50 வருடமா என்ன பண்ணீங்க? தமிழக அரசிடம் வெள்ளை அறிக்கை கோரும் டாக்டர் இராமதாஸ்! 

பத்தாம் வகுப்புத் தேர்விலும் வட தமிழக மாவட்டங்கள் கடைசி இடம் பெற்றதற்கான காரணங்கள் தொடர்பாக தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்த அவரின் அறிக்கையில், “தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. கடந்த ஆண்டை விட சற்றுக் கூடுதலாக இந்த ஆண்டில் 91.39 விழுக்காடு மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு எனது வாழ்த்துகளையும், … Read more

சுட்டெரிக்கும் கோடை வெயில் | தமிழக மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் விடுத்த முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளவும், மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ளவும்,  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சில அறிவுரைகளையும், எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் அதிகரித்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் 19.5.2023 நாளிட்ட அறிவிக்கையில், தமிழ்நாட்டில் இயல்பு நிலையை விட 2 முதல் 3 டிகிரி கூடுதல் வெப்பம் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக வேலூர் பகுதியில் 41.8 … Read more

11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு.. 9 மாணவர்கள் தமிழ் பாடத்தில் சதம்.!

தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கான 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.  இதில் தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 7.70 லட்சம் மாணவ-மாணவிகளும் எழுதினர். இதில்11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 90.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் 0.86 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், தேர்வு எழுதிய 7,76,844 பேரில் 7,06,413 பேர் … Read more

பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர நாளை முதல் விண்ணப்பம் – அமைச்சர் பொன்முடி அறிவிப்பு.!

பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிந்ததும் மாணவர்கள் மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.  அந்த வகையில் தமிழகத்தில் பொறியியல் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நிலையில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என … Read more

#திருவள்ளூர் || இன்ஜினியரிங் கல்லூரி விடுதியில் மாணவி திடீர் தற்கொலை.. போலீசார் விசாரணை…!

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்ஜினியரிங் கல்லூரி விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஸ்ரீகாளிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது மகள் ஜெயா(19) செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு ஜெயாவுடன் விடுதி அறையில் தங்கி இருந்த சகமாணவிகள் படிப்பதற்காக சென்றுள்ளனர். அப்பொழுது அறையில் தனியாக இருந்த ஜெயா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து … Read more

திருமணமான இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு… உறவினர் கைது…!

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருமணமான இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உறவினரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் தூசி அருகே பில்லாந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் 22 வயதுடைய இளம் பெண். இவருக்கும் திருமணம் ஆகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் இளம்பெண் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது அவரது உறவினரான மோரணம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் இளம் பெண்ணிடம் ஆபாச வீடியோக்களை காட்டி ஆசைக்கு இணங்குமாறு அழைத்து தகாத முறையில் நடந்துள்ளார். … Read more

மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் கூடுதல் ஆசிரியர்களுக்கு ஊதியத்துடன் பணி நீட்டிப்பு – பள்ளிக்கல்வித்துறை.!!

மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் கூடுதல் ஆசிரியர்களுக்கு ஊதியத்துடன் பணி நீட்டிப்பு – பள்ளிக்கல்வித்துறை.!! தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி அரசுப் பள்ளிகளில் மாணவா்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கூடுதல் பணியிடம் தேவையுள்ள பள்ளிகளுக்கு மட்டும் இயக்குநரின் பொதுத் தொகுப்பிலிருந்து மூவாயிரம் உபரி பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டனா். ஆனால், கடந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரித்ததால் கூடுதலாக நியமிக்கப்பட்ட ஆசிரியா்களுக்கு மேலும் ஓராண்டுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், … Read more

தேர்தல் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி.!

தேர்தல் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி.! சென்னை அசோக் நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் சந்தித்து பேசினார். அப்போது, “கர்நாடக முதலமைச்சராக தேர்வாகியுள்ள சித்தராமையாவுக்கு என்னுடைய வாழ்த்துகள்.  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் கூட்டணியில் எந்தவிதமான குழப்பமும் இல்லை. அதிமுக பாஜகவுடன் பயணம் செய்தால் அதிமுகவிற்கு பயன் கிடையாது. எதிர்காலத்தில் பாஜகவால் அதிமுக பலவீனப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.  பாஜக தில்லு முல்லு செய்து தமிழகத்தில் ஆட்சியை … Read more

தமிழகத்தில் அரசு கலை & அறிவியல் கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாணவர்கள் கலை மற்றும் அறிவியல், பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட பட்டப் படிப்புகளை தேர்வு செய்து படிக்கின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு கடந்த மே 8ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார். அதன்படி, மே 8ம் தேதி முதல் இன்று வரை  விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில்  www.tngasa.in என்ற இணையதளத்தில் … Read more

மே 21ம் தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சென்னை வருகை.. காரணம் என்ன.?

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு மே 21ஆம் தேதி ராகுல் காந்தி சென்னை வருகிறார். கடந்த 1991 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்னை ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மே 21 ஆம் தேதி வருகை தந்தார். அப்போது அங்கு நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.  இதனையடுத்து ராஜீவ் காந்தியின் நினைவை போற்றும் வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நினைவு மண்டபம் … Read more