தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெப்பம் வாட்டி வதைக்கும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கத்திரி வெயில் காரணமாக பல்வேறு இடங்களில் வெப்பநிலை அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் நேற்று 12 இடங்களில் 100 டிகிரி தாண்டி வெயில் கொளுத்தியது. இந்நிலையில் இன்றும், நாளையும் தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை மற்றும் புறநகர் … Read more

இராமநாதபுரம் – ஆளுநரிடம் பாராட்டுப்பெற்ற பிரபல யோகா மாஸ்டர் விபத்தில் பலி.!

இராமநாதபுரம் – ஆளுநரிடம் பாராட்டுப்பெற்ற பிரபல யோகா மாஸ்டர் விபத்தில் பலி.! இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவிபட்டினம் படையாச்சி தெருவை சேர்ந்தவர் அரிஸ்டாட்டில். யோகா மாஸ்டராக உள்ள இவர் மாணவர்களுக்கு யோக பயிற்சியினை அளித்து வருகிறார். இந்நிலையில் அரிஸ்டாட்டிலும், அவரது யோகா மாணவன் வெற்றிவேலும் கீழக்கரையில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.அப்போது அவர்களின் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி எதிரே நின்று கொண்டிருந்த லாரியின் மீது மோதியது. இந்த விபத்தில் யோக … Read more

நெல்லை அருகே லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து.! தாய்-மகன் பலி, சிறுமி உட்பட 2 பேர் காயம்..!

திருநெல்வேலி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் தாய்-மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூரு அல்சூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (40). இவர் தனது தாய் பிரேமாதேவி (60), மனைவி சசிகலா (34), மகள் தனுஸ்ரீ (5) ஆகியோருடன் கேரளாவில் நடந்த கோவில் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். பின்பு அங்கிருந்து மீண்டும் பெங்களூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது நேற்று மதியம் நெல்லை அருகே சென்று … Read more

மத்திய அரசின் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.!

தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்கள் பாடத்திட்டத்துடன் சேர்ந்து தொழில்நுட்ப பயிற்சி அளித்து அவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் போட்டி தேர்வு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டித் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப மத்திய அரசு போட்டி தேர்வுகள், வங்கி தேர்வுகள் மற்றும் குடிமை பணிகள் போட்டித் தேர்வுகளுக்கு இலவசமாக தமிழக அரசு சிறந்த பயிற்சி … Read more

வேலை வாங்கித் தருவதாக 15 லட்சம் பண மோசடி – 3 பேர் மீது வழக்கு பதிவு.!!

வேலை வாங்கித் தருவதாக 15 லட்சம் பண மோசடி – 3 பேர் மீது வழக்கு பதிவு.!! விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெள்ளைக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரகுராம். சிவில் இஞ்சினியரான இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்.இவருடைய மாமியார் உத்திரகுமாரியும், அருப்புக்கோட்டை நகராட்சியில் ஊழியராக பணியாற்றும் லட்சுமி தேவியும் தோழிகள்.  இந்த நிலையில் லட்சுமி தேவி,  ரகுராமிற்கு தலைமைச் செயலகத்தில் வேலை இருப்பதாகவும், அதற்கு பணம் கொடுத்தால் போதும் என்றும் உத்திரகுமாரியிடம் தெரிவித்தார். மேலும், உத்திரகுமாரிக்கு திருநெல்வேலியைச் சேர்ந்த … Read more

“சாதிய மோதல்களுக்கு ஜல்லிக்கட்டு காரணமாகும் ஆபத்து” – எச்சரிக்கும் திருமாவளவன்!

ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது சாதி அடிப்படையில் வன்முறைகள் நிகழும் போக்குகளை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான மைதானங்கள், சாதிய மோதல்களுக்கான களங்களாக மாறிவிடக் கூடிய ஆபத்து இருப்பதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர்  திருமாவளவன் எச்சரித்துள்ளார். இது குறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு இயற்றிய ஜல்லிக்கட்டு சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றத்தின் ஐந்து பேர் கொண்ட அமர்வு தீர்ப்பளித்திருப்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்.  விலங்குகள் உரிமை என்ற … Read more

கரூர் : பணி நேரத்தில் புது புடவையை பார்த்துக்கொண்டிருந்த மாநகராட்சி பெண் ஊழியர்கள் – வைரலாகும் வீடியோ.!!

கரூர் : பணி நேரத்தில் புது புடவையை பார்த்துக்கொண்டிருந்த மாநகராட்சி பெண் ஊழியர்கள் – வைரலாகும் வீடியோ.!! தமிழகத்தில் உள்ள மற்ற மாநகராட்சிகளை போலவே கரூர் மாநகராட்சியிலும் சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி, பாதாள சாக்கடை வரி உள்ளிட்ட வரிகள் காட்டாமல் நிலுவையில் உள்ளது. இந்த வரிகளைக் கட்டச் சொல்லி ஆட்டோக்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து இந்த வரியை வசூல் செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், மாநகராட்சியில் முன் கூட்டியே வரி செலுத்துபவர்களுக்கு 5% வரி … Read more

அல்லாவும் – ஐய்யனாரும் ஒன்னு, "மார்க்கம் மாறி இருக்கு, மண்ணு மாறல" தெறிக்கவிடும் வசனங்கள்!

நடிகர் ஆர்யாவின் நடிப்பில், இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். ட்ரம் ஸ்டிக் புரொடக்ஷன் மற்றும் ஜி ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது.  இந்த படத்தின் டீசர் கடந்த மார்ச் 31ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இன்று படத்தில் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது. youtubeembedcode pl låna 3000 இந்த ட்ரைலர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் மத அடிப்படைவாதிகளுக்கு பாடம் … Read more

10,11,12 தேர்வு முடிவுகள்! வட மாவட்டங்கள் ஏன் பின்னடைவு? வெள்ளை அறிக்கை கோரும் பாமக தலைவர்!

11-ஆம் வகுப்பு பொதுத்தேர்விலும் வட மாவட்டங்களே கடைசி இடம் பிடித்திருப்பதறகான காரணங்களை அலசி ஆராய்ந்து  தீர்வு காண இனியும் தவறக் கூடாது என்று, தமிழக அரசுக்கு பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்த அவரின் அறிக்கையில். “தமிழ்நாட்டில் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.93 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  அதே நேரத்தில் தேர்ச்சி விழுக்காட்டின் அடிப்படையில்  வழக்கம் போல வடமாவட்டங்களே … Read more

புலித்தோல், யானைத்தந்தம் விற்பனை செய்ய முயன்றதாக 5 பேர் கைது – அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்.!!

புலித்தோல், யானைத்தந்தம் விற்பனை செய்ய முயன்றதாக 5 பேர் கைது – அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்.!! திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமி, அன்பில், துரைசாமி, ஆனந்தபிரகாஷ், அன்பரசன், மணிகண்டன் உள்ளிட்டோர் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், ‘’நாங்கள் சட்டவிரோதமாக புலித்தோல், யானை தந்தம், மான் கொம்பு, நரி வால் உள்ளிட்டவை வைத்திருந்ததாக திருச்சி மாவட்ட … Read more