மதுரை | ஒருதரப்பு பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு மனைப்பட்டா ரத்து செய்யப்பட்டது அநீதி – அன்புமணி இராமதாஸ் கண்டனம்!

மதுரையில் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு மனைப்பட்டா ரத்து செய்யப்பட்டது அநீதி என்றும்,  அனைவருக்கும் மீண்டும் வழங்க வேண்டும் என்றும், பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்த அவரில் செய்திக்குறிப்பில், “மதுரை சூர்யா நகரில் 38 பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு மனைகளின் பட்டாவை மதுரை ஆட்சியராக இருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட அனீஷ் சேகர்  அவரது கடைசி பணி நாளில் ரத்து செய்திருக்கிறார். இது உள்நோக்கம் கொண்ட பத்திரிகையாளர்களை பழிவாங்கும் நடவடிக்கை ஆகும். மதுரையில் வீட்டு … Read more

கேலோ இந்தியா போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த மத்திய அரசு அனுமதி.!

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நடப்பாண்டிற்கான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் “நடப்பாண்டிற்கான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்துவதற்கான எனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டதற்காக பிரதமர் மோடிக்கு எனது நன்றிகள். விளையாட்டு வீரர்கள் தங்களது திறமைகளை … Read more

நம் புதிய பாராளுமன்றம், வரலாற்று சாதனை! எதிர்கட்சிகள் புறக்கணிக்க வேண்டாம் – கமல்ஹாசன் கோரிக்கை!

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “நாளை புதிய பாராளுமன்றம் திறப்பு விழா, முழு நாட்டிற்கும் கொண்டாட்டத்தின் தருணம் என்னை மிகவும் பெருமையுடன் நகர்த்துகிறது. இந்த வரலாற்று சாதனைக்காக இந்திய அரசை வாழ்த்துகிறேன். தேச நலன் கருதி, புதிய பாராளுமன்றத்தின் பதவியேற்பு விழாவில் நான் பங்கேற்க உள்ளேன், அதே நேரத்தில் தேசப் பெருமிதத்தின் இந்த தருணம் அரசியல் ரீதியாக பிளவுபட்டுள்ளது.  நான் எனது பிரதமரிடம் ஒரு எளிய கேள்வியைக் கேட்கிறேன், “எங்கள் புதிய … Read more

#BREAKING || தமிழ்நாடு தகவல் ஆணையராக ஷகீல் அக்தர் ஐ.பி.எஸ் நியமனம்..!!

தமிழ்நாடு அரசின் சிபிசிஐடி ஜிபியாக இருந்த ஐபிஎஸ் அதிகாரி ஷகீல் அக்தர் கடந்த மாதம் ஓய்வு பெற்றார். இந்த நிலையில் தமிழ்நாட்டின் தகவல் ஆணையரின் பதவிக்கு பல மாதங்களாக யாரும் நியமிக்கப்படாத நிலையில் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஷகீல் அக்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மே 17ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையர் தேர்வு ஆலோசனைக் கூட்டத்தில் ஷகீல் அக்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக … Read more

தமிழ் தேர்வின் விடைத்தாள்களைத் திருத்தும் உடற்கல்வி பாட ஆசிரியர்களா? இப்படியா தமிழை இழிவுபடுத்துவது? மருத்துவர் இராமதாஸ் கொந்தளிப்பு!

பொறியியல் படிப்புக்கான தமிழ்ப்பாடத் தேர்வு விடைத்தாள்களைத் திருத்த அறிவியல், உடற்கல்வி பாட ஆசிரியர்களா? இப்படியா தமிழை வளர்ப்பது?  பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலம் கடந்த ஏப்ரல் 21-ஆம் நாள் நடத்தப்பட்ட பொறியியல் பட்டப்படிப்புக்கான முதலாம் ஆண்டு தமிழ் மொழிப் பாடத் தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி  நேற்று முன்நாள் மே 25-ஆம் நாள் தொடங்கியுள்ளது.  தமிழர் மரபு என்ற தமிழ்ப் பாட … Read more

தேனி : மாணவிக்கு பாலியல் தொல்லை… தனியார் பள்ளி ஆசிரியர் உட்பட 2 பேர் கைது..!

தேனி மாவட்டத்தில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தனியார் பள்ளி ஆசிரியர் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் வளையப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பகவதிராஜ் (50). இவர் முத்துத்தேவன்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரும் வளையப்பட்டியை சேர்ந்த முனியாண்டி (60) என்பவரும் பதினோரு வயதுடைய பள்ளி மாணவிக்கு தனித்தனியாக பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து மாணவி இதுகுறித்து தாயிடம் கூறியுள்ளார். இந்நிலையில் மாணவியின் தாய் இந்த … Read more

அட.. சென்னையில் உள்ள இந்த அரசு பள்ளியில் அப்படியென்ன ஸ்பெஷல்.?! சீட் வாங்க.. நீண்ட வரிசையில் பெற்றோர்.!

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் தற்போது மாணவர்களின் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகின்ற நிலையில், சென்னை அசோக் நகரில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் சீட் வாங்க கடுமையான போட்டி நிலவுகிறது.  தற்போது அப்பள்ளியில் மாணவர் சேர்க்கை துவங்கி இருக்கின்ற நிலையில், அரசு பள்ளிகளில் மாணவர்களின் பெற்றோர்கள் கூட்டமானது கடுமையான அலை மோதுகிறது.  சென்னை அசோக் நகரிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் தங்கள் மகள்களை சேர்க்க 2 நாட்களாக பெற்றோர்களின் கூட்டமானது அலைமோதி வருகிறது.  … Read more

வாட்டி வதைத்து எடுக்கும் வெயில்.. தமிழகத்தில் இன்று 20 இடங்களில் சதம்.!

தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது.  இந்த நிலையில் தென்னிந்தியா பகுதிகளில் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அந்த வகையில் இன்று மாலை தமிழகத்தில் பரவலாக இடி … Read more

ஹிஜாப்பைக் கழட்ட சொன்ன பாஜக நிர்வாகி கைது.. காவல்துறை அதிரடி..!!

நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றுபவர் இஸ்லாமிய சமூகத்தை சார்ந்த டாக்டர் ஜன்னத் என்பவர் புதன்கிழமை இரவு பணியில் இருந்துள்ளார். அப்போது திருப்பூண்டி பகுதியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் புவனேஸ்வர் ராம் தனது உறவினர் சுப்பிரமணியனை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது நெஞ்சு வலியால் துடித்த சுப்பிரமணியனை சோதித்த ஜன்னத் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக உடனே தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு … Read more

வக்கற்ற தமிழ்நாடு அரசு… பனைத் தொழிலாளர்கள் மீது கள்ளச்சாராய வழக்கு போடுவதா.!! சீமான் ஆவேசம்..!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்த மனை தொழிலாளர்கள் மீது கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்த பனைத் தொழிலாளர்கள் மீது கள்ளச்சாரயம் காய்ச்சுவதாகப் பொய் வழக்குப் புனையப்பட்டு, தமிழ்நாடு அரசினால் கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும். உடனடியாகப் பனைத் தொழிலாளர்களை விடுவிக்குமாறு தமிழ்நாடு அரசினை … Read more