ஹிஜாப் சர்ச்சை: மதச்சார்பின்மை எனும் பாசாங்கு!

ஒரு மாதத்துக்கு முன்பு கர்நாடகாவில் உள்ள உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் புர்கா அணிந்து வந்த ஆறு இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படவில்லை. இது சர்ச்சையைத் தோற்றுவிக்க, இந்துத்துவக் குழுக்கள் இஸ்லாமிய மாணவர்கள் தம் மதச்சின்னங்களை அணிந்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என பிரச்சாரம் செய்தனர். அடுத்து ஹிஜாப்பைக் கண்டிக்கும் நோக்கில் சில பள்ளி மாணவர்கள் காவித்துண்டுடன் பள்ளிக்கு வந்து பிரச்சினை கிளப்பினர். இரு நாட்களுக்கு முன்பு குந்தாபூரில் உள்ள பந்தர்கர்ஸ் கலை இலக்கிய கல்லூரியில் … Read more

தமிழக மீனவர்களின் 105 படகுகள் – ஏலம் விடும் பணி துவக்கம்!

இலங்கை கடற்படை பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின் 105 விசைப்படகுகளை ஏலம் விடும் பணி தொடங்கியது. எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை ஏலம் விடும் பணியை இலங்கை அரசு தொடங்கி உள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை அரசால் தமிழக மீனவா்கள் கைது செய்யப்பட்டும் அவா்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டும் உள்ளன. இந்த எதிர்பையும் மீறி … Read more

லிப்டில் சிக்கிக்கொண்ட ‘குக் வித் கோமாளி’ புகழ்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் புகழ் . தனது காமெடியான பேச்சு மற்றும் செயல்களால் பலரது உள்ளங்களில் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில், திருச்சி தென்னுார் சாலையில் புதியதாக கட்டப்பட்ட பிரியாணி உணவகம் திறப்பு விழாவிற்கு புகழ் சிறப்பு விருந்தினராக சென்றிருந்தார். மூன்றாவது தளத்தில் அமைந்திருந்த ஹோட்டலை திறந்து வைத்த அவர் அதன் பின்னர் தரை தளத்தில் இருந்த நகைக்கடைக்கு செல்ல திட்டமிட்டார். லிப்ட் மூலமாக புகழை அழைத்து செல்ல … Read more

கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து செல்ல கல்லூரி மாணவிகளுக்கு அனுமதி!

கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அத்துடன், கல்லூரி நிர்வாகம் தங்களது உடை விவகாரத்தில் தலையிடுவதாக கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் தேசிய மனித உரிமை ஆணையத்திலும் முறையிட்டுள்ளனர். மாணவிகளின் தாக்கல் செய்த மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது. … Read more

ஊசி போட்டுக்கங்க.. இல்லாட்டி டிஸ்மிஸ் தான்.. அமெரிக்காவில் திடீர் பரபரப்பு

அமெரிக்க ராணுவத்தினர் யாரேனும் கொரோனா தடுப்பூசி போட மறுத்தால் அவர்களை வேலையிலிருந்து டிஸ்மிஸ் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க ராணுவ அமைச்சர் கிறிஸ்டின் உர்முத் கூறுகையில், அமெரிக்க படையினர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இது கட்டாயமாகும். யாரேனும் ஊசி போட மறுத்தால் அவர்களால் படையினருக்கு ஆபத்துக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். அது படையினரின் ஆயத்த நிலையை கேள்விக்குறியாக்கும். எனவே ஊசி போட்டுக் கொள்ள முன்வராதோர் பணியிலிருந்து நீக்கப்படுவர். ஊசி போட முன்வராத வீரர்கள் முதல் கட்டமாக தனித்து … Read more

