புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு – திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் புறக்கணிப்பு!

புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக திமுக மற்றும் எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. வருகின்ற மே 28 -ஆம் தேதி புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைக்கிறாா். இந்த திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. மேலும், வி.டி.சாவா்க்கரின் பிறந்த தினமான மே 28-ஆம் தேதி அன்று திட்டமிட்டு புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்படுவதாக எதிா்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமா்சித்து வருகின்றன. மேலும், நாடாளுமன்ற கட்டிடத்தை … Read more

#தர்மபுரி || கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து சிறுவன் உட்பட 2 பலி..!

தர்மபுரி மாவட்டத்தில் கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து சிறுவன் உட்பட இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும், ஏற்படுத்தி உள்ளது தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே சி.பள்ளிப்பட்டியில் பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. அப்பொழுது வானவேடிக்கையின்போது பட்டாசு மின்கம்பத்தில் பட்டு, திருவிழாவிற்காக பட்டாசு ஏற்றி வந்த வாகனத்தில் தீப்பொறி விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஆகாஷ் என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளான். மேலும் இந்த விபத்தில் பலத்த … Read more

#BREAKING | ஏரியா சபை நடத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

“ஏரியா சபை” நிகழ்ச்சி நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். 1994-ல் இயற்றப்பட்ட தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் மூலம் அறிமுகமானது கிராம சபை. இதன் அதிகாரம் சட்டமன்றம், நாடாளுமன்றத்துக்கு சற்றுக் குறைந்தது என்றாலும், மக்கள் நேரடியாகப் பங்கேற்கும் சபை இதுவேயாகும்.  மேலும், உள்ளாட்சி அமைப்புகளில் மக்களாட்சி மலர, ஏரியா சபைகள் உருவாக்கப்பட வேண்டியது அவசியம். பல வருடங்களாக நடைபெறாமல் இருந்த ஏரியா சபை கூட்டத்தை நடத்த வேண்டும் என்று அரசியல் காட்சிகள் தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்து … Read more

திமுக பகுதிநேர ஆசிரியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் – திருமாவளவன் பேட்டி.,!

திமுக பகுதிநேர ஆசிரியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் – திருமாவளவன் பேட்டி.,! சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் மற்றும் மே மாதத்திற்கான ஊதியத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் … Read more

நெருக்கடி தரும் திமுகவினர்.. கிராம உதவியாளர் பணியிடம் நிரப்புவதில் இழுபறி.. திண்டாடும் அரசு அதிகாரிகள்.!!

சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட 9 வட்டங்களில் காலியாக உள்ள 57 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்கள் அறிவிப்பாணை வெளியிட்டனர். இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் கடந்த நவம்பர் 7ஆம் தேதி வரை பெறப்பட்ட நிலையில் மொத்தம் உள்ள 57 காலி பணியிடங்களுக்கு 4,048 பேர் விண்ணப்பித்தனர். இதில் 3,033 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்ட நிலையில் பலரின் விண்ணப்பங்கள் காரணம் கூட சொல்லாமல் நிராகரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் … Read more

வாய் சவடால் விட்ட திமுக அட்டை கத்திகளுக்கு பதிலடி இதுதான் – ஷியாம் கிருஷ்ணசாமி விளாசல்! 

அரசு டாஸ்மாக் பாரில் இருவர் உயிரிழந்தது மற்றும் கள்ளச்சாராயத்தால் 23 பேர் உயிரிழந்த சம்பவங்களுக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் பதவி விலக வேண்டும் என எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபாஸ் கல்யாண் மாவட்டம் முழுவதும் அனுமதி இன்றி செயல்பட்டு வரும் டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். அதன்படி காவல்துறையினர் சோதனை மேற்கொண்டதில் திருவள்ளூர் … Read more

தலைநகரம் சென்னையை வாட்டி வதைத்து எடுக்கும் வெயில்.. பொதுமக்கள் தவிப்பு.!

தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது.  இதில், தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு தமிழக பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வெப்ப சலனம் காரணமாக, 27ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி … Read more

#BREAKING || மாவட்டங்களுக்கு புதிய பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்..!! உங்க மாவட்டத்திற்கு எந்த அமைச்சர்..?

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்ட பிறகு பல்வேறு மாவட்டங்களுக்கு புதிய பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி தற்பொழுது பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேருவுக்கு சேலம் மாவட்டமும், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு தேனி மாவட்டமும், பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ வேலுவுக்கு திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களும், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்திற்கு தர்மபுரி மாவட்டமும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று வருவாய்த்துறை அமைச்சர் … Read more

#தமிழகம் | 1000 ஆண்டு கால கோயிலின் உள்ளே புகுந்து சிலைகள் உடைப்பு! அண்ணாமலை கடும் கண்டனம்!

திருப்பூர் : அவிநாசியில் ஆயிரம் ஆண்டு பழமையான சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடல் பெற்ற ஸ்தலமான அவிநாசி லிங்கேஸ்வரர் திருத்தலத்தில் இரவு மர்ம நபர்கள் உள்ளே புகுந்து 63 நாயன்மார்கள் சிலைகளை சேதப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள கண்டன செய்தியில், “நேற்று நள்ளிரவு, திருப்பூர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலுக்குள் சமூக விரோதிகள் புகுந்து, சாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.  திமுக ஆட்சிக்கு வந்தபின், கோவில்கள் தாக்கப்படுவதும், மக்களின் நம்பிக்கைகளைப் புண்படுத்துவதும் … Read more

பள்ளிகள் திறப்பை தள்ளி வையுங்கள் – தமிழக அரசுக்கு டாக்டர் இராமதாஸ் அவசர கோரிக்கை!

வெயில் கொடுமையில் இருந்து மாணவர்களை காக்க தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் ஏற்கெனவே அறிவித்தவாறு ஜுன் 1ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்திருக்கிறார். கோடை வெப்பம் மக்களை வாட்டி வரும் நிலையில், ஜுன் 1ஆம் தேதி அரசுப் பள்ளிகளை திறப்பது மாணவர்களின் நலனுக்கு உகந்ததாக இருக்காது. தமிழ்நாட்டில் அண்மைக்காலங்களில் … Read more