பல்லாவரத்தில் 7 டாஸ்மாக் பார்களுக்கு சீல்..!! வருவாய்த் துறையினர் அதிரடி..!!

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயத்தால் உயர்ந்தவர்களின் 23 பேர் உயிரிழந்த சம்பவம் அடங்குவதற்குள் தஞ்சை மாவட்டத்தில் அரசு அனுமதி பெற்ற டாஸ்மாக் பாரில் கள்ளச் சந்தையில் விற்கப்பட்ட மதுபானத்தை அருந்திய இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசு அனுமதி வழங்கியுள்ள டாஸ்மாக் பார்களில் போலி மதுபானங்கள் விற்கப்படுவதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில் இருவர் உயிரிழந்த சம்பவம் அதனை உறுதி செய்யும் வகையில் அமைந்தது. அரசு டாஸ்மாக் பாரில் இருவர் … Read more

குட் நியூஸ்: தமிழகம் முழுவதும் 4ஆம் தேதி முதல் "மாற்றுத்திறனாளிகளுக்கு சுயம்வரம்".!

தமிழகம் முழுவதும் ஜூன் நான்காம் தேதி முதல் 11 இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சுயம்வரம் நிகழச்சி நடைபெறவுள்ளது. இது குறித்து தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் கூட்டமைப்பின் அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாற்றுத்திறனாளிகள், ஏழைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் கூட்டமைப்பின் அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ கீதாபவன் அறக்கட்டளை இணைந்து கடந்த 11 ஆண்டுகளாக திருமணம் நடத்தி வருகிறது.  இந்நிலையில், 12-வது ஆண்டாக தமிழகம் முழுவதும் 11 இடங்களில் சுயம்வர நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. இதில் சுயம்வரமானது திருவாரூர் (ஜூன் 4), … Read more

தேனியில் பயங்கரம்.! கொடூரமான முறையில் பெண் படுகொலை… போலீசார் தீவிர விசாரணை…!

தேனி மாவட்டத்தில் கொடூரமான முறையில் பெண் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே உள்ள பொன்னம்மாள்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவர் 14 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி சமுத்திரக்கனி(48). இவர்களுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் சமுத்திரக்கனி, இரண்டாவது மகளை திருமணம் செய்து கொடுத்த காந்திபுரம் பகுதியில் வீடு எடுத்து தங்கி, பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில், இன்று … Read more

கோடை விடுமுறை நிறைவு..  சொந்த ஊர் திரும்புபவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தமிழகத்தில் மே மாத கோடை விடுமுறையை கொண்டாட பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இதற்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது மே மாத கோடை விடுமுறை முடிவடைந்த நிலையில் வரும் ஜூன் 7-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. அதன் காரணமாக பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனையடுத்து தமிழக அரசு சார்பில் … Read more

(02.06.2023)கோயம்பேடு மார்க்கெட்… அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 02/06/2023 இன்றைய அனைத்து காய் கறிகளின் விலை நிலவரம் கிலோ 1 க்கு விலைபட்டியல். வெங்காயம் 20/18/16 தக்காளி 30/27/25 உருளை 30/15/14 சின்ன வெங்காயம் 80/70/60 ஊட்டி கேரட் 50/45/40 பெங்களூர் கேரட் 30 பீன்ஸ் 90/80 பீட்ரூட். ஊட்டி 37/35 கர்நாடக பீட்ரூட் 22/20 சவ் சவ் 15/13 முள்ளங்கி 25/20 முட்டை கோஸ் 15/13 வெண்டைக்காய் 25/20 உஜாலா கத்திரிக்காய் 65/60 வரி கத்திரி 60/50 காராமணி 45/40 … Read more

அதிமுகவை தொடர்ந்து களத்தில் இறங்கிய அமமுக! வெளியான அறிவிப்பு! 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமை kaழகம் இன்று விடுத்துள்ள அறிவிப்பில், “மக்கள் விரோத தி.மு.க அரசைக் கண்டித்து, தஞ்சை தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் ஒரத்தநாட்டில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தில், கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் கண்டன உரையாற்றுகிறார். தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், * பல்வேறு துறைகளில் நடைபெறும் ஊழல் முறைகேடு,* கள்ளச்சாராயம், போதைப்பொருள்கள் மற்றும் போலி மதுபானங்களின் தாராளப்புழக்கம்,* கேள்விக்குறியாகும் விவசாயிகளின் வாழ்வாதாரம்,* கடமையைச் செய்யும் … Read more

கோவை | ராட்சத விளம்பரப் பலகை சரிந்து விழுந்து கோர விபத்து! சம்பவ இடத்திலேயே 3 பேர் பலி!

கோவை : விளம்பரப் பலகை கட்டுமான பணியின்போது, கட்டுமானம் சரிந்து விழுந்து 3 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று மாலை கருமத்தம்பட்டியில் பலந்த காற்று உடன் மழை பெய்தது. அப்போது அந்த பகுதியில் விளம்பரப் பலகை சரிந்து விழுந்து 3 பேர் பலியாகியுள்ளனர். இத சம்பவம் குறித்து தகவலறிந்து வந்தா போலீசார், வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே வெளியான தகவலின்படி, விபத்தில் பலியான மூவரும் சேலத்தைச் சேர்ந்த … Read more

"மாமூல் தரலான சீல் வைப்பீர்களா..?" அரசு அதிகாரிகளிடம் மல்லுக்கட்டிய திமுக பிரமுகர்.!!

மயிலாடுதுறையில் பிரபல டீக்கடையில் நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்ட போது திமுக பிரமுகர் அருகில் உள்ள கடைகளில் விதிகள் பின்பற்றப்படாத நிலையில் இங்கு மட்டும் ஏன் சோதனை செய்தீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடைவீதி பகுதியில் அமைந்துள்ள பிரபல குரு டீக்கடையில் நகராட்சி சுகாதாரத்துறை அலுவலர் சீனிவாசன் தலைமையிலான அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பஜ்ஜி, போண்டா உள்ளிட்ட உணவு பண்டங்களை மீண்டும் பயன்படுத்தப்பட்ட … Read more

கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி! வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட காவல்துறை!

தமிழகத்தில் கோயில் திருவிழாக்களின்போது ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு வழிகாட்டு நெறிமுறைகளை காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் சில பின்வருமாறு; * ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டால், 7 நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட போலீசார் விழாக்குழுவுக்கு பதிலளிக்க வேண்டும். * கலாச்சார நிகழ்வுகள் மட்டுமே நடத்தப்பட வேண்டும். * ஆபாச காட்சிகள், நடனம் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். * இரவு 10 மணிக்கு மேல் நீடிக்கக்கூடாது . * … Read more

ஐடி அதிகாரியை தாக்கிய திமுகவினருக்கு நிபந்தனை ஜாமின்.. கரூர் நீதிமன்றம் உத்தரவு..!!

கரூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 26ம் தேதி முதல் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் கடந்த மே 26 ஆம் தேதி கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி அசோக் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்ய முற்பட்டபோது திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் வந்த கார் சேதப்படுத்தி அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து அங்கு நிலவிய அசாதாரண … Read more