பேச்சுவார்த்தையில் இறங்கிவந்த அரசு! மீண்டும் பேச்சுவார்த்தை – சிஐடியு மாநில தலைவர் பேட்டி!

சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போக்குவரத்து ஊழியர்கள் திடீர் போராட்டம் நடத்தினர். சில மணி நேரம் நடந்த போராட்டத்திற்கே சென்னை மாநகரம் ஸ்தம்பித்து போனது.  இந்நிலையில், அரசு போக்குவரத்து காலத்தில் ஒப்பந்த அடிப்படையிலான பணி நியமன விவகாரம் தொடர்பாக, போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அரசு தரப்பில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் தொழிலாளர் நல சிறப்பு ஆணையர் வேல்முருகன் தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் ஒப்பந்த முறையை நிறுத்தி வைப்பதாக அரசு … Read more

கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த கணவர்…. அடித்துக்கொன்று விட்டு காவல் நிலையத்தில் சரணடைந்த மனைவி…! ஈரோட்டில் பரபரப்பு…!

ஈரோட்டில் கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த கணவரை கட்டையால் அடித்துக் கொன்றுவிட்டு மனைவி காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் கனிராவுத்தர்குளம் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி(52). இவரது மனைவி பத்மா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் தறி பட்டறையில் வேலை பார்த்து வந்த சுப்ரமணிக்கு, வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த பத்மா கள்ளத்தொடர்பை கைவிடும்படி சுப்பிரமணியை பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் அதை கண்டுகொள்ளாமல் சுப்ரமணி … Read more

வரும் ஜூன் 13ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு வரும் ஜூன் 13ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு பண்டிகைகள், கோவில் திருவிழாக்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு தினங்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வரும் ஜூன் 13ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு … Read more

பதவியேற்றவுடன் வேலையை காட்டிய டிகே சிவகுமார்! காட்டமாக கண்டனம் தெரிவித்த துரைமுருகன்! 

கர்நாடக மாநிலத்தின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள டிகே சிவகுமாருக்கு நீர்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. டிகே சிவக்குமார் அமைச்சராக பொறுப்பேற்று முதல்முறையாக, பெங்களூருவில் நீர்வளத்துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிகே சிவக்குமார், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் காங்கிரஸ் கட்சி நிறைவேற்றும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள முக்கிய திட்டமான, மேகதாது அணை மற்றும் மகதாயி அணை திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக விரைவில் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்திப்பேன். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் … Read more

#மதுரை | கடைசி நேரத்தில் இப்படி ஆகிவிட்டதே! கண்ணீருடன் பேட்டி! எடப்பாடி பழனிசாமி விடுத்த உருக்கமான அறிக்கை!

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தொகுதியில் கோடை மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று, அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தொகுதியில் ஒவ்வொரு ஆண்டும் கோடை நடவு மேற்கொள்ளப்படும். அதன்படி இந்த ஆண்டும் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் கோடை நடவாக நெற்பயிர்கள் பயிரிடப்பட்டிருந்தன. நெற்கதிர்கள் நன்கு விளைந்து அறுவடைக்குத் … Read more

மதுரை விவசாய குடும்பத்தில் பிறந்த "செல்வ பிரபு" இந்தியாவிற்காக நிகழ்த்திய சாதனை – டிடிவி தினகரன் வாழ்த்து!

மதுரை மாவட்டத்தை சேர்ந்த செல்வ பிரபு கிரீஸ் நாட்டின் வெனிசெலியா நகரில் நடைபெற்ற கிராண்ட் பிக்ஸ் சர்வதேச போட்டியில்,‌ மும்முறை நீளம் தாண்டுதலில்  ஆடவர் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டின் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த செல்வ பிரபு இந்தியாவிற்காக சாதனை படைத்திருப்பதை பெருமிதத்துடன் பாராட்டுகின்றேன்.  இந்த சாதனையின் வாயிலாக தாய்லாந்தில் ஜூலை 12 ஆம் … Read more

சென்னை மக்களுக்கு குட் நியூஸ்.. செம்மொழிப் பூங்காவில் மலர் கண்காட்சி.. எப்போது தெரியுமா.?

தமிழகத்தில் கோடை விடுமுறை நாட்களில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற பகுதிகளில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது சென்னை செம்மொழி பூங்காவில் வரும் ஜூன் 3ஆம் தேதி முதல் 5ம் தேதி வரை என 3 நாட்களுக்கு மலர்கண்காட்சி நடத்தப்படும் என்று தோட்டக்கலைத் துறை அறிவித்துள்ளது. அதன்படி பெங்களூர், உதகை மற்றும் ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட மலர் வகைகளை கொண்டு வந்து கண்காட்சி நடத்த … Read more

தர்மபுரியில் மாயமான 7000 நெல் மூட்டைகள் – உரிய நடவடிக்கை எடுக்க டிடிவி தினகரன் வலியுறுத்தல்.!

தர்மபுரியில் மாயமான ஏழாயிரம் நெல் மூட்டைகள் – உரிய நடவடிக்கை எடுக்க டிடிவி தினகரன் வலியுறுத்தல்.! தருமபுரி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் சேமித்து வைக்கப்பட்ட ஏழாயிரம் நெல்மூட்டைகள் மாயமானதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது. அதன் அடிப்படையில் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் சோதனை செய்த விஜிலென்ஸ் அதிகாரிகள் நெல்மூட்டைகள் மாயமானதை உறுதி செய்துள்ளதாக வரும் தகவல்கள்  அதிர்ச்சியளிக்கிறது.  இந்த தகவலை மறுக்கும் நுகர்பொருள் வாணிப கழக … Read more

நடப்பது எங்க திமுக ஆட்சி! அப்படித்தான் மணல் அள்ளுவோம், உன்னால் ஒரு ஆணியும் புடுங்க முடியாது! சமூக ஆர்வலரை மிரட்டிய திமுக பிரமுகர்!

அனுமதிக்கப்பட்ட அளவை விட மணல் எடுப்பதை தட்டிக்கேட்ட சமூக ஆர்வலரை, ‘நடப்பது ஆட்சி எங்க ஆட்சி, உன்னால் ஒரு ஆணியும் புடுங்க முடியாது’ என்று திமுக பிரமுகர் மிரட்டும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. நாகர்கோவில் அருகே பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த சுப்பையா குளம் தூர்வாரப்பட்டு வருகிறது. இந்த பணியில் ஜேசிபி எந்திரம் மூலம் அதிக அளவில் மணல் எடுக்கப்பட்டு வேறு பகுதிகளுக்கு கடத்தப்படுவதாக, அதே பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஷாஜி … Read more

#தஞ்சை | மணல் கடத்தலை தடுக்க முயன்ற போலீசார் மீது, வாகனத்தை ஏற்றி கொலை செய்ய முயற்சி!

தஞ்சை பட்டுக்கோட்டை அருகே காட்டாற்றில் அதிக அளவு மணல் திருட்டு நடப்பதாக பட்டுக்கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து பட்டுக்கோட்டை காவல் நிலைய போலீசார் சரவணன், சதீஷ்குமார் ஆகியோர் தங்களது இருசக்கர வாகனத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அந்நேரம், பட்டுக்கோட்டை கார்காவயல் பகுதியில் மணல் அள்ளிக்கொண்டு மினி சரக்கு வாகனம் ஒன்று வேகமாக வந்துள்ளது. அந்த வாகனத்தை போலீசார் இருவரும் தடுத்து நிறுத்த முயற்சித்தனர். ஆனால்,அந்த வாகனம் நிறுத்தாமல், இரண்டு போலீசார் மீது … Read more