நடிகர் சூர்யா பட பாணியில் திருட்டு கும்பல் அரங்கேற்றிய சம்பவம்! சிக்கிய கிருஸ்துவ பாதிரி! அதிர்ந்த போன வேலூர்! 

வேலூர் அருகே வருமானவரித்துறை அதிகாரிகள் என்ற பெயரில், கிருஸ்துவ மத போதகரின் வீட்டுக்குள் புகுந்த மோசடி கும்பலை போல போலீசார் தேடி வருகின்றனர். மோசடி கும்பலில் சென்னை சேர்ந்த வாலிபர் ஒருவர் மட்டும் பொதுமக்களிடம் பிடிபட்டார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே கிருஸ்துவ பாதிரியார் லோவா பிரான்சிஸ் என்பவர் வீட்டில், அதிகாலை வருமானவரித்துறை அதிகாரிகள் போல் வேடமிட்டு எட்டு பேர் கொண்ட கும்பல் உள்ளே புகுந்து உள்ளது. அப்போது வீட்டில் … Read more

மேலும் 10 மருத்துவக் கல்லூரிகளுக்கு ஆபத்து.. எச்சரிக்கும் டாக்டர் ராமதாஸ்..!! விழித்துக் கொள்ளுமா தமிழக அரசு..!!

சென்னை ஸ்டான்லி மருத்துவமனை, தர்மபுரி மற்றும் திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பேராசிரியர்களின் பற்றாக்குறை உள்ளிட்ட குறைபாடுகளை சுட்டிக்காட்டி இளநிலை மருத்துவ படிப்பிற்கான அங்கீகாரத்தை தேசிய மருத்துவர் ஆணையத்தின் இளநிலை மருத்துவர் கல்வி வாரியம் நேற்று ரத்து செய்தது. அதேபோன்று புதுச்சேரியில் உள்ள மருத்துவ கல்லூரியின் அங்கீகாரத்தையும் ரத்து செய்தது. இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழகத்தில் மேலும் 10 மருத்துவக் கல்லூரிகளின் ஏற்பளிப்பு ரத்து … Read more

மீண்டும் பரபரப்பு.. வருவாய் அதிகாரி மீது கொலைவெறி தாக்குதல்.. திமுக ஊராட்சி மன்ற தலைவர் தலை மறைவு..!!

திருச்சி  மாவட்டம் துறையூர் தாலுக்கா நரசிங்கபுரம் கிராமத்தில் அரசு அனுமதியின்றி மணல் கடத்தல் நடைபெறுவதாக வருவாய் ஆய்வாளர் பிரபாகரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் வருவாய்த்துறை ஆய்வாளர் பிரபாகரன் தலைமையிலான அதிகாரிகள் மணல் கடத்தலில் ஈடுபடுபவரை பிடிக்க முயன்றனர். அப்போது திமுகவைச் சேர்ந்த நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரன் தலைமையிலான கும்பல் வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை கொலை வெறியுடன் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் தலையில் பலத்த காயம் அடைந்த பிரபாகரன் சிகிச்சைக்காக … Read more

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்கா பூர்வாலா இன்று பதவியேற்பு…!

சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்கா பூர்வாலா இன்று காலை 10 மணியாளவில் பதவியேற்கிறார். கவர்னர் மாளிகையில் நடைபெறும் நிழச்சியில் நீதிபதி எஸ்.வி.கங்கபூர்வாலாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். 1962ஆம் ஆண்டு மே 24ஆம் தேதி மகாராஷ்டிராவில் பிறந்த நீதிபதி எஸ்.வி.கங்கபூர்வாலா, சட்டப்படிப்பை முடித்து 1985-ம் ஆண்டு வக்கீல் பணியை தொடங்கினார். இதையடுத்து 2010ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் 2022 ஆம் ஆண்டு அதே … Read more

பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் எப்போது..? அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு..!!

தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் பயணிக்கும் வகையில் 420 தாழ் தள பேருந்துகள் விரைவில் இயக்கப்படும். 500 மின்சார பேருந்துகள் உட்பட 2271 பேருந்துகள் வாங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மகளிர் இலவச பேருந்து பயணத்திற்கான நிதி நடப்பாண்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வழியில் வந்த திராவிட மாடல் ஆட்சியில் போக்குவரத்து துறை ஒருபோதும் தனியார் மயமாக்கப்படாது. புதிய பேருந்துகளை வாங்க முதலமைச்சர் மு.க … Read more

காஞ்சிபுரத்தில் கோர விபத்து : நேருக்கு நேர் மோதிய ஆம்னி வேன்-பைக் – வாலிபர் பலி.!!

காஞ்சிபுரத்தில் கோர விபத்து : நேருக்கு நேர் மோதிய ஆம்னி வேன்-பைக் – வாலிபர் பலி.!! காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள களக்காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் கண்ணன். கூலித்தொழிலாளியான இவர் நேற்று இருசக்கர வாகனத்தில் காஞ்சிபுரத்திற்குச் சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பி கொண்டிருந்தார்.  அப்போது, உத்திரமேரூரில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி வேகமாக வந்த ஆம்னி வேன் ஒன்று நொடி பொழுதில் கண்ணனின் இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.  இதில் படுகாயமடைந்து கண்ணன் சம்பவ … Read more

கோவை : இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வலைத்தளத்தில் வெளியிட்ட வாலிபர் கைது.!!

கோவை : இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வலைத்தளத்தில் வெளியிட்ட வாலிபர் கைது.!! கோயம்புத்தூர் மாவட்ட சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் துடியலூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரில் கடந்த மாதம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படங்கள் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு தன்னை ஆபாசமாக மார்பிங் செய்து வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல், தனது தந்தையின் ட்விட்டர் பக்கத்திலும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க … Read more

தமிழர்களுக்கு பெருமை சேர்த்த பிரதமர் மோடிக்கு நன்றி..!! – நடிகர் ரஜினிகாந்த் ட்விட்..!!

இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடம் கட்டுவதற்கு கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து டாடா நிறுவனம் புதிய நாடாளுமன்றத்தை சென்ட்ரல் விஸ்டா என்ற திட்டத்தின் கீழ் கட்டியது. இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டிடம் சுமார் 64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. நாடாளுமன்றத்தின் கட்டுமான பணியானது சுமார் 1200 கோடி ரூபாய் செலவில் நிறைவடைந்த நிலையில் நாளை பிரதமர் நரேந்திர … Read more

ஐடி அதிகாரிகளை திமுகவினர் தாக்கிய சம்பவம்!  சி.பி.ஐ. விசாரணை கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மற்றும் திமுக பிரமுகர்கள், ஒப்பந்ததாரர்கள் வீடு, அலுவலகங்களாயின் நேற்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில், செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் சோதனை செய்ய வந்த வருமான வரித்துறை அதிகாரிகளை திமுக-வினர் முற்றுகையிட்டு, அவர்களின் கார் கண்ணாடி உடைத்தனர். மேலும், திமுகவினர் நடத்திய தாக்குதலில் காயமுற்ற 4 வருமான வரித்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  இந்நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் மீது … Read more

"மன்னவன் கோல்நோக்கி வாழுங் குடி" திருக்குறளோடு வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி!

புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரின் வாழ்த்துச் செய்தியில்,  “வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழுங் குடி” (பூமி வானத்தைப் பார்த்து செழிக்கிறது, மனிதகுலம் அரசனின் செங்கோலை (நேர்மையான ஆட்சியை) நோக்கி – திருக்குறள் -542) சுதந்திரத்தின் 75வது ஆண்டை நினைவுகூரும் வகையில் ஜனநாயகத்தின் சின்னமான புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். தமிழர் பெருமை, … Read more