பீம் பாய் … Read more

ஒரே இலக்கணப் பிழை.. இவரெல்லாம் வைஸ் சான்சலரா.. வெளுத்தெடுத்த வருண் காந்தி!

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள சாந்திஸ்ரீ துல்லிப்புடி பண்டிட் வெளியிட்டுள்ள பிரஸ் ரிலீஸை பாஜக எம்.பி. வருண் காந்தி விமர்சித்துள்ளார். டெல்லியில் உள்ள புகழ் பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தராக சாந்திஸ்ரீ நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனம் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. தீவிர இந்துத்வா ஆதரவாளராக தன்னை அவ்வப்போது காட்டிக் கொண்டவர் சாந்திஸ்ரீ. அவர் போட்ட பழைய டிவீட்டுகளை பலரும் எடுத்து தற்போது வைரலாக்கி வருகின்றனர். டெல்லி விவசாயிகள் போராட்டத்தைக் கண்டித்தவர் இவர். … Read more

மீண்டும் முழு ஊரடங்கு.. மறு உத்தரவு வரும் வரை – அரசு அதிரடி!

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்ததை அடுத்து மறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அரசு அறிவித்து உள்ளது. சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் முதன்முதலில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு ஆட்டம் காட்டி வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமான சீனாவில், கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், மீண்டும் … Read more