ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி.? உயர் நீதிமன்ற கிளை உத்தரவு.!

ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரி வந்தால் கிராம மக்களை அலைவிடக்கூடாது என உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. கோவில் திருவிழாக்களில் கரகாட்டம் மற்றும் ஆடல், பாடல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு சில குறிப்பிட்ட நேரம் மற்றும் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த காவல்துறையினரிடம் உரிய அனுமதியும் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு கிராம மக்கள் சார்பாக அனுமதி கோரினால் தாமதிக்காமல் … Read more

பாமகவினரை சோகத்தில் ஆழ்த்திய விபத்து! டாக்டர் இராமதாஸ் இரங்கல்!

கடலூர் : கட்சி கொடிக் கம்பத்தை புதுப்பித்து நடும் போது மின்சாரம் பாய்ந்து, பாட்டாளி மக்கள் கட்சியின் கிளைச் செயலாளர் சந்தோஷ்குமார் உயிரிழந்தார்.  பா.ம.க. செயல்வீரர் சந்தோஷ்குமார் மறைவுக்கு பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரின் அந்த இரங்கல் செய்தியில், “கடலூர் மாவட்டம் திருவந்திபுரத்தையடுத்த கே.என்.பேட்டையில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடிக் கம்பத்தை புதுப்பித்து நடும் போது மின்சாரம் பாய்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் கிளைச் செயலாளர் சந்தோஷ்குமார், உயிரிழந்தது மிகுந்த வேதனையளிக்கிறது. அவரை … Read more

சமூக விரோதிகள் இடத்தை மாற்றிக் கொள்வார்களே தவிர தொழிலை மாற்ற மாட்டார்கள் – இபிஎஸ்-க்கு அமைச்சர் விளக்கம்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்ன செய்தார்? என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் கேள்வி எழுப்பியுள்ளார். சமூக விரோதிகள் இடத்தை மாற்றிக் கொள்வார்களே தவிர தொழிலை மாற்ற மாட்டார்கள். கள்ளச்சாராய வழக்கில் தொடர்புடையவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார். இன்று செய்தியாளர்களை சந்தித்த சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில், … Read more

#திருப்பத்தூர் || நீட் தேர்வு முடிவுக்கு பயந்து மாணவர் தற்கொலை..!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நீட் தேர்வு முடிவுக்கு பயந்து மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஜங்களாபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் பரமேஸ்வரன் (17), கடந்த ஏழாம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு எழுதினார். ஆனால் பரமேஸ்வரன் நீட் தேர்வை சரியாக எழுதவில்லை என்பதால் கடந்த நாட்களாக மனம் உடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு பரமேஸ்வரன் நீட் தேர்வு முடிவுக்கு பயந்து … Read more

#ராணிப்பேட்டை || தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி தொழிலாளி பலி..! 3 பேர் பேர் மருத்துவமனையில் அனுமதி

ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலையில் விஷவாயுத்தாக்கி தொழிலாளி உயிரிழந்துள்ளார். மேலும் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டம் சதுப்பேரி பகுதியை சேர்ந்தவர் செந்தமிழ் செல்வன் (31). இவர் ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட்டில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.  இந்நிலையில் நேற்று இரவு செந்தமிழ்ச்செல்வன், ராணிப்பேட்டை மோட்டூர் பகுதியைச் சேர்ந்த ராஜா (47), வாழைப்பந்தலை சேர்ந்த ராமதாஸ் (26), புளியங்கன்னு பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் … Read more

திருச்சி : முன் விரோதத்தால் வாலிபரை பாரில் வைத்து கொலை செய்த கும்பல் – 5 பேர் கைது.!

திருச்சி : முன் விரோதத்தால் வாலிபரை பாரில் வைத்து கொலை செய்த கும்பல் – 5 பேர் கைது.! திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் அருகே எஸ் கள்ளுக்குடி பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் பாபு. இவர் சமயபுரம் கடைவீதியில் மாலை கட்டும் வேலை செய்து வருகிறார். அங்கு இவருக்கும் அதே பகுதியில் உள்ள சிலருக்கும் வெளியூர்களில் இருந்து கோவிலுக்கு வரும் பக்தர்களை அழைத்துச் செல்வதில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் பாபு … Read more

கடலில் குளித்தபோது பரிதாபம்.! ராட்சத அலையில் சிக்கி 3 மாணவர்கள் உயிரிழப்பு.!

திருவெற்றியூர் கடலில் குளித்தபோது அலையில் சிக்கி 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. திருவொற்றியூர் பி.சதானந்தபுரத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மகன் ஹரிஷ் (16) தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவரது அண்ணன் சந்துரு (20), கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் இவர்கள் இரண்டு பேரும் நேற்று மதியம், நண்பரான கல்லூரி மாணவர் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந்த் (19) என்பவருடன் திருவெற்றியூர் கடலில் குளித்துள்ளனர். அப்பொழுது திடீரென வந்த … Read more

மாணவர்கள் கவனத்திற்கு..‌12ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.!

12ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு தேர்வாளர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். தமிழகத்தில் கடந்த 8ம்தேதி 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இந்த தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், வருகின்ற ஜூன் 19ஆம் தேதி துணைத்தேர்வு எழுதி, தங்களுடைய மேற்படிப்பை தொடர தமிழ் தமிழக அரசு வாய்ப்பு வழங்கியுள்ளது. அந்த வகையில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவில் 47,934 பேர் ஒரு பாடங்களில் தேர்ச்சி பெறாமல் தோல்வியடைந்துள்ளனர். ஒரு சில பேர் … Read more

தமிழக அரசின் 32 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!! மொத்த லிஸ்ட் இதோ.!!

தமிழ்நாடு முழுவதும் 16 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்த 32 ஐஏஎஸ் அதிகாரிகளும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  அதன்படி, 1) கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் செயலாளராக ராஷ்மீர் சித்தார்த் ஸகடே  2) சென்னை பெருநகர் வளர்ச்சி குழும தலைமை செயல் அதிகாரியாக கவிதா ராமு 3) தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களின் சிறப்பு பணி அதிகாரி சிவனருள் 4) மாநில வணிகவரித்துறை … Read more

கள்ளச்சாராய மரண வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் –  டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவுப்படி, கள்ளச்சாராய மரண வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்து தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எக்கியார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விஷச்சாராயம் அருந்தி (13.05.2023 முதல் 15.05.2023) வரை 13 நபர்கள் இறந்துபோன சம்பவம் தொடர்பாக மரக்காணம் காவல் நிலைய குற்ற எண் 225/2023, சட்டப்பிரிவுகள் 120 (b), 328, 304(i) IPC r/w 7, 4(1)(i)4(1)(A)(i) TNP Act … Read more