மாற்றுத்திறனாளிக்கு கல்விக்கட்டணம் விலக்கு.. அரசாணை வெளியிட்டது தமிழக அரசு..!!

தமிழக முழுவதும் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் செலுத்த விலக்கு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தமிழக முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளிகள் இலவசமாக கல்வி பயிலலாம். மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் இருந்து கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார் எழுகிறது. தமிழக அரசின் உத்தரவை முறையாக பின்பற்றாத அதிகாரிகள் மீது … Read more

அரசு விரைவு பேருந்துகளில் இருக்கைகள் முன்பதிவு எண்ணிக்கை உயர்வு!

வரும் 7 ஆம் தேதி முதல் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் இருக்கைகள் முன்பதிவு செய்வது அதிகப்படுத்தப்படுவதாக, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார். அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தொலைதூரப் பயணிகளின் வசதிக்காக தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு பேருந்துகளை இயக்கி வருகிறது. இதில் பயணிகளின் பாதுகாப்பிற்கும் மற்றும் வசதியான பயணத்திற்காகவும் ஒரு மாதத்திற்கு முன் இருக்கைகளை இணையதளம் மற்றும் கைபேசி மூலம் முன்பதிவு செய்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் … Read more

திமுகவுக்கு எதிராக பழைய செய்தியை சித்தரித்து பரப்பிய ஆர்எஸ்எஸ் பிரமுகர் கைது..!!

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் சரவண பிரசாத் என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு அரசு பள்ளியில் திமுக நிர்வாகிகள் கள்ள சாராயம் காய்ச்சி கைதானது தொடர்பான நாளேடு செய்தியை வைத்து தற்பொழுது திமுகவினர் அரசுப் பள்ளியில் கள்ளச்சாராயம் தயாரிப்பது போன்று சித்தரிக்கும் வகையில் அந்த செய்தியை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்தப் பொய் செய்தி தொடர்பாக திமுக இளைஞர் அணி அமைப்பாளர் பாலசுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கோவை போலீசார் … Read more

மீனாட்சி அம்மன் கோயிலில் புகைப்படம் எடுக்க தடை விதிக்க முடியாது – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அனுமதியின்றி எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோவில் நிர்வாகம் தரப்பில் மீனாட்சி அம்மன் கோயிலில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஒப்பந்தம் கோரப்பட்டு அதன்படியே அனுமதி வழங்கப்படுகிறது என வாதம் முன் வைக்கப்பட்டது. இதனையடுத்து கோயில் தரப்பு பதிலை பதிவு செய்து மதுரை மீனாட்சி அம்மன் … Read more

ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. பணீந்திர ரெட்டிக்கு கூடுதல் பொறுப்பு.. தமிழ்நாடு அரசு ஆணை..!!

தமிழ்நாடு அரசின் கீழ் பணியாற்றும் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 1) கனிமவளச் செயலாளராக இருந்த ஜெயகாந்தன் சமூக நலத்துறை மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 2) போக்குவரத்து துறை செயலாளராக இருந்த நிர்மல்ராஜ் கனிமவளத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 3) கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக இருந்த சண்முகசுந்தரம் போக்குவரத்து துறை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். 4) சமூக நலத்துறை மற்றும் கனிமவளத்துறை இயக்குனராக … Read more

அரசு விரைவு பேருந்துகளில் தனியார் விளம்பரம் செய்ய அனுமதி.!

அரசு விரைவு பேருந்துகளில் தனியார் விளம்பரங்கள் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. அரசு விரைவு பேருந்துகளில் தனியார் விளம்பரம் செய்ய அனுமதிக்கப்படுவதால் மாதம்தோறும் 30 லட்சம் ரூபாய் கிடைக்கும் என அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் பேசியதாவது, கட்டண உயர்வு இன்றி, முதலீடுகள் இன்றி, வருவாய் பெறும் வகையில் அரசு பேருந்துகளில் தனியார் விளம்பரங்கள் செய்ய அனுமதிக்க உள்ளோம். தற்போதைய சென்னை மாநகர பேருந்துகளில் செய்யப்படும் விளம்பரங்கள் மூலம் மாதம் தோறும் ஒரு கோடி … Read more

8ஆம் வகுப்பு மாணவி பலாத்காரம் – போக்சோவில் 56 வயது நபர் கைது..!

கடலூர் மாவட்டத்தில் 8ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 56 வயது நபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் வடலூர் அடுத்த கீழ்வடக்குத்து காலனியை சேர்ந்தவர் தொழிலாளி செல்வராஜ்(56). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இவர், வடலூர் பகுதியில் பெட்டிக்கடை வைத்திருக்கும் ஒரு பெண்ணுக்கு கடைக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து உதவி செய்து வந்தார். இந்நிலையில் கடந்து சில மாதங்களுக்கு முன்பு, பெட்டிக்கடை வைத்திருந்த பெண்ணுக்கு விபத்து … Read more

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! முக்கிய புள்ளியை தூக்க கோரும் எடப்பாடி பழனிச்சாமி! அடுக்கடுக்கான அதிர்ச்சி புகார்கள்!

தடையில்லா கள்ளச் சாராய விற்பனைக்கு துணை போகும் விடியா திமுக அமைச்சர் செஞ்சி மஸ்தானை பதவி விலக வேண்டும் என்று, அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்கலாம்… கங்கையே சூதகமானால் என்ன செய்வது? என்பதற்கு ஏற்றார்போல், தற்போது நடைபெற்று வரும் தி.மு.க. ஆட்சியாளர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன.  மக்கள் தங்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் அரசிடமோ, ஆட்சியாளர்களிடமோ முறையிடுவார்கள். … Read more

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு.. மாணவர்களுக்கான ரேண்டம் எண் இன்று வெளியீடு

ஒவ்வொரு ஆண்டும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிந்ததும் மாணவர்கள் மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற படிப்புகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் குறிப்பாக பொறியியல் படிப்புக்கு ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பம் செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கு மே 6ம் தேதி முதல் நேற்று வரை விண்ணப்பம் செய்யலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 446 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில் 1.5 லட்சம் … Read more

பெரம்பலூரில் விபத்து: 3 பேர் பலி.! முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு.!

பெரம்பலூர் மாவட்டம் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆம்புலன்ஸ் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் நிதியுதவி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெரம்பலூர் மாவட்டம் மற்றும் வட்டம். எளம்பலூர் கிராமம், திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில சென்றுகொண்டிருந்த வாகனம், முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டரை முந்தும்போது எதிர்பாராதவிதமாக சாலை நடுவில் இருந்த தடுப்பில் மோதி சாலையின் இடதுபுறம் விபத்துக்குள்ளானது.  சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் … Read more