அண்ணாமலையாரை தரிசித்த அருண் விஜய்: இப்படி வேண்ட பெரிய மனசு வேணும்

படத்திற்குப் படம் தனது தனித்துவமான நடிப்பாலும் தன்னார்வ தொண்டு செயல்களினாலும் பல ரசிகர்களின் அன்பைப் பெற்றவர் நடிகர் அருண் விஜய் . தனது நடிப்பில் உருவான ‘சினம்’, ‘அக்னிசிறகுகள்’, ‘அருண்விஜய்யின் ‘பார்டர்’, ‘ யானை ’, ‘ஓ மை டாக்’ படங்கள் திரைக்கு வரத் தயாராகி வருவதைத் தொடர்ந்து நேற்று (6/02/2022) திருவண்ணாமலை கோயிலில் அண்ணாமலையாரை தரிசித்தார். இறைவனின் அருளோடு அனைத்து படங்களும் வெற்றி பெற்று தமிழ் திரையுலகம் மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்ப வேண்டும் என … Read more

Google Chrome Logo: 8 ஆண்டுகளுக்கு பிறகு மாறிய லோகோ; ஏன் இந்த மாற்றம் தெரியுமா?

கூகுள் குரோம் உலாவி ( Google Chrome Browser ) 8 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக லோகோவை மாற்றியுள்ளது. 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு கூகுள் நிறுவனம் தனது குரோம் பிரவுசருக்கு புதிய லுக்கைக் கொடுத்துள்ளது. கூகுள் குரோம் வடிவமைப்பாளரான எல்வின் ஹு, தனது ட்விட்டர் பக்கத்தில் லோகோவின் புதிய தோற்றத்தின் காரணம் குறித்து பதிவிட்டுள்ளார். சுமார் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு கூகுள் குரோம் பிரவுசரின் லோகோவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் பயனர்களுக்கு புதிய அப்டேட் மூலம் … Read more

சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு குட் நியூஸ் – வெளியானது செம அறிவிப்பு!

மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வரும் 12 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. தினமும், 15 ஆயிரம் பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில், பத்தினம்திட்டா மாவட்டத்தில், உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு, வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்துச் செல்வர். தற்போது கொரோனா காலக் கட்டம் என்பதால், கோவிலுக்கு … Read more

Dhanush:ஐஸ்வர்யா வேண்டாம், அதே சமயம்…: தனுஷ் அதிரடி

தனுஷும், ஐஸ்வர்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து பிரிந்துவிட்டார்கள். யாத்ரா, லிங்கா என்று இரண்டு வளர்ந்த மகன்கள் இருக்கிறார்கள். மகன்கள் வளர்ந்த பிறகு பிரிந்துவிடலாம் என்று பேசி வைத்து காத்திருந்தார்களாம். இதை அவர்களின் நட்பு வட்டாரத்தில் உள்ளவர்கள் தெரிவித்தனர். ஐஸ்வர்யாவை பிரிந்தாலும் அவரை முறைப்படி விவாகரத்து செய்யும் ஐடியா தனுஷுக்கு இல்லையாம். அப்படி விவாகரத்து செய்யாமல் வாழ்ந்தால் ஏதாவது பிரச்சனை வருமா என்று வழக்கறிஞர்களிடம் கேட்டறிந்தாராம். இதற்கிடையே தனுஷையும், ஐஸ்வர்யாவையும் சேர்த்து … Read more

Free Fire redeem code: பிப்ரவரி 7 கரீனா பிரீ பையர் ரிடீம் கோட்ஸ்!

ஒவ்வொரு நாளும் பிரீ பையர் விளையாடுபவர்களுக்கு இலவச குறியீடு வழங்கப்படுகிறது. இந்த குறியீடுகளைக் கொண்டு கேமர்கள் சலுகைகள் பெற முடியும். பிற நாட்களைப் போலவே, இன்றும் (பிப்ரவரி 7) Garena Free Fire விளையாட்டிற்கான பல குறியீடுகளை வெளியாகியுள்ளது. இந்த குறியீடுகள் கிழே பட்டியலிடப்பட்டுள்ளன. இதைப் பயன்படுத்தி நீங்கள் பல சலுகைகளைத் திறக்கலாம். குறியீடுகளை உடனடியாக பயன்படுத்த வேண்டும். அதாவது ஒவ்வொரு நாளும் பகல் 12 மணி வரையே இந்த குறியீடுகள் செல்லுபடியாகும் என்பது நினைவுக்கூரத்தக்கது. இன்றைய … Read more