MRP விலையில் மட்டுமே சரக்கு.. அதுவும் அரசு டாஸ்மாக் கடையில்.. எங்கு தெரியுமா.?

தமிழகத்தில் அரசு அனுமதி பெற்று 5000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. சமீபகாலமாக டாஸ்மாக் கடைகளில் அரசு அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச விலையை விட கூடுதலாக 10 ரூபாய் கட்டாயம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய பொழுது அவ்வாறு செயல்படும் டாஸ்மாக் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுபோன்ற புகாரில் தற்போது வரை 1500க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை … Read more

சென்னையில் முக்கிய பகுதிகளில் 7 மாதங்கள்  மின்சார ரயில்கள் ரத்து.. அதிர்ச்சியில் பயணிகள்.!

சென்னையில் பொதுமக்களின் முக்கிய போக்குவரத்து சேவையான மின்சார ரயில் போக்குவரத்து சென்னையின் குறிப்பிட்ட வழித்தடங்களில் அடுத்த ஏழு மாதங்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை கடற்கரை – வேளச்சேரி மின்சார ரயில் சேவை முக்கியமான பல பகுதிகள் வழியாக பயணிக்கிறது. இந்த வழித்தடத்தில் நான்காவது ரயில் பாதை வேலை நடைபெற உள்ளதால் வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி வரை 7 மாத காலத்திற்கு சென்னை … Read more

மூன்றாவது நாளாக தொடரும் அவலம்.. அலட்சியம் காட்டும் ஆவினுக்கு அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்..!!

சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு இடங்களில் ஆவின் பால் தட்டுப்பாடு நிலவுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். குறிப்பாக கீழ்ப்பாக்கம், அமைந்தகரை, அண்ணா நகர், மதுரவாயல், திருவேற்காடு, கொரட்டூர் உள்ளிட்ட பகுதியில் ஆவின் பால் கிடைப்பதில்லை என புகார் எழுந்துள்ளது. தாமதமாக கிடைக்கும் ஆவின் பாலும், சில சமயங்களில் கெட்டுப்போவதாக கூறும் இல்லத்தரசிகள், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் … Read more

காஞ்சிபுரம் அருகே பரிதாபம்.! மகளை தீவைத்து எரித்துவிட்டு தாய் தற்கொலை.!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மனவளர்ச்சி குன்றிய மகளை தீ வைத்து எரித்துவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த கொளப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி சுலோச்சனா (48). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதில் மகள் மீனாட்சி (18) மனவளர்ச்சி குன்றியவர். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் கணவர் நடராஜன், மகன் தினேஷ்குமார் ஆகிய இரண்டு பேரும் வேலைக்கு சென்றுள்ளனர். … Read more

வெளிநாட்டில் மருத்துவ சீட் வாங்கித் தருவதாக பணமோசடி.!!

வெளிநாட்டில் மருத்துவ சீட் வாங்கித் தருவதாக பணமோசடி.!! சென்னையில் உள்ள பழைய வண்ணாரபேட்டை பகுதியை சேர்ந்தவர் தியா சுபபிரியா மகள் ரிதமீனா. இவர் வெளிநாட்டில் மருத்துவ படிக்க ஆசைப்பட்டுள்ளார். இவர்களிடம் வெளிநாட்டில் மருத்துவ படிப்பு இருப்பதாக கூறி பிரவீன் மற்றும் சதீஷ் ஜனார்தனன் உள்ளிட்டோர் அறிமுகமாகியுள்ளனர்.  இவர்கள் மூலமாக மேலும் இரண்டு பேர் ரிதமீனாவுக்கு அறிமுகமாகியுள்ளனர். அவர்கள் இருவரும் வெளிநாட்டில் இருப்பதாக ஒரு பல்கலைக்கழகத்தின் பெயரைக்கூறி அங்கு மருத்துவ சீட் பெறுவதற்காக ரூ.21 லட்சத்தை பெற்றுக் கொண்டுள்ளனர். … Read more

நில பிரச்சனையை தீர்ப்பதாக பண மோசடி செய்து கொலை மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி உட்பட 2 பேர் கைது.!

