பாஜக நிர்வாகியின் அராஜகம்.. டாக்டர் பட வில்லன் வேதனை..!! ஆக்ஷன் எடுப்பாரா அண்ணாமலை..!!

சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்கிற கராத்தே கார்த்தி என்பவர் திரைப்பட நடிகராக உள்ளார். இவர் சிங்கம் 3, என்னை அறிந்தால், பிகில், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தது மூலம் பிரபலமானவர். இந்நிலையில் தனது வீட்டின் அருகே வசித்து வந்த வெங்கடேசன் என்பவர் சட்டவிரோதமாக 4 கழிவுநீர் இணைப்புகளை பயன்படுத்தி வருவதாக கார்த்தி அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் கழிவு நீர் இணைப்புகளை அரசு அதிகாரிகள் துண்டித்ததாக … Read more

11 வயது பள்ளி மாணவி தொடர்ந்து பலாத்காரம்.! 53 வயது தொழிலாளி சிறையில் அடைப்பு

திருப்பூர் மாவட்டத்தில் 11 வயது பள்ளி மாணவியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் சின்னவாளவாடி பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி மாரிமுத்து(53). இவர் வீட்டில் தனியாக இருந்த 11 வயது பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதை கவனித்த அக்கம் பக்கத்தினர் மாரிமுத்து, மாணவியின் வீட்டுக்கு செல்வதை பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பெற்றோர் மாணவியிடம் விசாரித்துள்ளனர். … Read more

வாட்டி வதைக்கும் வெயில்.. தமிழகத்தில் இன்று 5 இடங்களில் சதமடித்த வெயில்.!

தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது.  இதில், தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு தமிழக பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேனம், … Read more

மதுரை திருவிழாவில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் கேட்கும் உறவினர்கள் – ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு.!!

மதுரை திருவிழாவில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் கேட்கும் உறவினர்கள் – ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு.!! கடந்த 5-ம் தேதி அதிகாலை மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவினை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆறு மற்றும் அதன் கரையோரங்களில் திரண்டிருந்தனர்.  அப்போது, யானைக்கல் பகுதியில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை நீரில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இதேபோல் விளாச்சேரி ஜோசப் நகர் பகுதியை சேர்ந்த பிரேம்குமார் … Read more

#BREAKING || தமிழகம் முழுவதும் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!! தமிழக அரசு அதிரடி உத்தரவு.!!

சமீபத்தில் தமிழகம் முழுவதும் 16 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் 42 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் மீண்டும் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி மாற்றுத்திறனாளிகள் நல மேலாண் இயக்குநராக கமல் கிஷோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவு சங்க பதிவாளராக டாக்டர் சுப்பையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிதித்துறை முதன்மை செயலாளர் உதயச்சந்திரனுக்கு கூடுதலாக தொல்லியல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடிக்கு சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை கூடுதல் பொறுப்பாக … Read more

திண்டுக்கல் : மருத்துவமனை கழிவரையில் இறந்து கிடந்த ஆண் குழந்தை.! தீவிர விசாரணையில் போலீசார்.!!

திண்டுக்கல் : மருத்துவமனை கழிவரையில் இறந்து கிடந்த ஆண் குழந்தை.! தீவிர விசாரணையில் போலீசார்.!! திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் மகப்பேறு வசதியும் உள்ளது. இந்த மருத்துவக் கல்லூரியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் தங்கி சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில் இன்று மருத்துவமனையின் கழிவறையில் ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளது.  இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தூய்மைப் பணியாளர்கள் மருத்துவமனை கன்காணிப்பாளருக்கு தகவல் அளித்தனர். உடனே அவர்கள், சம்பவம் குறித்து … Read more

அரசு கலை & அறிவியல் கல்லூரியில் சேர விண்ணப்பம் நிறைவு.. 2.44 லட்சம் பேர் விண்ணப்பம்.!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாணவர்கள் கலை மற்றும் அறிவியல், பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட பட்டப் படிப்புகளை தேர்வு செய்து படிக்கின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு கடந்த மே 8ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார். அதன்படி, மே 8ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை  விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில்  www.tngasa.in … Read more

கேரளாவில் இருந்து லாரியில் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்ட கழிவுகள் – 2 பேர் கைது.!!

கேரளாவில் இருந்து லாரியில் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்ட கழிவுகள் – 2 பேர் கைது.!! தென்காசி மாவட்டத்தில் புளியரை பகுதியில் அமைந்துள்ள சோதனைச் சாவடி வழியாக கேரளத்தில் இருந்து ஏராளமான லாரிகள் தமிழகத்திற்கு வருகின்றனர். இந்த லாரிகள் தமிழகத்தில் இருந்து காய்கறி, இறைச்சி உள்ளிட்டவற்றை கேரளத்திற்கு கொண்டு செல்கின்றது.  அப்படி செல்லும் இந்த லாரிகள், திரும்பி வரும்போது சில ஓட்டுனர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றி வருகின்றனர். இதைத் தடுக்கும் வகையில் காவல்துறையினரும் கடும் நடவடிக்கை எடுத்து … Read more

கொலை மிரட்டல்! எடப்பாடி காவல் நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி மீது பரபரப்பு புகார்!

சேலம் மாவட்டம், எடப்பாடியில் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பும் போது ஓபிஎஸ் ஆதரவாளர் வா புகழேந்தி அவர்கள் காரை இடைமறித்து தாக்கி தகாத வார்த்தைகளை பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட கழக செயலாளர் பி ஏ ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகளை மிரட்டி கொலை மிரட்டல் விடுத்து கலவரம் ஏற்படுத்தியது தகாத வார்த்தைகளால் திட்டியது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் முருகன் … Read more

₹2,000 நோட்டுகளை வாங்க தடையும் இல்லை..! போக்குவரத்து துறை விளக்கம்..!!

மத்திய அரசு நாளை முதல் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலிருந்து திரும்ப பெறப்படுவதாக அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வங்கிகளில் கொடுத்து 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் அரசு பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டாம் என நடத்துனர்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக திருநெல்வேலி மண்டலத்திற்குட்பட்ட மத்திய அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் “ஒரு … Read more