தனியார் பள்ளி ஆசிரியை பலாத்காரம்.! தொழில் அதிபர் மீது வழக்குப்பதிவு

கோவையில் தனியார் பள்ளி ஆசிரியையை பலாத்காரம் செய்த தொழிலதிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவையை சேர்ந்தவர் 37 வயது பெண். இவர் கோவையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஆசிரியர் ஒருவர் மூலம் வடவள்ளி பகுதியை சேர்ந்த தொழிலதிபர் சந்தோஷ் குமார் (42) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இவர்கள் இரண்டு பேரும் நண்பர்களாக பேசி பழகி வந்துள்ளனர். இதையடுத்து சந்தோஷ் குமார், தனக்கு திருமணம் … Read more

சென்னையில் இன்று மலர் கண்காட்சி தொடக்கம்.. எங்கு தெரியுமா.?!

தமிழகத்தில் கோடை விடுமுறை நாட்களில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற பகுதிகளில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது சென்னை செம்மொழி பூங்காவில் இன்று (ஜூன் 3ஆம் தேதி) முதல் 5ம் தேதி வரை 3 நாட்களுக்கு மலர்கண்காட்சி நடத்தப்படும் என்று தோட்டக்கலைத் துறை அறிவித்துள்ளது. அதன்படி பெங்களூர், உதகை மற்றும் ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட மலர் வகைகளை கொண்டு வந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் … Read more

தமிழகத்தில் கொளுத்திய வெயில்.. 15 இடங்களில் சதமடித்த வெயில்.!

தமிழகத்தில் தற்போது கத்தரி எனும் அக்னி நட்சத்திரம் வெயில் காலம் முடிந்தாலும் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அந்த வகையில் இன்று நேற்றைய விட வெப்பம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் சென்னை வானிலை மைய ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இயல்பை வெயில் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழகத்தில் இன்று 15 இடங்களில் வெயில் 100 டிகிரி … Read more

போலீசார் முன்பு சாராமரியாகத் தாக்கிக் கொண்ட கும்பல் – காரணம் என்ன?

போலீசார் முன்பு சாராமரியாகத் தாக்கிக் கொண்ட கும்பல் – காரணம் என்ன? தமிழக- கேரளா எல்லைப் பகுதியில் உள்ள கோட்டைவாசல் கருப்பசாமி கோயிலுக்கு தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த சில நபர்கள் சாமி கும்பிடுவதற்காக வந்துள்ளனர். அதேபோல், தமிழக – கேரள எல்லை பகுதியை ஒட்டி அமைந்துள்ள தெற்கு மேடு என்கிற கிராமப் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினரும் சாமி கும்பிடுவதற்காக வந்துள்ளனர். அப்போது, தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த சில வாலிபர்கள், அவர்களது காரில் சத்தமாக பாடல் சத்தத்துடன் … Read more

கன்னியாகுமரியில் பரபரப்பு : வீடு புகுந்து எஸ்.பி அலுவலக ஊழியரைத் தாக்கிய கும்பல் – 3 பேர் கைது.!!

கன்னியாகுமரியில் பரபரப்பு : வீடு புகுந்து எஸ்.பி அலுவலக ஊழியரைத் தாக்கிய கும்பல் – 3 பேர் கைது.!! கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள, சுவாமிநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த். நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வரும் இவர் வெளிநாட்டுக்கு மண்ணுளிப் பாம்பை கடத்திய வழக்கில் சிக்கி பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் பணிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்த அரவிந்தை ஐந்து பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து … Read more

கோரமண்டல் ரெயில் விபத்து – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல்.!!

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா ரயில் நிலையம் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயிலுடன் மோதி நின்றது இன்று மாலை விபத்துக்குள்ளானது. இதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் 8 பெட்டிகள் வரை தடம் புரண்டது. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஹவுராவில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த போது இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த ரயில் விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 179 பேர் படுகாயங்களுடன் அருகில் உள்ள … Read more

அபிநயாவை திட்டமிட்டு கொலை செய்த நாடக காதலன்! நெஞ்சை பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சி வாக்குமூலம்! 

பெரம்பலூர் : அல்லிநகரம் பகுதியை சேர்ந்த தந்தையை இழந்த அபிநயா (23 வயது) என்ற இளம் பெண், அரியலூர் நகரில் உள்ள ஒரு மளிகை கடையில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 30 ஆம் தேதி, தனக்கு உடல்நிலை சரியில்லை, வீட்டுக்கு செல்கிறேன் என்று மளிகை கடையின் ஓனரிடம் தெரிவித்துவிட்டு புறப்பட்ட அபிநயா வீட்டுக்கு செல்லவில்லை. மறுநாள் காலை உடையார்பாளையம் நெடுஞ்சாலை ஓரமாக தலை மற்றும் உடலின் பல்வேறு இடங்களில் காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார் அபிநயா.  அவரின் … Read more

சென்னை பக்கிங்காம் ஆக்கிரமிப்பு | கணக்கெடுப்பு நடத்த வந்த அதிகாரிகளை சுத்துப்போட்ட மக்கள்! 

சென்னை பக்கிங்காம் கால்வாய் பகுதிகளை சீரமைக்கும் பணியில் தமிழக அரசு மேற்கொண்டு இருக்கும் நிலையில், கால்வாய் கரை ஓரம் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சேப்பாக்கம் லாக் நகர் முதல் ராதாகிருஷ்ணன் சாலை வரை உள்ள பக்கிங்காம் கால்வாய் கரை ஓரம் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், இன்று பகுதியில் வசிக்கும் மக்களிடம் கை ரேகை, கண் விழி உள்ளிட்ட தகவல்களை சேகரிக்க அதிகாரிகள் வருகை தந்தனர். அப்போது தங்களுக்கு … Read more

பணம் தந்தால் மட்டுமே சான்றிதழ்.. வசூல் ராஜாவாக மாறிய தலைமை ஆசிரியர்..!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கோவில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்று வழங்குவதற்கு மாணவர்களிடம் பள்ளி நிர்வாகம் கட்டாய கட்டண வசூலில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து வெளியான வீடியோவில் அந்த பள்ளியில் பயின்ற மாணவர்கள் 4 பேர் ஐடிஐ சேர மாற்றுச் சான்றிதழ் மற்றும் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வாங்க பள்ளி சென்றுள்ளனர். அவர்கள் பயின்றது கொரோனா காலம் என்பதால் அனைவரும் தேர்ச்சி … Read more

செல்போனால் நேர்ந்த விபரீதம்.! 15 வயது சிறுவன் தற்கொலை.! கடலூரில் பரிதாபம்..!

கடலூர் மாவட்டத்தில் செல்போனில் விளையாடியதை தந்தை கண்டித்ததால் சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை அருகே விசலூர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மகன் தமிழேந்தி(15). இவர் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். இதைப்பார்த்த தந்தை பாஸ்கரன் தமிழேந்தியை கண்டித்துள்ளார். இதையடுத்து வேலை காரணமாக பாஸ்கரன் மங்கலம்பேட்டை பகுதிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் வேலை முடிந்து பாஸ்கரன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, தமிழேந்தி தூக்கில் தொங்கியுள்ளார். இதைப்பார்த்து … Read more