கை, கால்களை கட்டி "மகனை" கொடூரமாக கொன்ற "தந்தை"…! மதுரையில் அதிர்ச்சி…!

மதுரை மாவட்டத்தில் மது போதைக்கு அடிமையான மகனின் கை, கால்களை கட்டி கிணற்றில் தள்ளிவிட்டு தந்தை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம் கொட்டக்குடி பகுதியை சேர்ந்தவர் விவசாயி பெருமாள். இவருடைய மகன் ராஜபிரபு (30), மது போதைக்கு அடிமையானவர். இதனால் குடும்பத்தில் தினமும் பிரச்சனைகள் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் மனதளவில் மகனால் பெரிதும் பாதிப்படைந்த பெருமாள், இப்படி ஒரு மகன் இருப்பதைவிட கொன்று விடுவது நல்லது என்று முடிவு செய்துள்ளார். … Read more

சம்பவம் செய்த அதிமுகவினர்! திணறிய போலீஸ்! ஸ்தம்பித்து போன சென்னை! ஆளுநரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி! 

தமிழகத்தில் கள்ளச்சாராயம், விஷ சாராயம், 24 மணி நேர டாஸ்மாக் சாராய விற்பனை, சட்ட ஒழுங்கு பிரச்சனை உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து, தமிழக ஆளுநரிடம் புகார் அளிக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பேரணியாக ஆளுநர் மாளிகை நோக்கி சென்றுள்ளார். சுமார் 8000 பேர் இந்த பேரணையில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், அதனையும் மீறி சுமார் 20,000 பேர் இந்த பேரணியில் கலந்து கொண்டது தமிழக போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரதான … Read more

இதுல எதுடா உண்மை! வடிவேல் கதையாக தமிழக அமைச்சர்களின் பேச்சு., ஆதாரத்துடன் கேள்வி கேட்கும் அன்புமணி இராமதாஸ்!

தமிழகம் மின்மிகை மாநிலம் என அமைச்சரே கூறும் நிலையில், என்.எல்.சிக்காக ஏழைகள் நிலங்களை பறிக்க அரசு துடிப்பது ஏன்? என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாடு தேவைக்கும் கூடுதலாக உள்ள மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கு விற்பனை செய்யும் அளவுக்கு மின்மிகை மாநிலமாக மாறியிருப்பதாகவும், கடந்த 19-ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஒரு நாளில் மட்டும் 26 லட்சம் யூனிட் மின்சாரம் ஒரு யூனிட் ரூ.9.76 என்ற விலைக்கு … Read more

பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலப்பா? – கோவையில் பீதியை கிளப்பிய நபர்!

பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலப்பா? – பீதியில் உறையும் மக்கள்.!! குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை அனைவருக்கும் பிடித்தமான உணவாக பிரியாணி உள்ளது. அதனால், விஷேச வீடுகளில் விருந்துகளில் பிரியாணி முக்கியமானதாக உள்ளது. இந்த நிலையில், கோயம்புத்தூரில் பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலக்கப்பட்டுள்ளது என்று செய்தி வெளியாகி பிரியாணி பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக கோயம்புத்தூரில் சமூக வலை தளங்களில் மோதலை உருவாக்கும் செயல்களில் ஈடுபடுபவர் மீது காவல் துறை கடும் நடவடிக்கை எடுத்து … Read more

திருவண்ணாமலை || நண்பரை கட்டி வைத்து… இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை… 3 பேர் கைது..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆண் நண்பரை கட்டி வைத்துவிட்டு இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் விஜய மாநகரம் பகுதியை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவர் திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் தனியார் விடுதியில் தங்கி ஷூ தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வேலை முடிந்து ஆண் நண்பர் ஒருவருடன் இளம்பெண் மோட்டார் சைக்கிளில் விடுதிக்கு வந்து கொண்டிருந்தார். அப்பொழுது நமண்டி ஏரிக்கரை அருகே வந்த போது, … Read more

#விருதுநகர் | மின்னல் தாக்கி 2 வாலிபர்கள் பலி.! ஆடு மேய்க்க சென்றபோது பரிதாபம்..!