நில பிரச்சனையை தீர்ப்பதாக பண மோசடி செய்து கொலை மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி உட்பட 2 பேர் கைது.! சென்னையில் உள்ள வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணி. இவர் கடந்த 10-ந் தேதி சென்னை கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று  அளித்துள்ளார். அந்த புகாரில், கொரட்டூரில் தனக்கு 78 சென்ட்  பூர்வீக சொத்து உள்ளது. இதனை விற்பதற்காக நண்பர் சதீஷ் மற்றும் தரகர் பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோரை அணுகினேன்.  ஆனால், இந்த நிலத்தை விற்பது தொடர்பாக … Read more

கன்னியாகுமரி : விவேகானந்தர் சிலைக்கு செல்லும் படகு போக்குவரத்து நேரம் மாற்றம்.!

கன்னியாகுமரி : விவேகானந்தர் சிலைக்கு செல்லும் படகு போக்குவரத்து நேரம் மாற்றம்.! சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக கன்னியாகுமரி உள்ளது. இங்கு விடுமுறை நாட்களில் ஏராளமான பயணிகள் வந்து கடலின் அழகை பார்த்துச் செல்கின்றனர். அதுமட்டுமல்லாமல், கடலின் நடுவில் பாறையில் உள்ள விவேகானந்தர் நினைவு இல்லம் மற்றும் திருவள்ளுவர் சிலை படகின் மூலம் சென்று பார்த்து ரசிக்கின்றனர்.  அதற்காக தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் குகன், பொதிகை, விவேகானந்தர் என்று மொத்தம் மூன்று படகுகள் … Read more

திட்டமிட்டதை விட கூடுதலாக ரூ.200 கோடிக்கு ஒப்பந்தம்.. சென்னையில் முதல்வர் மு.க ஸ்டாலின் தகவல்..!!

அரசு முறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கு சென்று இருந்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “சிங்கப்பூர், ஜப்பான் பயணம் வெற்றிகரமாக முடிந்தது. தமிழ்நாட்டிற்கும் ஜப்பானுக்கும் பொருளாதார இறுதியாகவும் தொழில் ரீதியாகவும் நல்லுறவு பெறக்கூடிய வகையில் பயணம் அமைந்தது. குறிப்பாக தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்ட மெட்ரோ ரயில் திட்டம், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் போன்ற திட்டங்களில் ஜப்பானின் பங்கு இடம் பெற்றுள்ளது. உற்பத்தி துறையில் உலகிற்கே … Read more

#BREAKING || சென்னை வந்தடைந்தார் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்.!!

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க 9 நாள் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்று இருந்தார். முதற்கட்டமாக கடத மே 23ஆம் தேதி சிங்கப்பூர் சென்ற அவர் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றார். அதன் பின்னர் அங்கிருந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்று தமிழ்நாட்டுக்கு தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்தார். இதற்காக தனி விமான மூலம் சென்னையில் இருந்து சிங்கப்பூர் சென்ற தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுடன் தொழில் துறை … Read more

சென்னை | மது போதையில் வாகனம் ஓட்டி சிக்கிய வழக்குகளில் ரூ.13 கோடி அபராதம் வசூல்!

“குடி போதையில் வாகனம் ஓட்டி நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சுமார் ரூ.13 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக, சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்தை குறைக்கும் வண்ணம் மோட்டர் வாகனச் சட்டத்தைதிறம்பட அமலாக்கம் செய்து சாலை போக்குவரத்து விபத்துகளைக் குறைத்து வருகிறது.  சாலை விபத்துக்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று குடிபோதையில் வாகனம் ஓட்டுவதாகும். எனவே குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு சட்டத்தில் கடுமையான தடுப்பு நடவடிக்கையாக தண்டனை வழங்கப்படுகிறது.  அபராதத் தொகை ரூ.10,000/ அதிகமாக … Read more