பெரம்பலூர் கோரா விபத்து! முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

பெரம்பலூர் மாவட்டம் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல்  தெரிவித்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “பெரம்பலூர் மாவட்டம் மற்றும் வட்டம், எளம்பலூர் கிராமம், திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் இன்று (05.06.2023) அதிகாலை திண்டுக்கல் தேசிய சென்றுகொண்டிருந்த வாகனம், முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டரை முந்தும்போது எதிர்பாராதவிதமாக சாலை நடுவில் இருந்த தடுப்பில் மோதி சாலையின் இடதுபுறம் விபத்துக்குள்ளானது.  சம்பவ இடத்திற்கு வந்த 108 … Read more

உலகின் எல்லாக் கேடுகளுக்கும் காரணமான நெகிழிக் கழிவுகளுக்கு முடிவு கட்ட  இந்த நாளில் உறுதியேற்போம்! 

  உலகின் முதல் சுற்றுச்சூழல் மாநாடு 1972 ஆம் ஆண்டு சுவீடன் நாட்டின் ஸ்டாக்கோம் நகரில்  ஜூன் 5-ஆம் தேதி கூட்டப்பட்டதை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் தேதி உலகச் சுற்றுச்சூழல் நாள் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.  ‘பிளாஸ்டிக் மாசுபாட்டை முறியடிப்போம்’ (Beat Plastic Pollution) என்பதை 2023ஆம் ஆண்டுக்கான உலக சுற்றுச்சூழல் நாள் முழக்கமாக ஐநா அவை முன் வைத்துள்ளது.  2018-ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட இந்த முழக்கம் இப்போது மீண்டும்  வைக்கப்பட்டிருகிறது.   உலக … Read more

பாயாசத்தால் ஏற்பட்ட பஞ்சாயத்து.. கலவரமான கல்யாண வீடு.!

பாயாசம் சுவையாக இல்லை என்று மணமகள் வீட்டினர் கூறியதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மணமகன் வீட்டினர் அவர்களை அடித்து துரத்திய சம்பவம் சீர்காழியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இன்று காலை சீர்காழி அருகே திருமண நிச்சயதார்த்த விழா ஒன்று நடந்துள்ளது. நிச்சயதார்த்தம் முடிந்த பின்னர் நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த உறவினர்களுக்கு சுவையான விருந்து கொடுக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக பந்தியில் பாயாசம் பரிமாறப்பட்டது.  அப்போது பெண் வீட்டைச் சேர்ந்த உறவினர்கள் பாயாசம் சரியில்லை என்று கூறியுள்ளனர். இதனால் மணமகன் … Read more

சிறுமி விஷ்ணு பிரியாவின் புகைப்படத்தை மதுபாட்டில்கள் மீதும் ஒட்டி அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – விஜயகாந்த் கோரிக்கை!

தந்தையின் குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்து கொண்ட சிறுமி விஷ்ணு பிரியாவின் புகைப்படத்தை அனைத்து மதுபாட்டில்கள் மீதும் ஒட்டி அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று, தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்த அவரின் அறிக்கையில், “வேலூர் மாவட்டம் சின்ன ராஜா குப்பம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி விஷ்ணு பிரியா, தந்தையின் குடிப்பழக்கத்தால் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.  … Read more

தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடல்.. விரைவில் வெளியாகும் அறிவிப்பு.!

தமிழகத்தில் மொத்தம் 5359 டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. இவை அனைத்தும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இதனிடையே டாஸ்மாக் மதுபான கடைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்து வருகிறது. மேலும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகிறது. அந்த வகையில் திமுக தேர்தல் அறிக்கையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் பூரண மதுவிலக்கு ஏற்படுத்தப்படும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்தில் … Read more

#BREAKING || ஜூன்-12ல் பள்ளிகள் திறப்பு..? முதல்வருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை..!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு தேதியானது மாற்றப்பட அதிக வாய்ப்புள்ளது. வரும் ஜூன் 7ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்த நிலையில் பல மாவட்டங்களில் வெயிலில் தாக்கம் 100 டிகிரி பாரன்ஹீட் தாண்டி பதிவாகி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றி அமைக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து பள்ளி கல்வித்துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் … Read more

39 வயது பெண்ணுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண் – சேலத்தில் பரபரப்பு.!!

39 வயது பெண்ணுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண் – சேலத்தில் பரபரப்பு.!! சேலம் மாவட்டத்தில் உள்ள கொண்டலாம்பட்டி அருகே அரச மரத்து கரட்டூரை சேர்ந்தவர்கள் தாமோதரன்-கௌசல்யா தம்பதியினர். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கவுசல்யா அதே ஊரைச் சேர்ந்த சேகர் என்பவரின் மனைவி மணிமேகலா என்பவருடன் நேற்று முன்தினம் மாயமாகிவிட்டார். இவர் வீட்டை விட்டு செல்வதற்கு முன்பாக கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார். அந்தக் … Read more

சிறுமி விஷ்ணுபிரியா மரணம்! மதுக்கடைகளையும் நிரந்தரமாக மூடுங்கள் – சீமான் ஆவேசம்! 

வேலூரைச் சேர்ந்த பதினாறே வயதான அன்புமகள் விஷ்ணுபிரியா தனது தந்தையின் குடிப்பழக்கத்தால் சீரழியும் குடும்பத்தின் நிலைகண்டு, மனம் வெறுத்து தற்கொலை செய்துகொண்டுள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. மலிவுவிலை மதுக்கடை என்ற பெயரில் தமிழ்க்குடும்பங்களை சிறுக சிறுக சீரழிக்கும் தமிழ்நாடு அரசின் மனச்சான்றற்ற கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்துக்குரியது என்று, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “கடந்த அதிமுக ஆட்சியின்போது தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கினை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று போராடிய … Read more

மெரினா கடற்கரையில் தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார்!

சென்னை : மெரினா கடற்கரையில் நள்ளிரவில் உறங்கிக் கொண்டிருந்த மக்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதும், தாக்குதலால் காயமடைந்த மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மெரினா கடற்கரை கண்ணகி சிலை பின்புறம் மாட்டான் குப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மற்றும் அவரின் உறவினர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களை எழுப்பி திட்டியதாக தெரிகிறது. இதில் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் வாக்குவாதம் ஏற்பட்டது. … Read more

திமுகவின் கூடாரத்தையே அமைச்சர் செந்தில் பாலாஜி காலி செய்து விடுவார் – எம்ஏல்ஏ.,வின் பரபரப்பு பேச்சு!

திமுக கூடாரத்தையே அமைச்சர் செந்தில் பாலாஜி மொத்தமாக காலி செய்து விடுவார் என்று, அதிமுக எம்எல்ஏ செந்தில்நாதன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை பணிகள் குறித்து, சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர்  (அதிமுக ) செந்தில்நாதன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய செந்தில் நாதன், “அம்மாவுக்கு செய்த துரோகத்தால் செந்தில் பாலாஜி தற்போது அனுபவித்து {வருமான வரி சோதனையை குறிப்பிட்டு} வருகிறார். இன்னும் ஒரு சில ஆண்டுகளில் … Read more