விருதுநகர் மாவட்டத்தில் ஆடு மேய்க்க சென்ற 2 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் புல்லநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (28). இவரும், அதே பகுதியை சேர்ந்த விஜய் (27) என்பவரும் வழக்கம்போல் காட்டுப்பகுதிக்கு ஆடு மேய்க்க சென்றனர். அப்பொழுது திடீரென பலத்த மழை பெய்துள்ளது. இதில் மின்னல் தாக்கி இருவரும் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து ஆடுகள் மட்டும் வீட்டிற்கு வந்ததால், உறவினர்கள் இவர்கள் இரண்டு பேரையும் தேடிச் சென்றுள்ளனர். … Read more

தஞ்சையை உலுக்கிய சம்பவம்.. சட்டவிரோத மதுபானம் விற்ற பாருக்கு சீல்..!! வருவாய் துறை அதிரடி..!!

தஞ்சாவூர் மாவட்டம் கீழவாசல் படைவெட்டு அம்மன் கோயில் தெருவை சேர்ந்த குப்புசாமியும், அதே பகுதியை சேர்ந்த விவேக் என்பவரும் தஞ்சை மீன் மார்க்கெட்டில் மீன் வெட்டும் தொழிலை செய்து வந்துள்ள நிலையில் இன்று காலை கீழஆலங்கம் பகுதியில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் கடைக்கு சொந்தமான பாரில் சட்டவிரோதமாக மதுபானம் வாங்கி குடித்துள்ளனர்.  மதுபானம் குடித்து சில வினாடிகளில் இருவருக்கும் நுரை தள்ளி வலிப்பு ஏற்பட்டதால் இருவரும் பொது மக்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குப்புசாமியை பரிசோதித்த … Read more

தமிழில் பேசு… தங்கக்காசு  போட்டி : தமிழ் மாணவன் 'தமிழன்' வெற்றி! பரிசளித்து வாழ்த்திய மருத்துவர் இராமதாஸ்!

தமிழறிஞர்கள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ்ப்புலவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்காக  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அரசியல் பயிலரங்கத்தில் ‘‘ தமிழில் பேசு… தங்கக் காசு’’ என்ற தலைப்பில் போட்டிமன்றம் நடைபெறும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் அறிவித்திருந்தார்கள். அதன்படியான  முதல் போட்டி  தைலாபுரம் தோட்டத்தில்  இன்று (மே 21 ஞாயிற்றுக்கிழமை)  காலை 11 மணிக்கு நடைபெற்றது. ‘‘ தமிழில் பேசு… தங்கக் காசு’’ போட்டியில் பங்கேற்க மொத்தம் 17 … Read more

தஞ்சை | டாஸ்மாக் பாரில் மதுகுடித்த இருவர் பலி – டாஸ்மாக் கடைக்கும் சீல்!

தஞ்சாவூர் மாவட்டம், கீழ அலங்கம் பகுதியில் டாஸ்மாக் கடைக்கு எதிரே உள்ள டாஸ்மாக் பாரில் மது வாங்கி குடித்த இருவர் உயிரிழந்தனர்.  இன்று காலை டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்னரே, அருகில் இருந்த டாஸ்மாக் பாரில் சட்டவிரோதமாக மது விற்பனை நடந்த உள்ளது. அங்கு சென்ற விவேக் (36) மற்றும் குப்புசாமி என்ற முதியவர் இருவரும் மது வாங்கி குடித்து உள்ளனர். சிறிது நேரத்தில் இருவருக்கும் உடல் நலக்குறைவு ஏற்படவே, முதியவர் சம்பவ இடத்திலேயும், இளைஞர் மருத்துவமனையிலும் … Read more

டாஸ்மாக் மது அருந்துபவர்களின் ஆதார் எண் இணைக்க வேண்டும்.. வானதி சீனிவாசன் யோசனை.!!

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும் பாஜக மகளிர் அணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் டாஸ்மாக்கில் மது குடிப்பவர்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது “தமிழகத்தில் கள்ளச்சாராய மரணங்கள் ஏற்பட ஆரம்பித்துள்ளது.  தமிழகத்தில் மதுவிலக்கு ஏன் அமல்படுத்தவில்லை என்ற கேள்விக்கு அரசாங்கம் சொல்லும் ஒரே பதில் கள்ளச்சாராயம். ஆனால் கள்ளச்சாராய சாவு நடைபெறுகிறது. இதற்கு தமிழக அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். கள்ளச்சாராயம் விவகாரத்தில் … Read more