கும்பகோணம் : இந்து மத கோயில் குளத்தில் மீன் பண்ணை நடத்த தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு

கும்பகோணம் : அகஸ்தீஸ்வரர் சுவாமி கோயில் குளத்தில், சட்ட விரோதமாக மீன் பண்ணை நடத்த தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐவர்பாடி கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி குருக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், “200 ஆண்டு பழமையான அகஸ்தீஸ்வரர் சுவாமி கோயிலை தனியார் கோயில் என 2002-ம் ஆண்டில் இந்துசமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது. இதனை மறு ஆய்வு செய்ய இந்துசமய அறநிலையத் துறை ஆணையர் விசாரணை தொடங்கியுள்ள … Read more

மிஸ் ஆன கல்லூரிக் கட்டணம்! தவறவிட்ட தாய்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆட்டோ ஓட்டுநர்!

தமிழகத்தில் ஆட்டோ காரர்கள் என்றாலே தனி மதிப்பு தான். அப்படியான ஒரு நேர்மையான ஓட்டுனர் தேவகோட்டையின் ஹீரோவாகி உள்ளார். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் தனது மகன் கல்லூரி கட்டணம் ரூ.62,000-யை தவறவிட்டு தாய் தவித்த நிலையில், அதை எடுத்துக் கொடுத்த ஆட்டோ ஓட்டுநர் கண்ணனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த வள்ளிமயில் (வயது 40), தனது மகனின் கலோரி கட்டணத்திற்காக ரூ.62,000-யை வங்கியில் செலுத்த இன்று தேவகோட்டையில் உள்ள வங்கிக்கு தனது இருசக்கர வாகனத்தில் … Read more

விழுப்புரம்: அரசூர் அருகே கார் மீது அரசு பேருந்து மோதி விபத்து.. 2 பேர் உயிரிழப்பு.!

விழுப்புரம் மாவட்டம் சித்தானங்கூர் கிராமத்தில் காரின் டயர் வெடித்து எதிரில் வந்த அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சித்தானங்கூர் கிராமத்தில் உள்ள சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கொடைக்கானலுக்கு சென்று விடுமுறையை கழித்து விட்டு நான்கு பேர் சொந்த ஊரான முகையூர் நோக்கி திரும்பி கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் வந்த காரின் முன் பக்க வலது டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் … Read more

பள்ளிகள் திறப்பை தமிழக அரசு தள்ளிவைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது – டாக்டர் இராமதாஸ்!

கோடை வெப்பத்திலிருந்து மாணவர்களைக் காக்க பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டிருப்பது சிறந்த முடிவு என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வரவேற்றுள்ளார். இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பிறகு  வரும் ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கோடை வெப்பத்தின் கடுமை இன்னும் தணியாததை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள்  வரும் ஜூன் 7-ஆம் நாள் … Read more

ஆம், அந்த செங்கோல் நேருவின் கைத்தடிதான்! காங்கிரஸ் தரப்பில் பகீர் அறிக்கை!

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெயராம் ரமேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “வாட்ஸ்அப் பல்கலைக் கழகத்தின் தவறான செய்திகளுடன் புதிய பாராளுமன்றம் புனிதப்படுத்தப்படுவதில் ஆச்சரியம் உண்டா?  பிஜேபி/ஆர்எஸ்எஸ் டிஸ்டோரியர்கள் அதிகபட்ச உரிமைகோரல்கள், குறைந்தபட்ச ஆதாரங்களுடன் மீண்டும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளனர். 1. அப்போதைய மதராஸ் மாகாணத்தில் ஒரு மத ஸ்தாபனத்தால் உருவாக்கப்பட்ட மற்றும் மெட்ராஸ் நகரில் வடிவமைக்கப்பட்ட ஒரு கம்பீரமான செங்கோல் உண்மையில் ஆகஸ்ட் 1947 இல் நேருவுக்கு வழங்கப்பட்டது. 2. மவுண்ட்பேட்டன், ராஜாஜி & நேரு … Read more

எனது வீட்டில் ஐடி ரெய்டு நடக்கவில்லை.. அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்..!!

தமிழகத்தில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை செய்து வருகின்றனர். குறிப்பாக கரூர், கோவை, சென்னை ஆகிய இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை தலைமைச் செயலகத்தில் டாஸ்மாக் தொடர்பான முக்கிய ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார்.  அப்பொழுது செய்தியாளர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்க முயன்றனர். அதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி … Read more

தீராத காதல்.. மாறாத அன்பு.. மனைவிக்கு சிலை வைத்த 70 வயது முதியவர்.!

மறைந்த மனைவியின் நினைவாக முதியவர் ஒருவர் தனது மனைவியின் சிலை வைத்து நினைவு தினத்தை அனுசரித்த நிகழ்வு நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் நாராயணன் (வயது 70). தொழிலதிபரான இவர் ஈஸ்வரி என்பவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள், இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் மனைவி ஈஸ்வரி கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் காலமானார். தனது பிள்ளைகள் அனைவருக்கும் திருமணம் ஆகிய … Read more

#திடீர்திருப்பம் | பள்ளிகள் திறக்கும் தேதியில் மாற்றம்! நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு!

தமிழகத்தில் வரும் ஜூன் ஒன்றாம் தேதி 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கும், ஜூன் 5-ம் தேதியில் இருந்து ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிகள் திறக்க இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், பள்ளி பேருந்துகள் முறையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பள்ளி மாணவர்களுக்கு வழக்கம் போல் சைக்கிள், லேப்டாப் வழங்கவும், பள்ளி திறக்கப்படும் அன்றே மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. … Read more

தூத்துக்குடியில் சோகம் : மின்சாரம் தாக்கி நடுரோட்டில் கீரை வியாபாரி பலி.!

தூத்துக்குடியில் சோகம் : மின்சாரம் தாக்கி நடுரோட்டில் கீரை வியாபாரி பலி.! தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மடத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயகணேஷ். கீரை வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வரும் இவர் இன்று தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகில் அண்ணா சிலை பக்கத்தில் நின்று கீரை வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது ஜெயகணேஷ் அண்ணா சிலையின் சுற்றுச்சுவர் மீது சாய்ந்தபடி நின்றுள்ளார். அந்த நேரத்தில் சாலையோரம் சென்ற மின்சார வயரில் இருந்து ஜெயகனேஷ் உடலில் மின்சாரம் … Read more

பிரபல சின்னத்திரை இயக்குநர் ஓ.என் ரத்தினத்தின் மனைவி தற்கொலை

பிரபல சின்னத்திரை இயக்குநர் ஓ.என் ரத்தினத்தின் மனைவி தற்கொலை சன் டிவியின் மிகவும் பிரபலமான சீரியல்களான நடிகை ராதிகா சரத்குமார் நடித்த ‘வாணி ராணி’, ‘பாண்டவர் இல்லம்’, ‘பிரியமான தோழி’, ‘செவ்வந்தி’ உள்ளிட்ட  சீரியல்களை இயக்கியவர் ஓ.என். ரத்னம். குடும்ப கதைகளை மையமாக வைத்து ஒளிபரப்பாகும் இவருடைய சீரியல்கள் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும். இயக்குநர் ஓ.என். ரத்னத்தின் மனைவி பிரியா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் தற்போது பள்ளி விடுமுறைக்காக பொள்ளாச்சியில் … Read more