மக்களே உங்கள் பறிபோய்விட்டதா? உடனே 1930 எண்ணுக்கு கால் பண்ணுங்க – டிஜிபி சைலேந்திர பாபு அறிவிப்பு!

சைபர் குற்றங்களிலிருந்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் தங்களது பணத்தை இழந்தால் உடனடியாக 1930 என்கின்ற இலவச எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்றும், தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி சைலேந்திர பாபு தெரிவிக்கையில், “சைபர் கிரைம் எதிர்கால குற்றங்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாம் இதுவரை சந்திக்காத குற்றங்கள் என்பது தான் இதன் அர்த்தம். நாம் பயன்படுத்தக்கூடிய செல்போனை வைத்து நம்முடைய வங்கி … Read more

செங்கோல் பற்றிய முதல்வர் விமர்சனம் – ஆளுநர் தமிழிசை பதிலடி!

செங்கோல் பற்றி விமர்சனம் செய்பவர்கள் அதன் உண்மை தன்மை புரியாதவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்று, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவிக்கையில், “புதிய நாடாளுமன்றத்தில் செங்கல் நிறுவப்பட்டு உள்ளது தமிழகத்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய ஒரு மரியாதை.  அப்படியான இந்த ஒரு நிகழ்வை தமிழகத்தில் இருந்து யாரும் புறக்கணித்திருக்கக் கூடாது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மற்றும் ஒரு சில அரசியல்வாதிகள் அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர். … Read more

நாளை குறிப்பிட்ட மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.!

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு பண்டிகைகள், கோவில் திருவிழாக்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு தினங்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் காரைக்கால் அருகே திருநள்ளாறில் உலக புகழ்பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான புத்தகம் வருகை தந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த சனீஸ்வரர் கோவிலில் … Read more

அராஜக வசூல்.. மிரட்டும் கரூர் குரூப்.. குமுறும் டாஸ்மாக் ஊழியர்கள்..!!

தமிழக முழுவதும் உள்ள 5000கும் மேற்பட்ட அரசு அனுமதி பெற்ற டாஸ்மாக் கடைகளில் கரூர் குரூப் என்ற பெயரில் அராஜக பண வசூல் நடைபெறுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி பெயரை சொல்லி டாஸ்மாக் கடைகளில் தினந்தோறும் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை கட்டாயமாக பணம் வசூல் செய்யப்படுவதாக டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னை மண்டலத்திற்குட்பட்ட டாஸ்மாக் அனைத்து சங்க கூட்டு நடவடிக்கை குழு சென்னை மத்திய … Read more

திடீரென ஸ்தம்பித்த சென்னை.. ஆட்டம் கண்ட தமிழக அரசு..!! முதல்வர் எடுத்த அதிரடி முடிவு..!!

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் தனியார் நிறுவனம் சார்பில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களை நியமிப்பதை கண்டித்து திமுக தொழிற்சங்கமான தொ.மு.ச உட்பட அனைத்து தொழிற்சங்கங்களும் திடீரென வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. சென்னை முழுவதும் உள்ள மாநகர போக்குவரத்து கழக பணிமனைகளில் பணிபுரிவதற்காக தனியார் நிறுவனம் சார்பில் 500 ஓட்டுநர்களை நாளை தனியார் நிறுவனம் மூலம் நியமிக்கப்பட உள்ள நிலையில் எதிர்ப்பு தெரிவித்து திமுகவின் தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கேகே … Read more

ஜூன்-12ல் மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கிறார் முதல்வர் மு.க ஸ்டாலின்.!!

கடந்தாண்டு முதன் முறையாக மே மாதம் 24 ஆம் தேதி மேட்டூர் அணை தண்ணீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதே போன்று இந்த வருடமும் மே மாதம் மேட்டூர் அணை திறக்கப்படும் என டெல்டா விவசாயிகள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் நடப்பாண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்பொழுது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் மழை பெய்ய … Read more

ஓட, ஓட விரட்டி ஆட்டோ ஓட்டுநரை வெட்டிய ரவுடிகள்.! சென்னையில் பரபரப்பு…!

சென்னையில் ஆட்டோ ஓட்டுநரை ஓட, ஓட விரட்டி பட்டா கத்தியால் வெட்டிய ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். சென்னை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் கார்த்திக்(24). இவர் மேற்கு மாம்பலம் பகுதியில் ஆட்டோ ஓட்டிச்சென்றபோது, அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த ரவுடிகளான மகேஷ், கொட்டா கார்த்திக் ஆகியோர் கார்த்திக்கின் ஆட்டோவை வழிமறித்து மது அருந்த பணம் கேட்டுள்ளனர். ஆனால் கார்த்திக் பணம் கொடுக்க மறுத்ததால், ஆத்திரமடைந்த இருவரும் கார்த்திகையை ஓட, ஓட விரட்டி பட்டா … Read more

ஒட்டன்சத்திரம் அருகே பயங்கர விபத்து – 2 பைக்குகள் மோதிக்கொண்டதில் 4 பேர் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே 2 மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். கரூர் மாவட்டம் சீத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர்களான ரத்தினம் (59), சேகர் (35) ஆகிய இரண்டு பேரும் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் சொந்த ஊர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது ஒட்டன்சத்திரம் நோக்கி சுதாகர் (24) மற்றும் துரையன் (21) வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும், இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளும் பயங்கரமாக மோதி … Read more

தேனியில் பரபரப்பு.! மனைவியை தீவைத்து எரித்த கணவர்.! குடும்பம் நடத்த வராததால் ஆத்திரம்..!

தேனி மாவட்டத்தில் மனைவியை கணவர் தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம் நாராயணத்தேவன்பட்டி பகுதியை சேர்ந்தவர் துரைப்பாண்டியன்(58). இவரது மனைவி தேவகனி(43). இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்ததால் தேவகனி கணவருடன் கோபித்துக் கொண்டு உத்தமபாளையத்தில் உள்ள அண்ணன் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதையடுத்து, நேற்று மனைவியை பார்க்க சென்ற துரைப்பாண்டியன் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால் தேவகனி வர மறுத்துள்ளார். … Read more

நாமக்கல் அருகே பரிதாபம்.! மின்சாரம் தாக்கி கணவன்-மனைவி பலி…!

நாமக்கல் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி கணவன்-மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம் பெரிய சோளக்கண்ணிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மனோகரன்(47). இவரது மனைவி செல்வி (42). இவர்களது மகன் யஸ்வந்த்(6). இந்நிலையில் மனோகரன் சேந்தமங்கலம் அருகே சிவபாரதி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் குடும்பத்தினருடன் தங்கி வேலை பார்த்து வந்தார். இதில் கணவன் மனைவி இரண்டு பேரும் நேற்று தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றனர். அப்பொழுது மனோகரன் மோட்டார் ஸ்வீட்ச்சை போட்டபோது … Read more