கோவை : மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி உயிரிழப்பு.!!

கோவை : மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி உயிரிழப்பு.!! கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் அடுத்த காரமடைப் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன். இவருடைய மனைவி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதால் தனது மகள்களுடன் வசித்து வந்தார். காய்கறி சந்தையில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வரும் இவர் நேற்று இரவு வழக்கம் போல் வேலை முடித்து வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர், வீட்டை சுத்தம் செய்துள்ளார். அப்போது அவர் ஈரமான கையுடன் டிவி செட்டாப் பாக்ஸைத் துடைக்க முயன்றுள்ளார். அதிலிருந்து திடீரென … Read more

தருமபுரி : திருமணம் செய்துகொள்வதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய அரசு ஊழியர் கைது.!!

தருமபுரி : திருமணம் செய்துகொள்வதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய அரசு ஊழியர் கைது.!! தருமபுரி மாவட்டத்தில் உள்ள மொரப்பூர் அருகே அண்ணா நகரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அரசு பணிக்காக போட்டி தேர்வு எழுதிவிட்டு அதன் முடிவுகளுக்காக காத்திருந்தார். இந்த நிலையைக், இந்தப் பெண்ணுக்கு அதேபகுதியைச் சேர்ந்த தனசீலன் மகன் பிரபாகரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதைத் தொடர்ந்து இருவரும் பல இடங்களில் காதலர்களாக சுற்றி வந்துள்ளனர். இதனைத் தனக்கு சாதகமாகப் … Read more

திருவள்ளூர் || அரசு பேருந்து மோதி தொழிலதிபர் பலி – ஆத்திரத்தில் பேருந்தை சூறையாடிய உறவினர்கள்.!

அரசு பேருந்து மோதி தொழிலதிபர் பலி – ஆத்திரத்தில் பேருந்தை சூறையாடிய உறவினர்கள்.! திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சோழவரம் அடுத்த விஜயநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் இன்று பிற்பகல் இருசக்கர வாகனத்தில் நல்லூர் சுங்கச்சாவடி அருகே வந்து கொண்டிருந்தார்.  அப்போது ஆந்திரா மாநிலத்திலிருந்து சென்னை நோக்கி வந்த அரசுப் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கண்ணனின் … Read more

சுட்டெரிக்கும் வெயில் வெயில்.. தமிழகத்தில் 9 இடங்களில் சதமடித்த வெயில்.!

தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது.  இதில், தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு தமிழக பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், … Read more

முன் விரோதத்தால் இளைஞர் தலையில் கல்லைப்போட்டு கொன்ற கொடூர சம்பவம்.!

முன் விரோதத்தால் இளைஞர் தலையில் கல்லைப்போட்டு கொன்ற கொடூர சம்பவம்.! சென்னையில் உள்ள அயனாவரம் பகுதியில், குட்டியப்பன் தெருவைச் சேர்ந்தவர் கருணா. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் துக்க நிகழ்ச்சி ஒன்றில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தத் தகராறில் யோனா என்ற இளைஞர் காயமடைந்தார்.  உடனே அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் கருணா உட்பட அவரது நண்பர்கள் 6 பேர் மீது வழக்கு … Read more

இனி ஆன்லைனில் மட்டுமே வரி வசூல்.. மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு அதிரடி உத்தரவு..!!

கணினி மயமாகும் கிராம ஊராட்சிகளில் நாளை முதல் ஆன்லைன் மூலமாக மட்டுமே கட்டணங்கள் பெறப்படும் என தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. கிராம ஊராட்சிகளில் பொதுமக்கள் செலுத்தும் வரி அனைத்தும் நாளை முதல் ஆன்லைன் மூலமாக பெறப்பட வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்தினுடைய ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இந்த இதன் மூலம் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் ஆன்லைன் … Read more

3 நாள் கெடு! 500 டாஸ்மாக் கடை இருக்க கூடாது! தமிழக அரசுக்கு அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகள் மூடல் அறிவிப்போடு போனதா? என்ற கேள்வியை தமிழக அரசை நோக்கி பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எழுப்பியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 5329  மதுக்கடைகளில் 500 கடைகள்  மூடப்படும் என்று கடந்த ஏப்ரல் 12-ஆம் நாள்  தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்  அறிவித்தார்.  அதன்பின்  இன்றுடன் 40 நாட்கள் ஆகும் நிலையில், இன்று வரை 500 மதுக்கடைகளை  மூடுவதற்கான அறிகுறிகள் கூட … Read more

ஒரு வருடமாக ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை.!

இந்தியாவில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப மாதம் இருமுறை விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. இம்முறை மாற்றி அமைக்கப்பட்டு, தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறையை மத்திய அரசு அமல்படுத்தியது.  இதில், விலையை நிர்ணயம் செய்யும் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்ததால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் … Read more

மாத்தி மாத்தி பேசுறீங்க.. ஒரு முடிவுக்கு வாங்கப்பா.. TASMAC நிர்வாகத்தின் அறிவிப்பால் குழம்பும்..!!

நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்கு மேல் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்ப பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் வருமே 23ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து கணக்கில் வர வைத்துக் கொள்ளலாம் அல்லது வேறு நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம். நாளொன்றுக்கு இருபதாயிரம் ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் வங்கியில் மாற்றலாம் எனவும், அவ்வாறு … Read more

கழிவு நீர் வசதி | திமுக பெண் கவுன்சிலரை "தட்டி" கேட்ட 3 பேர் மீது வழக்கு!

திண்டுக்கல் : கழிவு நீர் வசதி, சாலை வசதி செய்து தராத திமுக பெண் கவுன்சிலரை தாக்கிய மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் 6-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருப்பபவர் சத்யா (வயது 40). சம்பவம் நடந்த அன்று, தனது சொந்த ஊரான பொம்மணம்பட்டியின் ஒரு தெருவில் சாலை அமைக்க நடைபெற்ற சர்வே பணியை காண  கவுன்சிலர் சத்யா சென்றுள்ளார். அப்போது கவுன்சிலர் சத்யாவிடம் அந்த தெருவைச் … Read more