வாயில் விபத்து : சுற்றி வந்து கைகொடுத்த கிராமத்து மனிதத்தை வாழ்த்தும் நிமிடமிது – இயக்குனர் சீனு ராமசாமி!

ஒடிசா மாநிலம், பாலசோர் பகுதியில், நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது ஷாலிமர் – சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் யஷ்வந்த்பூர் – ஹவுரா அதிவிரைவு ரயில் மோதி, அடுத்தடுத்து பெரும் விபத்து நிகழ்ந்தது.  இந்த கொடூரமான விபத்தில் சிக்கி இதுவரை 261 பலியாகியுள்ளனர். 900 பேர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், விபத்து நடந்த பகுதியை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஒடிசா ரயில் விபத்திற்கு தமிழ் திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி … Read more

விருதுநகர் : வீட்டில் இருந்த சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்த வாலிபர் கைது.!!

வீட்டில் இருந்த சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்த வாலிபர் கைது.!! விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியைச் சேர்ந்த தம்பதியினருக்கு பத்து வயதில் மகளும், எட்டு வயதில் ஒரு மகனும் உள்ளனர். இதில் தம்பதியினர் இருவரும் தினமும் கூலி வேலைக்கு சென்றுவிடுவதால் குழந்தையை அவர்களது பாட்டி கவனித்து வந்தார். ஆனால், இவர்களது பாட்டியும் வெளியூருக்குச் சென்று இருந்ததால் வீட்டில் குழந்தைகள் மட்டும் தனியாக இருந்தனர். இதை நோட்டமிட்ட அவர்களது பக்கத்து வீட்டைச் சேர்ந்த சிவ ஜெயராம் … Read more

சென்னையில் கைது செய்யப்பட்ட 5 இஸ்லாமியர்கள்! ஆயுத பயிற்சி செய்தது அம்பலம்!

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு நிதியுதவி மற்றும் ஆட்களை அனுப்பியதாக, கேரளா, கர்நாடகா, தமிழகம், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தினர். நம் தமிழகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் உட்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கைதாகினர்.  இதன் தொடர்ச்சியாக, பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மற்றும் அதன் … Read more

உடுமலையில் பரபரப்பு! திமுகவினரை கொந்தளிக்க வைத்த சம்பவம்! 

மறைந்த திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் தமிழகம் முதல்வருமான கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டம், உடுமலை நகர திமுக சார்பில் கொடியேற்று விழா நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கல்வெட்டுடன் கூடிய பீடம் அமைப்பதற்கு அமைத்து, அதில் கொடிக்கம்பம் நிறுவும் பணியை திமுகவினர் தொடங்கியுள்ளனர். இதில், காந்தி சவுக் பகுதியில் திமுக கொடி கம்பம் அமைப்பதற்காக கொடிக்கம்ப பீடம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், சம்பவம் நடந்த … Read more

#மதுரை || தலித் மக்கள் மீது சாதி வெறியர்கள் தாக்குதல்.. திருமாவளவன் கடும் கண்டனம்..!!

நேற்று இரவு மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூரில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்த ஒரு கும்பல் வீடுகள் மற்றும் வாகனத்தை சேதப்படுத்தியது. மேலும் நான்கு பேரை வெட்டி படுகாயம் செய்ததோடு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெயர் பலகையை சேதப்படுத்தியுள்ளனர். இதனை கண்டித்து தலித் மக்கள் ஒத்தக்கடை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தியது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் … Read more

அரசு பள்ளி மாணவர்களிடம் லஞ்சம் வாங்கும் ஆசிரியர்! புடிச்சு உள்ள போடுங்க அவர்களை – பாஜக தரப்பில் கடும் கண்டனம்!

திருச்சி : அரசு மேல்நிலைப் பள்ளியில் மதிப்பெண் சான்றிதழ் அளிப்பதற்கு பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்களிடம் தலைமை ஆசிரியர் 500 லஞ்சம் கேட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி இன்று விடுத்துள்ள அறிக்கையில், “திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள கோவில்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்ற நான்கு மாணவர்களிடம் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாற்று சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் அளிப்பதற்கு ரூபாய் 500 அல்லது … Read more

ராமநாதபுரத்தில் பதற்றம்.. நீதிமன்றத்தில் எதிரிக்கு சரமாரி வெட்டு.. தப்பி ஓடியவரை சுட்டு பிடித்த போலீசார்..!!

ராமநாதபுரம் மாவட்டம் சிவஞானபுரம் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் என்பவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், சில நாட்களுக்கு முன் ராமநாதபுரம் ஆர்.எஸ்.மடை பகுதியை சேர்ந்த சந்துரு என்பவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சந்துருவின் உறவினரான ஆர்.எஸ்.மடையை சேர்ந்த கொக்கி குமார் என்பவர் பழிவாங்குவதற்காக அசோக்குமாரை தேடிய வந்துள்ளார். இந்த நிலையில் சந்துரு தாக்கப்பட்டது தொடர்பான வழக்கில் ராமநாதபுரம் குற்றவியல் நீதிமன்றம் எண் 2-ல் விசாரணைக்காக அசோக்குமார் இன்று காலை வந்துள்ளார். நீதிமன்ற காத்திருப்போர் … Read more

மூன்று ரயில்களும் ஒரே இடத்தில் விபத்துக்குள்ளானது எப்படி? முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்!

மூன்று ரயில்களும் ஒரே இடத்தில் விபத்துக்குள்ளானது எப்படி என்பது குறித்து, முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று, மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், “ஒடிசா மாநிலம், பாலசோர் அருகில் மூன்று ரயில்கள் மோதியதில் ரயிலில் பயணித்தவர்கள் பல நூறு பேர் மரணமடைந்துள்ள செய்தி நெஞ்சை உலுக்குவதாக உள்ளது.  படுகாயமடைந்த ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிருக்குப் போராடி வருகின்றனர். இந்த கோரச்சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. உயிரிழந்தவர்களின் … Read more

மாணவர்களிடம் இதை செய்ய கட்டாயம் கூடாது.. ஆசிரியர்களுக்கு அமைச்சர் விடுத்த எச்சரிக்கை..!!

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 7ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதன்படி நோட்டு புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி, பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது  “வரும் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு பள்ளி மற்றும் வகுப்பறைகளை சுத்தப்படுத்துதல், வளாகத்தில் புதர்களை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. அரசுப் பள்ளிகளில் தலைமை … Read more

திருவாரூரில் தனியார் பேருந்துகள் மோதி 5 பேர் படுகாயம்.!!

திருவாரூரில் தனியார் பேருந்துகள் மோதி 5 பேர் படுகாயம்.!! நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தேவூர் பகுதியில் இருந்து திருவாரூர் நோக்கி தனியார் பேருந்து ஒன்று பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. இதேபோல் தனியார் மினி பேருந்து ஒன்றும் திருவாரூரை நோக்கி பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. இந்த இரண்டு பேருந்துகளும் நாகை-தஞ்சை நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தன. இதில், தனியார் பேருந்து புதுகாலனி பகுதியில் வந்து கொண்டிருந்த போது, அந்த பகுதியில் உள்ள பயணிகளை ஏற்றுவதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்றது. அந்த … Read more